ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 19

LASER என்ற பதத்திற்கு Light
Amplification by Stimulated
Emission of Radiation என்று
அர்த்தம்.

லேசர்
ஒளிக்கற்றையினால்
இலக்கத்தைப் பொறித்தால்
வெளியே தெரியாது.
தோலுக்கு அடியில்
அந்த இலக்கம்
பொறிக்கப்படும்.

ஸ்கானர்
என்ற யந்திரத்தின் மேலே
கையை வைத்த உடனே
ஸ்கானரின் திரையிலே
இலக்கம் தெரியவரும்.
எனவே நாகரிக
உலகிலும் இலக்கத்தைப்
பொறித்துக்கொள்ள
முடியும்.

இந்த லேசர்
ஒளிக்கற்றையை இந்த
முறைக்குப்
பயன்படுத்திய
விஞ்ஞானியின் பெயர்
Dr.கெயித் ஸ்பாரல்
என்பதாகும்.

சமீபத்திலே
டாக்டர் கெயித் ஸ்பாரல்
அவர் தன்னுடைய
சரீரத்திலேயே லேசர்
ஒளிக்கற்றையைக்
கொண்டு தன்னையே
இலக்கமிட்டு வெளியே
காண்பித்திருக்கிறார்.
பாருங்கள்! லேசர்
ஒளிக்கற்றையினால்
இலக்கம் இட்டுக்
கொண்டால் அது
வெளியே தெரியாது.

அதற்கு வலி
கிடையாது. அதைக்
கண்களினால்
காணமுடியாது;
ஆனால் ஸ்கானர்
யந்திரத்திலே வைத்தால்
வெளியே தெரியவரும்
என்று
தெரிவித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஒரு சட்டம்
வரப்போகிறது என்பதற்கு
நான் இன்னொரு முன்
குறிப்பைச் சொல்ல
விரும்புகிறேன்.

இப்படிப்பட்டமுறையில்
அமைந்த Card கள் Bank
களிலே பணத்தை
எடுப்பதற்குப்
பயன்படுத்தப்படுகின்றன
என்பதை இந்த தேசத்திலும்
வளர்ந்து வருகிற பல
தேசங்களிலும் நாம்
பார்க்கிறோம்.

பாபிலோனிய வல்லரசின்
இராஜாவாகிய
நேபுகாத்நேச்சார்
மன்னனுடைய நாட்களில்
நடந்த ஒரு சம்பவம் 666 என்ற
இலக்கத்தின் இரகசியத்தைத்
தெரிவிக்கிறது.

அந்த
இலக்கம் மனுஷனுடைய
இலக்கமாயிருக்கிறது
என்று யோவான்
தெரிவிக்கிறார்.

மனிதன் 6 வது நாளிலே
உருவாக்கப்பட்டான்.
பிசாசு பயன்படுத்தப்
போகிற ஒரு
மனிதனுடைய இலக்கம் 666
ஆகும்.

நேபுகாத்நேச்சார் ஒரு
பெரிய சிலையை
நிறுத்தினான். அந்தச்
சிலையை எல்லோரும்
வணங்கவேண்டும் என்று
கட்டளை கொடுத்தான்.
அந்தச் சிலையை
வணங்காதவர்கள் அக்கினிச்
சூளையிலே
போடப்பட்டார்கள்.

அந்தச்
சிலையின்
உயரம் 60 முழம்.
அந்தச் சிலையின்
அகலம் 6 முழம்.
அந்தச்
சிலையை மக்கள்
எல்லோரும்
வணங்கும்போது 6
வாத்தியங்கள் முழங்கின.

6 என்ற இலக்கம்
அந்திக்கிறிஸ்து
பயன்படுத்தப்போகிற,
அந்திக்கிறிஸ்து
சட்டமாய்க் கொண்டு
வரப்போகிற, பிசாசு
பயன்படுத்தப்போகிற,
மனிதனுடைய
இலக்கமாயிருக்கிறது.

அந்த இலக்கத்தைப்
பொறித்துக்கொள்ளாவிட்டால் கடைகளில்
விற்கவோ, வாங்கவோ
முடியாது என்கிற ஒரு
சட்டமும் கூடவே
வரப்போகிறது.

666 என்ற
இலக்கத்தைப்
பொறித்துக்கொண்டால்
என்ன நடக்கும்
என்பதையும் நான்
உங்களுக்குத்
தெரிவிக்கப்போகிறேன்.

வெளி 14ம் அதிகாரம்
9ம், 10ம், 11ஆம் வசனங்களைப்
பாருங்கள்.

"அவர்களுக்குப் பின்னே
மூன்றாம் தூதன் வந்து
மிகுந்த சத்தமிட்டு
மிருகத்தையும்
(அதாவது
அந்திக்கிறிஸ்துவையும்) அதின் சொரூபத்தையும் வணங்கித் தன்
நெற்றியிலாவது, தன்
கையிலாவது அதின்
முத்திரையைத் தரித்தக்
கொள்ளுகிறவனெவனோ, அவன் தேவனுடைய
கோபாக்கினையாகிய
பாத்திரத்திலே
கலப்பில்லாமல்
வார்க்கப்பட்ட அவருடைய
உக்கிரமாகிய மதுவைக்
குடித்து, பரிசுத்த
தூதர்களுக்கு
முன்பதாகவும்,
ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பதாகவும்,
அக்கினியாலும்,
கந்தகத்தினாலும்
வாதிக்கப்படுவான்.

அவர்களுடைய
வாதையின் புகை
சதாகாலங்களிலும்
எழும்பும்;
மிருகத்தையும், அதின்
சொரூபத்தையும்
வணங்குகிறவர்களுக்கும்,
அதினுடைய நாமத்தை
தரித்துக் கொள்ளுகிற
எவனுக்கும் இரவும்
பகலும்
இளைப்பாறுதலிராது".

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.