தானியேல் முன்னறிவித்த படி பாபிலோனிய,
மேதியபெர்சிய
கிரேக்க
வல்லரசுகள்
உலகத்தை ஆண்டு முடித்தன.
ரோம வல்லரசும் எழும்பியது ரோம வல்லரசின் ஜுலியஸ் சீசரையும், அகஸ்ரஸ்
சீசரையும் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
இந்த அகஸ்ரஸ் சீசர் ரோம வல்லரசின் ராஜாவாயிருந்த போதுதான் இயேசு கிறிஸ்து
உலகத்திலே பிறந்தார் என்று பரிசுத்த வேதாகமம் மாத்திரமல்ல உலகத்தின்
சரித்திரமே கூறுகிறது.
ஆஸ்கரஸ் சீசரைலூக்கா சுவிஷேகன் கூறும் போது அகஸ்துராயன் என்று குறிப்பிடுகிறார்.
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்பட வேண்டுமென்று
அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது (லூக்2:1).
அந்த அகஸ்துராயன் தான் சரித்திரத்திலே நாம் வாசிக்கிற அகஸ்ரஸ் சீசர்.
இயேசு கிறிஸ்து கற்பனையில் தோன்றியவரல்ல, அவர் சரித்திர புருஷர்
என்பதற்கு இதுவும் ஆதாரமாய் இருக்கிறது.
நான்கு வல்லரசுகள் உலகத்தை ஆளும் என்று தானியேல் உரைத்த அதே
தீர்க்கதரிசனத்தின்படிநான்கு வல்லரசுகள் உலகத்தை ஆண்டு முடிந்தன.
வெளிப்படுத்தல் விஷேசத்தின் 17ம் அதிகாரத்தின் 9ம், 10ம், 11ம்
வசனங்களைப் பாருங்கள்.
இந்த இடத்திலே ஏழு வல்லரசுகளைக் குறித்து யோவான் தெரிவித் திருக்கின்றான்.
நான்கு வல்லரசுகள் உலகத்தை ஆளும் என்று வேதம் உரைத்தபடி
பாபிலோனிய,
மேதியப்பெர்சிய,
கிரேக்க,
ரோம
வல்லரசுகள்
ஆண்டு முடிந்தாகிவிட்டன.
ஆனால் ஏழாவதாய் ஒரு வல்லரசு எழும்பும் என்று இந்த மூன்று
வசனங்களிலிருந்து நாம் அறிகிறோம்
இந்த வல்லரசு எங்கிருந்து எழும்பும் என்பதை சூசகமாக, மறைப்பொருளாக யோவான்
தெரிவித்திருக்கிறான்.
ஏழு குன்றுகள் உள்ள ஒரு நகரத்திலிருந்து ஏழாவது வல்லரசு எழும்புமாம்.
இதுவரை நான்கு வல்லரசுகளைத் தானே நாங்கள் பார்த்திருக்கிறோம் என்ற கேள்வி
உங்களுக்கு எழலாம்.
பாபிலோனியர்,
மேதியப்பெர்சியர்,
கிரேக்கர்,
ரோமர் பாபிலோனிய வல்லரசுக்கு முன்னதாய் உலகத்தை ஆண்டவர்கள்யார்?
அசிரியரும்,
எகிப்தியரும்.
எகிப்தியருடைய ஆட்சியிலே இஸ்ரவேல் புத்திரர் அடிமைகளாய் இருந்தார்கள்
என்பதை அறிவோம்
அதற்குப் பிறகு உலகத்தை ஆண்டவர்கள் அசிரியர் ஆகமொத்தம் வேத
சரித்திரத்தின் படியும், வேதத்தின் தீர்க்கதரிசனத்தின் படியும் ஆறு
வல்லரசுகள் ஆண்டு முடிந்தாகிவிட்டன.
(எகிப்தியர்,
அசிரியர்,
பாபிலோனியர்,
மேதியப்பெர்சியர்,
கிரேக்கர்,
ரோமர்)
யோவான் தெரிவிக்கிறார், ஏழாவதாய் ஒரு வல்லரசு ஏழு குன்றுகளுள்ள ஒரு
நகரத்திலிருந்து எழும்பும் என்பதாக.
இதை குறித்து நான்காம் பாகத்தில் பார்க்கலாம்.
பாகம் 4 விரைவில்.....
