இயேசுக் கிறிஸ்துவைச் சந்திக்க ஆயத்தப்படுவோமக! பாகம் - 3

இயேசுக்கிறிஸ்து நியாயத்தீர்பிற்காகவரும் பொழுது அரணைக்கும் கரங்களை
நீட்டி அரவணைப்பவராக வரவில்லை மாறாக தண்டிப்பவராக மிகவும்
ஆக்கிரோஷத்துடன்வருவார்.

அப்பொழுது ஜனங்கள்,
Rev 6:16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல்
விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும்,
ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;

Rev 6:17 அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார்
நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

Rev 6:8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்;
அதின்மேல்
ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது.
பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட
மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான
அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.

Rev 6:12 அவர் ஆறாம் முத்திரையை
உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக்
கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று.

Rev 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின்
காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

Rev 6:14 வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள்
தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.

Rev 6:13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின்
காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

Rev 8:8 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற
பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால்
சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.

Rev 8:9 சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு
செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

சபை
உபத்திரபத்தைச்சந்திக்குமா?

வேதாகமத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது சபையானது
உபத்திரபகாலத்திற்குமுன்பு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதை
கண்டு கொள்ளமுடியும்.

உலக அழிவிற்குமுன்பாக சபையானது எடுத்துக் கொள்ளப்படுமா இல்லையா என்பதை
வேதாகம வார்தைகளுக்கூடாக கண்டுகொள்ளல் அவசியமாகும்.

சபையானது பெரிய உபத்திரபத்தைச் சந்திக்கவேண்டுமா இல்லையா?

பல வருடங்களாக சபைகளின்மத்தியில் தவறான எண்ணக்கருக்கள்தோண்றியுள்ளதை நாம் அவதானிக்க
முடிகின்றது. இது ஒரு தவறானமொழிபெயர்ப்பு என்றெ சில
ஆராய்ச்சியாளர்களால் கருதமுடிகின்றது.

இதுவேதாகமத்திற்கு எதிர் மறையான கருத்தாகும்.
வேதாகமத்தை ஆராய்ந்து எது சரியானது என்பதை நாம் கண்டிப்பாக
கற்றுக்கொள்ளல் வேண்டும்.

மறுபடி பிறந்து கர்த்தருடன் ஜீவிக்கும் அனைவரும் கர்த்தருடைய இரகசிக
வருகையில் ஒரு நொடிப்பொழுதில் வானத்திற்கு
எடுத்துக்கொள்ளப்படுவோம்
உபத்திரபகாலத்தில் நடக்கும் சம்பவங்கள் யாவை என்பதை கர்த்தராகிய
இயேசுக்கிறிஸ்து கூறியுள்ளார் அவற்றைக் கற்றுக் கொள்ளுவோம்.

உபத்திரபகாலத்தில் நடக்கும் சம்பவங்கள் யாவை என்பதை கர்த்தராகிய
இயேசுக்கிறிஸ்து கூறியுள்ளார் அவற்றைக் கற்றுக் கொள்ளுவோம்.

*. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும்,
சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து
விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். Mat 24:29

*.தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின. தாலந்து
நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல விழுந்தது; அந்தக்
கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்;
அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.
Rev 16:20 ,21

*.இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய
மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில்
மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த
ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில்
மூன்றிலொருபங்கு சேதமாயிற்று. மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்;
அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து,
வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும்,
நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று
பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப் போலக் கசப்பாயிற்று;
இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
Rev 8:8 – 11

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.