ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 4

ஏழு குன்றுகளின் மேல் கட்டப்பட்டிருக்கிற ஒரு நகரத்திலிருந்து ஏழாவதாய்
ஒரு வல்லரசு எழும்ப வேண்டும்.

யார்அந்த ஏழாவது வல்லரசு?

இந்த வல்லரசு எழும்பிவிட்டதா?

அதற்கும் இயேசு கிறிஸ்துவினுடைய எடுத்துக் கொள்ளல் வருகைக்கும் சம்பந்தமென்ன?

எந்த நகரம் ஏழு குன்றுகளின் மேல் கட்டப்பட்டிருக்கிறது?

ரோம் நகரம் ஏழு குன்றுகளின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. கடந்த 1957ம்
வருடம் மார்ச் மாதம் 25ம் திகதி சில ஐரோப்பிய நாடுகள் இந்த நகரத்திலே
ஒன்று கூடி ஒரு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு இருக்கின்றன அந்த ஒப்பந்தம்
TREATY OF ROME (ரோம ஒப்பந்தம்) என்று அழைக்கப்படுகிறது.

ஏழு குன்றுகள் எள்ள ஒரு நகரத்திலிருந்து கடைசி வல்லரசு ஒன்று எழும்ப
வேண்டுமென்ற தீர்க்கதரிசன ஆராய்ச்சி யாளர்களின் கணக்குப் படி ஆறு
ஐரோப்பிய நாடுகள் ஒன்றுசேர்ந்து கையெழுத்திட இந்த ஒப்பந்தம் உருவாகிறது.

இந்த ஒப்பந்தத்தினின்று உருவாகியிருக்கிற ஸ்தாபனம் ஐரோப்பிய பொதுச் சந்தை
என்று அழைக்கப்படுகிறது.

இதிலே இப்பொழுது பத்துநாடுகள்

(ITALY,
WEST GERMANY, FRANCE,
BELGIUM,
HOLLAND,
LAXEMBURG,
GREAT BRITAIN, IRELAND,
DENMARK,
GREECE)
அங்கம் வகிக்கின்றன பத்துஐரோப் பிய நாடுகள் அங்கம்
வகிக்கஇந்தஒப்பந்தம்கையெழுத்தாகியிருக்கிறது.ஏதற்காகஇந்தப்பத்துஐரோப்பியநாடுகள்ஒன்றுகூடியிருக்கிறன?

வாணிபத்தை வளர்ப்பதற்காகஒன்றுகூடியிருக்கின்றன.
இதுதான்வேதவசனத்திலேதானியேலினாலும்,யோவான்,
அப்போஸ்தலலினாலும்முன்னறிவிக்கப்பட்ட ஏழாவது வல்லரசு என்பது தீர்க்கதரிசன
ஆராய்ச்சியாளர்களின்கணிப்பாகும்.

இது வாணிபத்துக்காக எழுந்ததுதானே இது எப்படி ஒரு வல்லரசாகலாம் என்றொரு
கேள்வி சிலருக்கு எழலாம்.

இந்தக் கூட்டாச்சி கையெழுத்திடப்பட்ட போது நான்கு தீர்மானங்கள் இவர்களால் நிறை
வேற்றப்பட்டன,

முதலாவது தீர்மானம் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள்என்ற அமைப்பை ஏற்படுத்துவது,

இரண்டாவது தீர்மானம் பொதுவான பாஸ்போட்டை பத்து நாடுகளுக்கும் கொண்டுவருவது,

மூன்றாவது தீர்மானம் பத்து நாடுகளுக்கும் பொது நாணயத்தைக் கொண்டு
வரவேண்டும் என்பது,

நாலாவது தீர்மானம் பொது இராணுவத்தைக் கொண்டு வரவேண்டும் என்ப.தே.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சமயத்திலே இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானங்கள் நிறைவேறிவிட்டனவா?

பத்துநாடுகளுக்கும் தனித் தனியாய் பாராளுமன்றங்கள், ஜனாதிபதிகள்,
அரசர்கள் இருக்க இப்பொழுது பத்துநாடுகளும் பொதுவான ஒரு பாராளுமன்றம்
உருவாகிவிட்டது.

410 பேர் கொண்ட ஒரு பொதுப் பாராளுமன்றம் ஐரோப்பிய பொதுச்சந்தையின்
பாராளுமன்றம், பிரான்சில் உள்ள ஸ்ராஸ்பரோவிலே 1979ம் வருடம்
ஜீன்மாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

ஏன் மாதத்தையும், வருடத்தையும் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு வருடத்திலும்,
ஒவ்வொரு மாதத்திலும் பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக் கொண்டேயிருக்
கின்றன என்பதாலேயே.

பத்து நாடுகளுக்கு தனித்தனி ஜனாதிபதிகளும், அரசர்களும் இருக்க
பத்துநாடுகளுக்கு சேர்த்து இப்பொழுது ஒரே யொது ஜனாதிபதியும் இருக்கிறார்
அவர் ஜக்ஸ்ரெலோஸ் என்று அழைக்கப்படுகிறார்.

ஐரோப்பிய பொதுச்சந்தைக்கு இப்பொழுது பல தேசங்களிலும் தூதரகங்கள்
ஏற்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் தலைநகரமாகிய டெல்லியிலே தூதரகம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது,

இப்பொழுது இந்த ஐரோப்பிய பொதுச் சந்தையின் தலைமையகம் பெல்ஜியத்திலுள்ள
பிறஷல்ஸ் (Brushells) இலே வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த தலைமையகக் கட்டிடத்திலிருந்து பத்து நாடுகளின் ஆட்சிமுறையும்
கணக்கிடப்பட்டு வருகிறது.

சமீபத்திலே இந்த ஐரோப்பிய நாடுகள் பொது பாஸ்போட்டையும் வெளியிட்டுவிட்டன.

பொதுவான ஐரோப்பிய பொதுச்சந்தையின் பாஸ்போட் பத்துநாடுகளின்
பிரஜைகளுக்கும் கொடுக்கப்படுகிறது – Common Easy Passport.

அதுமாத்திரமல்ல இவர்களுக்கென்று பொது நாணயமும் பொது Credit Cardம் வந்து விட்டன.

பொதுவாய் இந்த ஐரோப்பிய நாடுகளுக்கு வந்திருக்கிற நாணயம் Ecu என்று
அழைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.