திரித்துவம் பாகம் 3

பிதாவும், கிறிஸ்துவும் வெவ்வேறு நபர்கள்:-

* சங் 2:7-8 ல் பிதா குமாரனை நோக்கி பேசுவதும், நீர் என்னுடைய குமாரன்
என்று பிதா கூறுவதும், என்னை கேளும் என்றும், உமக்கு சொந்தமாக
கொடுப்பேன் என்றும் கூறுவதும் இரு வெவ்வேறு நபர்களை குறிக்கிறது என்று
மிகவும் தெளிவாக தெரிகிறது. இவ்வாறு பிதா குமாரனிடமும் குமாரன்
பிதாவிடமும் பேசிய வசனங்கள் வேதத்தில் அநேகம் உள்ளது.

* "பிதாவே... உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்" என்று இயேசு கூறியுள்ளார் (யோவா
11:41). இயேசு தான் பிதா எனில், அவர் தம்மையே நோக்கி ஜெபிப்பதாகவும்,
தம்மையே ஸ்தோத்திரிப்பதாகவும் இப்பகுதிகள் கூறுகின்றன. இவ்வாறு இருக்க
முடியாது எனவே இருவரும் வெவ்வேறு நபர்கள்.

* பிதாவின் வலது புறத்தில் குமாரன் உட்க்கார்ந்திருப்பதை (சங் 110:1; மத்
22:24; 26:64; மாற் 16:19; எபேசி 1:21) போன்ற வசனங்கள் கூறுகின்றன.
ஒருவர் தனது வலது புறத்தில் உட்கார முடியாது என்பதால் இருவரும் ஒருவர்
அல்ல.

* பிதாவுக்கு தெரிந்த சில குமாரனுக்கு தெரியாது (மாற் 13:32) என்பது
இருவரும் வெவ்வேறு நபர்கள் என்பதற்க்கு ஆதாரம்.

* பிதா இயேசுவை அனுப்பினார் (யோவா 8:42) இயேசு பிதாவிடம் திரும்பி
சென்றார் (யோவா 16:5) என்பவை அவர்கள் இரு நபர்கள் என்பதை
தெளிவுபடுத்துகிறது.

* இயேசு பிதாவை "என் பிதா" என்று குறிபிட்டுள்ளார் (யோவா 15:1; 20:17;
வெளி 2:26). பிதா இயேசுவை தமது "குமாரன்" என்று கூறியுள்ளார் (மத் 3:17;
17:5). ஒருவர் தமக்கே குமாரனாய் இருப்பதும் தமக்கே பிதாவாய் இருப்பதும்
எப்படி? மேலும் பரலோக ராஜ்ஜியத்தில் யாருக்கு எந்த இடம் என்று
தீர்மானிப்பது குமாரன் அல்ல, பிதா மட்டுமே (மத் 20:23) என்பது இருவரும்
ஒருவரல்ல என்பதை பறைசாற்றுகிறது.

* இயேசு சிலுவையில் தொங்கிய போது "ஏன் என்னை கைவிட்டீர்" என்று கூறினார்
(மத் 27:46). ஒரு நபர் தம்மையே கைவிடுவதாக கூறுவது பொருந்தாது என்பதால்
பிதாவும் குமாரனும் வெவ்வேறு நபர்கள் ஆவர்.

* இயேசு தமது சித்தத்தை அல்ல, பிதாவின் சித்தத்தையே செய்தார் (மத் 26:39;
யோவா 5:30; 6:38) இயேசுவின் உபதேசம் அவருடையதல்ல, பிதாவினுடையது (யோவா
7:16-18; 8:26-28) இயேசு தம்மை தாமே மகிமை படுத்த வரவில்லை, பிதாவையே
மகிமை படுதினார் (யோவா 8:54) இவை எல்லாம் இரு வெவ்வேறான நபர்கள்
என்பதற்க்கு சான்று.

* இயேசுவை குறித்து பிதா சாட்சி கொடுத்தார் (யோவா 5:37; 8:18) இயேசு
தனித்திராமல் பிதாவோடு இருந்தார் (யோவா 8:16) இதை கவனித்தால் பிதாவும்
குமாரனும் வெவ்வேறு நபர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

* இயேசுவை விட பிதா பெரியவர் என்பது இயேசுவும் பிதாவும் வெவ்வேறு நபர்கள்
என்பதை நிறுவுகிறது. ஏனெனில் ஒருவர் தம்மைவிட பெரியவராய் இருக்க முடியாது
(யோவா 14:28; 1கொரி 11:3).

* பிதாவும் குமாரனும் வெவ்வேறு நபர்கள் என்பதற்க்கு இன்னும் சில ஆதாரமான
வசனங்களை கொடுக்கிறேன் வாசித்து பாருங்கள். (மத் 7:21; 11:27; 18:10,35;
28:19; லூக் 2:49; யோவா 5:19,27; 8:19; 13:32; 14:1-9; 15:24; 16:3; அப்
2:33-36; எபே 1:20-21; பிலி 2:9-11; எபி 12:2; 1பேது 3:22; வெளி 1:1)

தேவன் ஒருவரே:-

மேலே நாம் பார்த்தோம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவ் ஆகிய மூவரும்
தனித்தனி நபர்கள் என்று, ஆனால் தேவன் ஒருவரே என்றும், கர்த்தர் ஒருவரே
என்றும் வேதத்தின் பல வசனங்கள் கூறுகின்றன. அதை தருகிறேன் வாசித்து
பாருங்கள் (உபா 4:39; 6:4; ஏசா 46:9; சகரி 14:9; மத் 4:10; மாற் 12:29;
யோவா 17:3; ரோம 16:27; 1கொரி 8:4,6; எபே 4:6; 1தீமோ 2:5; 6:15-16; யூதா
4)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.