ஹிராடடஸ் அவர்கள்
குமரிக் கண்டத்தின்
எல்லையை இவ்வாறாக
குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் -
கிரேக்க நாடு
2. மேற்கில் - எகிப்து
மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் - மென்
ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் - சீன
நாடு
5. கிழக்கில் - பர்மா,
மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் - நீண்ட மலைத்
தொடர்
இம்மலைத் தொடர்
ஆஸ்திரேலியாவில்
தொடங்கி
தென்னாப்பிரிக்காவில்
முடிவடைகிறது
என்பதை மனதில் கொள்ள
வேண்டும்.
இவற்றின்
மையத்தில் அமைந்த மிகப்
பெரிய கண்டமே குமரிக்
கண்டம். இக்கண்டத்தை
பதினான்கு
மாநிலங்களாக அதாவது
ஏழு தெங்கு நாடு,
ஏழு பனை நாடு என
பிரித்திருந்தனர்.
அந்நாட்டில் வாழ்ந்தவன்
தான் தமிழன். அவன்
கையாண்ட நாகரிகம்தான்
திராவிட நாகரிகம்.
அவனுடைய வரலாறும்
நாகரிகமும் தான்
உலகிலேயே முதன்மை
வாய்ந்தது.
இவனுடைய
மொழி தமிழ், தமிழர்கள்
தமிழ்நாட்டிலிருந்து
கடல் வழியாகவும், தரை
மார்க்கமாகவும்
உலகெங்கும் சென்று
குடியேற்றங்களை
அமைத்தனர். இதற்குச்
சான்றாக பினீசியர்களின்
நாணயங்களும்,
கல்வெட்டுக்களும்
உதவுகின்றன.
குமரிக்கண்டத்தின்
பெரும் பகுதியாகிய
பழந்தமிழ் நாட்டை
ஆண்டவன் தமிழனே.
அம்மொழியும் தமிழ்
மொழியே.
கடல்
கோள்களால், தமிழனின்,
நாடும், மொழியும்
அழிவுற்றன. பழந்தமிழ்
இலக்கியங்களில்
கூறப்படும் கடல்கோள்கள்
ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார்
நான்கு முறை ஏற்பட்ட
பெரும் கடல் கோள்கள்
குமரிக் கண்டத்தை
அழித்து
நாசமாக்கியது.
அந்த
நான்கு பெருங் கடல்
கோள்களும் இவைகளே
(சிறுகடல் கோள்கள்
எண்ணில் அடங்காது) :-
1. முதல் சங்கம் -
தென்மதுரை - கடல்
கொண்டது
2. இரண்டாவது -
நாகநன்னாடு - கடல்
கொண்டது
3. மூன்றாவது
இடைச்சங்கம் - கபாடபுரம் -
கடல் கொண்டது
4. நான்காவது -
காவிரிப்பூம்பட்டிணம் -
கடல் கொண்டது.
ஆகவே, குமரிக்கண்டம்
என்பது முற்காலத்தில்
இருந்ததாகக் கருதப்படும்,
கோட்பாடுகளால்
ஊகிக்கப்படும் அல்லது
இலக்கியங்களில்
சாட்சியாக கூறப்படும்
கண்டம் அல்லது
பெருநிலப்பரப்பாகும்.
குமரிக்கண்டம் எனும்
கண்டம் போன்ற பெரும்
நிலப்பகுதியானது
இன்றுள்ள இந்தியாவின்
எல்லையான குமரி
முனைக்குத் தெற்கே
முற்காலத்தில்
பாண்டியர்களின்
ஆட்சிக்கு கீழ்
அமைந்திருந்தது எனக்
கருதுவதற்கு இடம் தரும்
வகையில் பண்டைத் தமிழ்
இலக்கிய நூற்களில் சில
தகவல்கள் உண்டு.
ஆதி
மனிதன்
தோன்றியிருக்கக்
கூடிய தென்
குமரிக்கண்டம்
கடற்கோளால் (சுனாமி
போன்ற
ஆழிப்பேரலைகளால்)
அழிவிற்குட்பட்டது
என்பது சில
தமிழறிஞர்களின்
கருத்து.
பாகம்- 3 விரைவில்.....
————————————
Whatsapp@8012978922
————————————
