படைப்பின் வரலாறு பாகம் 2

3. ஆதிகால யுகம் மூன்று :-

பூமியின் மீது இருள் சூழ்ந்திருந்த காலத்தை ஆதிகால யுகம் மூன்று என
அழைக்கலாம். ஒளி இல்லாததால் வெப்பம் தனிந்து கடுங்குளிர் ஏற்ப்பட்டது.
உலகமெங்கும் உள்ள நீரின் மேல்பரப்பு பனிகட்டியாக உறைந்திருக்கும்.
காற்றில் இருந்த ஈரப்பதம் பனித்துளிகளாகி நிலத்தின் மீது வாழுந்து
பூமியெங்கும் பனிகட்டி படலம் இருந்திருக்கும். (பனிகட்டி படலத்தின் மீது)
நீரின் மீது ஆவியானவர் அசைவாடினார் என கருதலாம். மேலும் குளிரினால் மேகம்
தரைமட்டும் இறங்கி தரையை தொட்டுக்கொண்டு இருந்திருக்கும். தேவன் மேகத்தை
பூமிக்கு வஸ்திரமாக உடுத்தினார் என்று யோபு 38:9 கூறுகிறது.

வெளிச்சம் உண்டாகக்கடவது :-

வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன் கூறிய போது, பூமியின் மீது ஒளி
வீசுவதற்க்கு இருந்த தடையை தேவன் நீக்கியதால் பூமியின் மீது மீண்டும் ஒளி
வீசியது.

பூமியை சுற்றி ஆடையை போன்று மேகம் இருந்ததால் (யோபு 38:9) சூரிய ஒளி
பூமியின் மீது நேரடியாக விழாமல் மேகத்தின் மீது விழுந்து பூமியின் மீது
மங்களாக தெரிந்தது. எனவே சூரியன் நேரடியாக தெரியாத போதிலும் சாயங்காலமும்
விடியற்காலமும் இருந்தன. "இருள் நீக்கப்பட்ட புதிய யுகத்தின் முதலாம்
நாள் உண்டானது." "வெளிச்சம் உண்டாகக்கடவது" (Let there be light- ஒளி
தோன்றுவதாக) என்று தேவன் கூறினார். வெளிச்சம் படைக்கப்படகடவது என்று
கூறவில்லை.

"சிருஷ்டித்தார்" என்பதின் எபிரெய சொல் BARA இந்த சொல் ஆதி 1:1,21,27 இல்
மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிச்சம் உண்டாகக்கடவது என்று கூறும்
போது அந்த சொல் பயன்படுத்தப்படவில்லை.

இரண்டாவது நாளில், சூரிய ஒளி மேகங்கள் மீது படுவதால் வெப்பம் உண்டானதால்
பூமியை தொட்டுக்கொண்டிருந்த மேகம் மேலே எழும்பிய போது பூமியின் மீதிருந்த
நீருக்கும் (பனிபடலத்திற்கும்) மேகத்திற்கும் இடையே ஆகாய விரிவாகிய
இடைவெளி உண்டாயிற்று (ஆதி 1:6-8) இதற்கு வானம் என்று தேவன் பெயரிட்டார்.

மூன்றாவது நாளில, பூமியின் மீது இருந்த பனிகட்டி படலம் உருகிய போது
வெட்டாந்தரை காணப்பட்டது. செடிகள், மரங்கள், காளான்கள் போன்றவை
உண்டாகும்படி தேவன் செய்தார் மூன்றாவது நாளில, பூமியின் மீது இருந்த
பனிகட்டி படலம் உருகிய போது வெட்டாந்தரை காணப்பட்டது. செடிகள், மரங்கள்,
காளான்கள் போன்றவை உண்டாகும்படி தேவன் செய்தார் (ஆதி 1:9-13)

நான்காவது நாளில் மேகங்கள் சற்று விலகவும் சூரியன், நிலா,
நட்ச்சத்திரங்களின் ஒளி பூமியில் நேரடியாக விழும்படி தேவன் வழி
உண்டாக்கினார். இதுவும் படைப்பின் செயலன்று. உண்டாகக்கடவது (Let there
be.., made) என்று தான் தேவன் உரைத்தார் (ஆதி 1:14-19). ஏற்கனவே தேவனால்
படைக்கப்பட்டிருந்தவை, தேவன் இவ்வாறு கூறியதும் நேரடியாக பூமியின் மீது
செயல்ப்பட்டன. காலங்களை குறிப்பதறகென அவைகள் நியமிக்கப்பட்டன.

பறவைகளையும், மீன்களையும் மற்ற நீர்வாழ் இனங்களையும் தேவன் ஐந்தாம் நாள்
படைத்தார் (சிருஷ்டித்தார் - BARA ஆதி 1:20-23). பின்னர் ஆறாம் நாளில்
விலங்கினங்களையும் இறுதியில் மனிதனையும் படைத்தார் (சிருஷ்டித்தார் -
BARA ஆதி 1:24-27).

யாத் 20:11 இல் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் ஆறு நாட்களில்
படைத்தார் என்பது ஆகாய விரிவாகிய வானத்தையும் வெட்டாந்தரையையும் கடலையும்
அதிலுள்ள உயிரினங்களையும் ஆறு நாட்களில் உருவாக்கினதை கூறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.