இயேசுக்கிறிஸ்த்து பற்றிய சில முக்கிய குறிப்புகள் பாகம் - 4

எ.)இயேசு ஆராதிக்கப்பட்டார்

1.பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களால்.

பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப்
பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம்
அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச்
சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு
அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன்
என்றார்;

அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்து கொண்டு, அவரை
நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று
கேட்டான்.

அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன்
கால்களிலிருக்கிற பாதர ட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம்
பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.(யோசுவா. 5; 13-15)

2.சாத்தானால் ;-

அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன்
பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான் அவன் இயேசுவைத்
தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: Mar 5:7

இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை
வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த
சத்தமிட்டுச் சொன்னான். (மாற்கு. 5;2,6.)

3.மனிதர்களால்.;-

இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர்
அவர்தான் என்றார். உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி,
அவரைப் பணிந்துகொண்டான்.(யோவான். 9;37-38)

4.தேவதூதர்களால்.;-

மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்
யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். தேவதூதரைக்குறித்தோ:
தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை
அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று
சொல்லியிருக்கிறது.(எபிரேயர்.1;6-7)

5.சீஷர்கள்;-

அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு
எடுத்துக்கொள் ளப்பட்டார். அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த
சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும் பிவந்து, நாடோறும் தேவாலயத்திலே
தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.
(லூக்கா.24;51-53)

6.மகிமையிலுள்ள பரிசுத்தவான்கள்.;

இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும்
கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும்
எண்ணக் கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத்
தரித்து, தங்கள் கைகளில் குருத் தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு
முன்பாகவும் ஆட்டுக்குட்டியா னவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன்.
அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல்
வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக
என்று ஆர்ப்பரித்தார்கள்.(வெளி.7;9-10)

7.பூதலத்திலுள்ளசகலரும்.

இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோ ருடைய முழங்கால்
யாவும் முடங்கும்படிக்கும், Php 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக
இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும்,
எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத்
தந்தருளினார்.(பிலி.2;10-11)

(ஏ.) இயேசுவின் குணாம்சம்.

1.பரிசுத்தராக இருக்கிறார்.;

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்;
உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும்
பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். (லூக்கா.1;35)

2.நீதிமான்களாக்குகிறவர்;

அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என்
தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை
நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.(
ஏசாயா 53;11)

3.நியாயமுள்ளவராக இருக்கின்றார்.

சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி;
இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும்
இரட்சிக்கிறவரும் தாழ்மை யுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய
மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார். (சகரியா. 9;9)

4.வஞ்சனையற்றவராக இருக்கின்றார்.

அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; (1 பேதுரு. 2:22 )

5.பாவம் அறியாதவராக இருக்கின்றார்.

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை
நமக்காகப் பாவமாக்கினார். (2 கொரி. 5:21)

6.மாசற்றவராக இருக்கின்றார்.

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற
இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.( 1 பேதுரு.
1:19 )

7.களங்கமில்லாதவராக இருக்கின்றார்.;-

குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்
என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். (மத்..
27:4)

8.மனத்தாழ்மையுள்ளவராக இருக்கிறார்.;-

நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கி றேன்; என் நுகத்தை உங்கள்மேல்
ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள்
ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.( மத் 11:29)

9.இரக்கமுள்ளவராக இருக்கின்றார்.

அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக,
தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான
ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு
ஒப்பாகவேண்டியதாயிருந்தது. (எபிரேயர். 2:17)

10.தாழ்மையுள்ளவராக இருக்கின்றார். ;-

அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின்
மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
(பிலிப்பியர்.. 2:8)

11.மன்னிப்பு
கொடுக்கிறவராக இருக்கின்றார்.;-
(லூக்கா 23:34)

The End

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.