இனி
வட இந்தியாவினை
அடுத்த 500 ஆண்டுகள்
ஆளப்போவது இந்த
குழுவினரே. அது
தான் ராஜ்புட்ஸ் (Rajputs).
இன்றைய வட
இந்தியாவிலும்
பிரபலமான ஒரு பெயர்.
வட மேற்கில் பல காலத்தில்
இந்தியா மீது
படையெடுத்து வந்து
இந்தியாவிலேயே தங்கி
இருந்த சகர்கள், குசானர்கள்
மற்றும் ஹுன்னேர்கள்
போன்றவர்களே
ஒன்றிணைந்து, குழப்பம்
மிக்க அன்றைய இந்திய
அரசியலிலில்
தங்களுக்கு ஆதாயம்
கிடைக்க ராஜ்புட்ஸ் என்ற
பெயரில் வருகின்றனர்.
காலப்போக்கில்
முற்றிலுமாக இந்திய
மக்களுள் அவர்களை
இணைத்துக் கொண்டு
அவர்களின்
தனித்தன்மையை இழந்து
விட்டனர்.
இவ்வாறு கி.பி ஏழாம்
நூற்றாண்டில்
இந்தியாவில் திகழும்
ஒரு அரசியல்
குழப்பமான தருணத்தை
தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்திக் கொள்ள
அது வரை இந்தியாவை
வெவ்வேறு
தருணங்களில்
படையெடுத்து வந்து
ஆண்டு பின்னர் மக்களுடன்
கலந்த அன்னியர்கள்
ராஜ்புட்ஸ் என்ற பெயரில்
ஒன்று சேருகின்றனர்.
நீண்ட நாட்கள்
இந்தியாவினை அவர்கள்
கண்டு இருக்கின்றனர்.
இந்தியா
மாற்றங்களுக்கு
உள்ளாகிக் கொண்டு
இருக்கின்றது. ஆன்மீக
ரீதியிலும் சரி அரசியல்
ரீதியிலும் சரி.
நிலைமை அவர்களுக்கு
சாதகமாக இருக்கின்றது.
வட இந்தியாவினை
அவர்கள் கைக்கு
கொண்டு வருகின்றனர்.
வட இந்தியாவில்
அவர்களின் ஆட்சியை
அமைக்கின்றனர்.
அந்த ஆட்சி தான்
ஆரியவர்தம்.
ராஜஸ்தானில் உள்ள அபு
மலையில் தான்
ஆரியவர்த்தம்
தொடங்குகின்றது.
இந்தியாவின் மீது படை
எடுத்து வந்த சகர்கள்,
குசானர்கள்,
ஹுன்னேர்கள்,
பெர்சியர்கள், கிரேக்கர்கள்
ஆகியோரின்
வம்சத்தினரும்
இந்தியாவுடன் வணிகம்
செய்ய வந்து அங்கேயே
தங்கி இருந்த ரோமர்களும்
ஒன்றிணைந்து
உருவாக்கியது தான்
இந்த ஆரியவர்த்தம் என்றும்
அவர்கள் தான் ஆரியர்கள்
என்றும்
இக்காலத்திலேயே
மனுதர்மமும்,
பிராமணர்கள்,
சத்திரியர்கள், வைசியர்கள்
மற்றும் சூத்திரர்கள் என்றப்
பிரிவுகளும்
பிறந்தது.
மத சம்பந்த செயல்களைச்
செய்யும் ஆரியர்கள்
பிராமணர்கள் எனப்பட்டனர்.
யுத்தம் செய்யும்
ஆரியர்கள் சத்திரியர்கள்
எனப்பட்டனர்.
வணிகம்
செய்யும் ஆரியர்கள்
வைசியர்கள் எனப்பட்டனர்.
இந்திய திராவிடர்கள்
சூத்திரர்கள் எனப்பட்டனர்.
பல இனத்து மக்கள் கூடி
இருக்கும் இந்தியாவில்
கருத்துக்களைப்
பரப்புவதற்கு, அனைத்து
மொழிகளையும் கலந்த
ஒரு மொழியை
இந்தியர்கள்
உருவாக்குகின்றனர்
என்றும் அம்மொழியே
பின்னர் அவர்களுக்கு
எதிராய்
பயன்படுகின்றது
என்றும் ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
அவர்கள்
கூற்றினை
மெய்ப்பிப்பது போல்
கி.பி
நூற்றாண்டுகளிலேயே
அதுவும் ஐந்தாம்
நூற்றாண்டுக்கு
பின்னரே தெளிவான
சமஸ்கிருத படைப்புகள்
நமக்கு கிடைக்கின்றன.
மேலும் சமஸ்கிருதத்தில்
பல மொழிச் சொற்கள்
இருப்பதும் அவர்களின்
கூற்றுக்கு சான்றாகத்
தான் அமைகின்றது.
அதாவது
சமஸ்கிருதத்தில்
தமிழ்,
பாலி,
அர்த்தமாகதி,
கிரேக்கம்,
லத்தின்,
பாரசீகம்
மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது அந்த
மொழிகளின் கலப்பில்
உருவாக்கப்பட்ட ஒரு
மொழியே ஆகும்.
எனவே இந்தியாவின்
மீது படை எடுத்து வந்த
சகர்கள் (Scythian),
குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள்
(சுங்கர்கள் கன்வர்களை
நினைவில் கொள்க),
கிரேக்கர்கள்
ஆகியோரின்
வம்சத்தினரும்
இந்தியாவுடன் வணிகம்
செய்ய வந்து அங்கேயே
தங்கி இருந்த ரோமர்களும்
தான் ஆரியர்கள்.
Next பல நாகரீகங்கள் எப்படி உருவாகிற்று?
