வரிசையாக மத்திய
ஆசிய நாடுகள் வீழ
இறுதியில்
பார்தியர்களின் அரசும்
வீழ்கின்றது.
இந்தியாவின் மேற்குப்
பகுதி சீன நாடோடி இன
மக்களின்
கட்டுப்பாட்டுக்கு
வருகின்றது.
இத்தனைப்
படையெடுப்புகளிலும் நாம் காண
வேண்டியது
இந்தியாவின் மேற்குப்
பகுதியினைப்
பிடித்தவர்கள்
பெரும்பாலும்
நாடோடி இன மக்களே.
அவ்வாறு பிடித்தவர்கள்
அங்குள்ள மக்களுடன்
கலந்து கொண்டே
ஆட்சியினைத்
தொடருகின்றனர்.
அதாவது மக்களுடன்
அவர்கள் கலந்தே
விடுகின்றனர்.
இதன்
காரணமாக மேற்கில் பல
இனக் குழுக்கள் இருந்து
கொண்டே இருக்கின்றன.
குசானர்கள் கிட்டத்தட்ட
மேற்கு இந்தியா
முழுவதையுமே
பிடித்து
விடுகின்றனர்.
மத்தியிலும் அவர்களின்
செல்வாக்கினை
விரிவு
படுத்துகின்றனர். மத்திய
இந்தியாவில்
சாதவாகனர்கள்
வலிமையுடன்
இருந்தாலும்
குசானர்களை ஒரு
அளவு கட்டுப்படுத்த
முடிகின்றதே தவிர
அவர்களை முழுமையாக
விரட்ட முடியவில்லை.
இவ்வாறே காலங்கள் ஓட
கி.பி மூன்றாம்
நூற்றாண்டும் வந்து
விடுகின்றது.
இக்காலத்திலேயே
குசானர்கள் மற்றும்
சாதவாகனர்களின்
ஆட்சிகள் ஒரு
முடிவுக்கு
வருகின்றன.
சாதவாகனர்கள்
இந்தியாவின் மேற்கில்
குசானர்களின் ஆதரவில்
வீற்று இருந்த ஒரு சகர்
அரசால் முடிவுக்கு
கொண்டு
வரப்படுகின்றது.
குசானர்களின் ஆட்சியோ
மேற்கில் மீண்டும்
வலுப்பெற்று எழுந்த
பெர்சியர்களின் அரசால்
ஒரு முடிவுக்கு
கொண்டு
வரப்படுகின்றது.
ஆனால்
குசானர்கள் முழு
ஆட்சியையும்
இழக்கவில்லை. பஞ்சாப்
பகுதியினை அவர்கள்
அப்பொழுதும்
அவர்களின் ஆட்சியில்
வைத்து இருந்தனர்.
மத்திய இந்தியாவில்
குப்தர்களின் ஆட்சி வரும்
வரை குசானர்களின்
ஆட்சி இந்தியாவில்
மறையவில்லை.
ஆனால்
இந்தக் காலத்தில்
தமிழகத்தின் சரித்திரம்
ஒரு இருண்டக்
காலத்தினுள்
நுழைகின்றது. தமிழகம்
களப்பிரர்களின்
கைகளுக்கு
செல்கின்றது.
இருண்டக்
காலம் என்றுக் கூறுவதன்
காரணம் அக்காலத்தில்
தமிழகத்தில் என்ன நடந்தது
என்றே தெரியவில்லை.
குப்தர்கள் ஆட்சி
மலருவது கி.பி
நான்காம் நூற்றாண்டில்.
குப்தர்களின் காலம்
மீண்டும் இந்தியாவின்
ஒரு பொற்காலம்.
இக்காலத்தில் தான் இழந்த
பகுதிகள்
அனைத்தையும் இந்தியா
திரும்ப பெறுகின்றது.
சந்திர குப்தர், சமுத்திர
குப்தர் போன்ற
மாபெரும் வீரர்கள்
தோன்றுகின்றனர்.
பாரசீகர்களை வீழ்த்தி
மேற்குப் பகுதியில்
பெரும்பாண்மையான
பகுதிகள் மீட்கப்
படுகின்றன.
கிட்டத்தட்ட
முழு இந்தியாவுமே
இந்தியர்களின் கையில்
வருகின்றது. மேற்குப்
பகுதியில் தொடர்ந்து
அச்சுறுத்தல்கள்இருந்து
வந்தாலும் குப்தர்களின்
முன் அவை தோற்றே
போகின்றன.
