இயேசுக்கிறிஸ்த்து பற்றிய சில முக்கிய குறிப்புகள் பாகம் - 3

(ஊ . ) இயேசு உலகிற்கு வந்த நோக்கம்.:

1.தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுதல். ;-

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப் பினவருடைய சித்தத்தின்படி செய்யவே
நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.(யோவான். 6;38)

2.பாவிகளை இரட்சிப்பது;-

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமா ரன் வந்திருக்கிறார்
என்றார்.(லூக்கா.19;10)

3.நித்திய நீதி உருவாக்குதல்.;-

மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத்
தொலைக் கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய
நீதியை வருவிக்கிற தற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும்
முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமு ள்ளவரை அபிஷேகம்
பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத் தின்மேலும்
எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
(தானி.9;24)

4.சாத்தானின்
செயற்திட்டங்களை நிர்மூலம் செய்தல்.;-

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தை யும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,
அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத் தத்தையும் உடையவரானார்;
மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத் தினாலே
அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்
திற்குள்ளா னவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.

ஆதலால், அவர்
தேவதூதரு க்கு உதவியாகக் கைகொடா மல்,
ஆபிரகாமின்சந்ததிக்கு
உதவியாகக்கைகொடுத்தார்.(எபி. 2;14-16)

5.பழைய ஏற்பாட்டை நிறைவேற்றுதல்;-

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரி சன ங்களையானாலும் அழிக்கிறதற்கு
வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல,
நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.(மத். 5;17)

6.ஜீவனைக் கொடுப்பதற்கு;-

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும்
வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப் படவு ம்
வந்தேன்.

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும்
கெட் டுப்போவதி ல்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வது மில்லை
(யோவான்.10;10.28)

7.ஆசாரங்களை நிவர்த்தி செய்தல்;-

அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக் கையை உறுதிப்படுத்தி, அந்த
வாரம் பாதி சென்றபோது பலியையும்
காணிக்கையையும் ஒழியப்பண் ணுவார்;

அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவா ன், நிர்ணயிக்கப்
பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்
றான்.(தானி.9;27)

8.வெளிப்படுத்தலின் முடிவு;-

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவ கையாகவும், தீர்க்கதரிசிகள்
மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி
நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச்
சர்வத்துக்கும்
சுதந்தரவாளி யாக நியமித்தார்,
இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

இவர் அவருடைய மகி மையின் பிரகாசமும், அவருடைய தன்மையின்
சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே
தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை
உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே
உட்கார்ந்தார். (எபி. 1;1-3)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.