தமிழ் சங்க இலக்கிய
பாடல்களிலும்,
சிலப்பதிகாரத்திலும்
குமரிக்கண்டதினைப்
பற்றியக் குறிப்புகள்
தெளிவாக இருக்கின்றன.
இந்த இடத்தில் இந்த
நிலையில் தான்
குமரிக் கண்டம் இருந்தது
என்று அந்த நூல்கள்
உறுதிப்படக்
கூறுகின்றன .எந்த
இடத்தில் குமரிக்கண்டம்
இருந்தது என்றுக்
கூறுகின்றனவோ அதே
இடத்தில் தான் உயிரினம்
தோன்றி இருக்க
வேண்டும் என்று
அறிவியலும்
கருதுகின்றது.
தமிழர்களின் சில பழக்க
வழக்கங்களும் சமகாலத்தில்
நடந்த சம்பவங்களும்
குமரிக்கண்டம் என்ற
ஒன்று இந்த மண்ணில்
இருந்தது என்னும்
கூற்றுக்கு
ஆதாரங்களாக இருந்துக்
கொண்டு இருக்கின்றன.
குமரிக் கண்டத்தினைப்
பற்றி சிலப்பதிகாரம்
கூறுவது என்ன?
சிலப் .11:17-22
"பஃறுளி
ஆற்றுடன் பன்மலை
அடுக்கத்துக்
குமரிக் கோடும்
கொடுங்கடல் கொள்ள"
அதாவது பல
மலைகளுடன்
குமரிக்கண்டமும்
கடலினுள் சென்றது.
மேலும் இந்தியாவின்
தமிழகத்திலுள்ள குளச்சல்
துறைமுகத்தில்
இருந்து ஆறு
கிலோமீட்டர்
தொலைவில் கடலில் ஒரு
பாறை இருக்கின்றது.
அந்த பாறையினை
அங்கு வாழும் மக்கள்
'ஆடு மேய்ச்சான் பாறை'
என்று அழைக்கின்றனர்.
காரணம் என்னவெனில்
ஒருக் காலம் அந்தப் பாறை
இருந்த இடம் தரையாக
இருந்தது அப்பொழுது
அங்கு சென்று மக்கள்
ஆட்டினை மேய்த்து
இருக்கின்றனர் .
ஆனால்
கடல் அந்த இடத்தினைக்
கொள்ளை கொண்டு
போகவே மக்கள் அவ்விடம்
விட்டு நகர்ந்து வந்து
விட்டனர் .ஆனால் ஆடு
மேய்த்த பாறை என்ற பெயர்
மட்டும் அங்கேயே தங்கி
விட்டது.
இதன் மூலம்
தமிழர்கள் வாழ்ந்து
இருந்த இடம் இன்று
கடலுக்கு அடியினில்
மூழ்கி உள்ளது என்று
நாம் அறிய
முடிகின்றது.
மேலும் பூம்புகார்
என்று பெயர் பெற்ற இந்த
மாபெரும் நகரமும்
கடலினுள் மூழ்கி
விட்டது .பூம்புகார்
நாகரீகம் சிந்து சமவெளி
நாகரீகத்தினை விட
முந்தியது என்பது
அறிஞர்களின் கருத்து.
எனவே கடலில் நகரங்கள்
மறைந்து உள்ளன என்னும்
செய்திகள் பொய்யல்ல
என்பது புலனாகிறது.
இன்னும் பல சங்க
இலக்கியங்கள்
மூலமாகவும், தெற்கு
திசையில் உள்ள
தமிழர்களின் பழக்க
வழக்கங்கள்
வாயிலாகவும், ஒரு
பெரும் நிலப்பரப்பினை
கடல் கொள்ளைக் கொண்டு
போய் உள்ளது என்னும்
செய்தியினை நாம்
அறிந்துக் கொள்ளலாம்.
இந்த உண்மைகள் எல்லாம்
அந்த நிலப்பரப்பினில்
தொல்லியல்
ஆராய்ச்சிகளை
மேற்கொண்டோம் என்றால்
நிச்சயம் புலனாகும்.
ஆனால் இந்திய அரசோ
அத்தகைய ஆராய்ச்சிகளை
மேற்கொள்ளாது
இருக்கின்றது .அத்தகைய
ஆராய்ச்சிகளை மற்றவர்கள்
மேற்கொள்ளவும்
ஆதரிக்காது
இருக்கின்றது.
ஏன்
இந்தியா
ஆராய்ச்சியினை
மேற்கொள்ளாது
இருக்கின்றது?
பாகம் - 4 விரைவில்.....
———————————
Whatsapp@8012978922
————————————
