இயேசுக்கிறிஸ்த்து பற்றிய சில முக்கிய குறிப்புகள் பாகம் - 2

ஈ.)இயேசுவின்பண்புகள்:

1.சகல அதிகாரமுடையவர்.;-

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும்
பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.(மத்.28;18)

2.எல்லாம் அறிந்தவர்;-

அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
(கொலோ.2;3)

3.எங்கும் இருப்பவர்.

ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே
கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
(மத்.18;20)

4.நித்தியமானவர்.;-

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த
வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு
முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான்
சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
(யோவான்.1;1,2,15.)

(உ.) இயேசுமனிதனாகுதல்:

1.முன்னறிவிக்கப்பட்டது.;-

உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்
டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்
என்றார்.
(ஆதி.3;15)

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான்
என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும்
ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய
சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்;
இரண்டாம்மனுஷன்வானத்திலிருந்து வந்த கர்த்தர்.
(1.கொரி. 15;45-47)

1.மனித
இயல்புள்ளவரானார்:-

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்,
நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு
ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.(யோவான்.1;14)

என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை
ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த
இயேசு மரணத்தை உத்தரித் ததினிமித்தம்
மகிமையினாலும் கனத்தினாலும்
முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

ஏனென்றால் தமக்காகவும்
தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில்
கொண்டுவந்து சேர் க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை
உபத்திரவ ங்களினாலே பூரணப்படுத்துகிறது
அவரு க்கேற்றதாயிருந்தது.

எப்படியெனில்,
பரிசுத்த ஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களு மாகிய யாவரும் ஒருவராலே
உண்டாயிருக்கிறா ர்கள்;

இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்மு
டைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத்
துதித் துப் பாடுவேன்
என்று ம்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ,
நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க,
அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்;

மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே
அழிக்கும்படி க்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே
அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவ ரையும் விடுதலை பண்ணும்படிக்கும்
அப்படியானார்.

ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு
உதவியாகக் கைகொடுத்தார்.

அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி
செய் வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள
பிரதான ஆசாரியராயிருக்கு ம்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு
ஒப்பா
கவேண்டியதா யிருந்தது.

ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர்
சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக் கிறார். (எபி.2;9-18)

1. ஸ்திரியின் வித்து;-

காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்
திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்.
(கலாத்.4;5)

2.மனித குமாரன்.;-

ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
(லூக்.3;38)

3.ஒரே மனிதன்.;-

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லா
ரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு
அவரே;
(1.திமோ.2;5-6)

4.நான்கு சகோதர்ர்கள்;-

இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா
சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே
நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து
இடறலடைந்தார்கள்.(மாற்.6;3)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.