பல நாகரீகங்கள் எப்படி உருவாகிற்று? பாகம் 1

கடந்த பதிவில் ஆரியர்கள்
என்றால் யார்? என்பது
குறித்துப் பார்த்தோம்.

இப்போது பல நாகரீகங்கள்
எப்படி உருவாகிற்று?
என்று பார்க்கப்
போகிறோம்.

ஆதியில் ஆணும்
பெண்ணும்
படைக்கப்படுகின்றனர்.
அவர்கள் அவர்களைப் படைத்த
இறைவனோடு
ஐக்கியமாக வாழ்கின்றனர்.

ஆனாலும் முதல்
மனிதர்களும்
இறைவனிற்கு
கீழ்ப்படியாமல்
போகின்றார்கள்.
அவர்களுடைய
கீழ்ப்படியாமையால்
இவர்களைப் போலவே
அவர்களுக்குப் பின் வந்த
சந்ததிகளும்
இறைவனுக்கு
கீழ்ப்படியாமலேயே
வாழ்க்கை நடத்துகின்றனர்.

காலத்தில் மனிதன்
எண்ணிக்கையில்
பெருகுகின்றான்.
அச்சூழ்நிலையில்தான்
இறைவனுக்கு
கீழ்ப்படியாத இவர்கள்
வாழ்ந்த
குமரிக்கண்டமானது
கடற்கோள்களின்
தாக்குதலுக்கு
உள்ளாகின்றது.

இன்றைய ஆஸ்திரே
லியாவினையும்
ஆபிரிகாவினையும்
ஆசியாவோடு
இணைத்துக் கொண்டு
இருந்த ஒரு மாபெரும்
நிலப்பரப்பு கடலினுள்
போக சில புவி
மாற்றங்கள் பூமியில்
நடக்கின்றது.

கடலினுள்
இருந்த இமயமலை மேலே
வருகின்றது. குமரிக்
கண்டம் இருந்த இடத்தினில்
தற்போதைய இந்திய
மகாக்கடல்
தோன்றுகின்றது.

இந்தப் பேரளிவில்
இருந்து நோவாவும்
அவனது குடும்பமும்
இறைவனுக்கு
கீழ்ப்படிந்தபடியால்
காப்பாற்றப்படுகிறார்கள்.
இவர்கள் சிந்து
வெளியில்
வசிக்கின்றார்கள்.

இவர்களைத் தொடர்ந்து பல
சந்ததிகள் உண்டாகின்றது.
காலப்போக்கில்
மனிதர்களின்
எண்ணிக்கை கூடக் கூட
அவர்கள் வேறு இடம்
தேடிச் செல்ல
ஆரம்பிக்கின்றனர்.

சிலர்
தெற்கே சென்று
எகிப்தில்
குடியேறுகின்றனர்.

சிலர் கிழக்கே
செல்லுகின்றனர்.

சிலர்
வடக்கே நோக்கி
செல்லுகின்றனர்.

இவ்வாறு மக்கள்
குமரிக்கண்டத்தின்
அழிவிற்கு பின்னால்
இடம்பெயர்ந்ததையே
நோவா கதையாக சமய
நூல்கள் கூறுகின்றன.

அனைத்து மக்களும் இடம்
பெயரவில்லை. பலர்
தமிழகத்திலேயே தங்கி
விடுகின்றனர்.

தமிழகத்திலே ஒரு
கலாசாரம் மலர்ந்து
இருக்கின்றது. நகரங்கள்
தோன்றி இருந்தன. கடல்
போக்குவரத்து சிறந்து
இருந்தது.

அவர்கள்
விரும்பிய அனைத்தும்
அங்கே கிடைக்கப்
பெற்றது. பாண்டியனின்
தலைமையில் தமிழர்கள்
வாழ்ந்துகொண்டு
இருந்தனர்.

வடக்கே சென்ற தமிழர்கள்
தாங்கள் தங்கிய
இடங்களுக்கு எல்லாம்
தமிழிலேயே பெயர்
வைக்கின்றனர். எனவே
தான் நாம் இன்றும் அங்கே
'ஊர்' என்று முடியும்
பெயர்களைக் காண
முடிகின்றது.

உதாரணமாக, செயப்பூர்,
கான்ப்பூர். வடக்கே சென்ற
தமிழர்கள் சிலர் கங்கை
நதியின் கரையில் சில
நகரங்களைக் அமைத்து
அங்கேயே
குடியேறுகின்றனர்.

மேலும் சிலர் இன்னும்
வடக்கே சென்று பல
நகரங்களைக் கண்டப்பின்
சிந்து சமவெளியினை
அடைகின்றனர்.

பரந்து விரிந்த அந்த
செழிப்பான இடத்தினைக்
கண்டதும் அவர்கள் அங்கே
ஒரு நாகரீகத்தினை
தொடங்குகின்றனர்.
ஆனால் சில காலம்
கடந்ததும் மீண்டும் சில
தமிழர்கள் சிந்து
சமவெளியில் இருந்து
மேற்கே செல்லுகின்றனர்.

அங்கே அவர்கள் சுமேரிய
நாகரீகம்,
மேசொபோடமியா
நாகரீகம் மற்றும்
பாபிலூனிய நாகரீகம்
போன்ற நாகரீகங்களைத்
தோற்றுவிக்கின்றனர்.

மேலும் சில மக்கள்
வடக்கே செல்லத்
தொடங்கினர். மக்கள்
தாங்கள் சென்ற இடம்
எங்கிலும் தங்களது
வழிபாட்டு
முறையினையும்
கொண்டுச் சென்றனர்.

மிருகப் பலி வழிபாடு
கிட்டதட்ட அனைத்து
நாகரீகங்களிலும்
காணப்படுகின்றது.
அதேப் போல் கல்
வழிபாடும்
காணப்படுகின்றது.

தமிழகத்தில் இருந்து
கிழக்கே சென்ற மக்கள்
சிலர் தென்
அமெரிக்காவிற்கு
சென்று அங்கே
குடிகொள்கின்றார்கள்.

சிலர் வட
அமெரிக்காவிற்கு
சென்று அங்கே
குடிக்கொள்கின்றார்கள்.

சிலர் ஜப்பானில், சிலர்
சீனாவில், சிலர்
ஆஸ்திரேலியாவில்.

இவ்வாறு உலகம்
முழுவதும் தமிழர்கள்
பரவுகின்றனர்.
இந்தக் காலத்தில் தான்
புவியின் வெட்ப
நிலைக்கு ஏற்றாற்ப்
போல், குளிர்
பிரதேசங்களான மேற்கு
பகுதிக்கும் வடக்கு
பகுதிக்கும் சென்ற
தமிழர்களின் நிறம்
வெண்மையாக மாறத்
தொடங்குகின்றது.

தலைமுறை
தலைமுறையாக
மேற்கிலேயே தங்கிய
மக்கள் தாங்கள்
எங்கிருந்து வந்தவர்கள்
என்னும் உண்மையினை
காலப்போக்கில் மறக்கத்
தொடங்குகின்றனர்.

பிரிந்து சென்ற
குழுக்களிடம் புது
புது மொழிகளாய்
தமிழ்மொழி
உருமாறுகின்றது.

பாகம் 2 விரைவில்....

————————————
Whatsapp@8012978922
————————————

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.