ஆனால்
வலிமையுடன்
இருப்பவன்
வலிமையாகவே இருக்க
முடியுமா.
குப்தர்களின்
ஆட்சியிலும் அவர்கள்
சறுக்கும் காலம்
வருகின்றது. இந்த
சறுக்கம் கி.பி ஐந்தாம்
நூற்றாண்டின்
இறுதியில்
தொடங்குகின்றது.
காரணம் ஹுன்னேர்கள்
(Huns).
ஹுன்னேர்கள் வட ஆசியப்
பகுதிகளில் இருந்துக்
கிளம்பிய மற்றுமொரு
நாடோடி இனத்தவர்.
இவர்களைப் பற்றி
சாதாரணமாக எண்ணி
விட முடியாது.
குதிரை
வில்லாளிகளையே
முக்கிய ஆயுதமாகக்
கொண்டு இருந்த இவர்கள்
கிட்டத்தட்ட அனைத்து
ஆசிய நாடுகளுக்கும்
சரி ரோமப் பேரரசுக்கும்
சரி தலைவலியாகத் தான்
திகழ்ந்தனர்.
அப்பேர்ப்பட்ட
இவர்கள் தான்
இந்தியாவின் மேற்குப்
பக்கம்
படையெடுக்கின்றார்கள்.
குப்தர்கள் பின்
வாங்குகின்றனர்.
ஹுன்னேர்கள்
இந்தியாவின் உள்ளே
நுழைகின்றனர்.
இது
நடப்பது கி.பி ஐந்தாம்
நூற்றாண்டின்
இறுதியில்.
இந்நிலையில்
இந்தியாவின் மேற்குப்
பகுதியில்
ஹுன்னேர்களின் ஆதிக்கம்
பெருகுகின்றது.
குப்தர்கள் வலு
இழக்கின்றனர்.
பஞ்சாப்
முதற்கண்ட பகுதிகளில்
ஹுன்னேர்கள்
பரவுகின்றனர்.
இறுதியாக கி.பி
ஆறாம் நூற்றாண்டில்
குப்த வம்சம் பல சிறு
சிறு பிரிவுகளாக
பிரிகின்றது.
அத்தருணத்தில் தான்
வரதர்கள் ஆட்சிக்கு
வருகின்றனர்.
சிதறிக்
கிடக்கும் பிரிவுகளை
ஒன்றிணைத்து
ஹுன்னேர்களை
எதிர்க்கின்றனர். ஆனால்
எவ்வாறு இறுதி
மௌரியப் பேரரசன்
சதியினால் வீழ்த்தப்பட்டு
இறந்தானோ அவ்வாறே
இறுதி வரத மன்னனான
ஹர்ஷ வரதன் (Harsha vardhan)
சதியினால்
இறக்கின்றான். அவனை
கொல்பவன் அவனது
அமைச்சன்.
அவனுடன்
சேர்ந்தே அவனது இரு
மகன்களும் கொல்லப்பட வரத
அரசும் அதன்
முடிவுக்கு
வருகின்றது. இதன் காலம்
கி.பி ஏழாம்
நூற்றாண்டு.
எவ்வாறு பிரகதரத்தன்
மரணத்தோடு மௌரியப்
பேரரசு ஒரு
முடிவுக்கு வந்ததோ.
அதேப்போல் இறுதி வரத
மன்னனான ஹர்ஷ வரதனின்
மரணத்தோடு வட
இந்தியாவில்
திராவிடர்களின்
இறுதிப் பேரரசும் ஒரு
முடிவுக்கு வந்தது.
அவனே இறுதியாக வட
இந்தியாவினை ஆண்ட
ஒரு உண்மையான இந்திய
அரசன். அவனின்
மறைவுக்குப் பின் வட
இந்தியா ஒரு
குழப்பமான நிலைக்குச்
செல்கின்றது.
பெரிய
அரசர்களோ அரசுகளோ
இல்லாத ஒரு நிலை வட
இந்தியாவினில்
இருக்கின்றது. தெற்கே
அப்பொழுது தான்
பல்லவர்கள்
நிலைப்பெற்று
இருக்கின்றனர்.
இந்நிலையில் தான்
புதிதாய் ஒரு
பெயரினை வைத்துக்
கொண்ட சிறு குழுக்கள்
வட மேற்குப் பகுதியில்
இருந்து
தோன்றுகின்றன.
பாகம் 4 விரைவில்......
————————————
Whatsapp:8012978922
————————————
