பாபிலோன் வரலாறு பாகம் 3

சுமேரியா(கி.மு 5000 - 3000)

ஆதி சுமேரியநாகரிகம்எப்படித்தோன்றியது இதுவரைக்கும்
கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஏறக்குறையகி.மு 5000 ஆண்டளவிலிருந்து
கி.மு 3000 ஆண்டுவரைஅங்கே ஒருகலாச்சாரம்இருந்ததாக ஆய்வாளர்கள்
கண்டுபிடித்திருக்கிறார்கள். பண்டைய நாகரிங்களில் மிகவும் புரதான
நாகரிகம் சுமேரியா. மெசொப்பத்தாமியாவில் தோன்றியது.அக்காடிய மொழியில்
சுமர் என்றால் காலச்சார நாடுஎன்று பொருள்படும். சுமேரியாவிலிருந்து தான்
நாகரீகங்களும், கலாச்சாரங்களும் தோன்றியிருக்கலாம் என்று சில
ஆய்வாளர்களின் கருத்து. ஆரம்ப காலங்களில் அதாப், எரிது, இசின், கிஷ்,
குலாப், லகாஷ், லார்சாம், நிப்பூர் அத்துடன் ஊர் ஆகிய பட்டணங்கள்
இருந்தன. ஏறக்குறைய கி.மு 2800 ஆம் ஆண்டுகளில் பல்வேறு ராஜாக்களின்
ஆட்சியில் இருந்தன. இவைகள் புரதான சுமேரிய நாகரிகத்தை சார்ந்தவை.
இதுவரைக்கும் தெரிந்தவரையில்சுமேரியாவின்முதலாவது மன்னன் எத்தனா. இவன்
கிஷ்; பட்டணத்தின் மன்னன்.

உருக்(கி.மு 3000 - 2000)

புரதான நகரமாகியஉருக்கைஅராபியர்கள்வர்க்காஎன்று
அழைத்தனர்.வேதாகமத்தில்எரேக்என்று அழைக்கப்பட்டிருக்கின்றது.
சுமேரியாவின் தலைநகராக உருக் விளங்கியது. கில்காமேஷின் கதையும்
இந்தக்காலங்களில் தான் உருவாகியது. ஐபிராத்து நதியண்டையில் இந்த பட்டணம்
அமைந்திருந்தது. இப்போது ஐபிராத்து நதி 12 மைலுக்கு அப்பால் பாய்கின்றது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஐபிராத்து நதி பாய்கின்ற பாதை சிறிது
அகன்றிருக்கின்றது.உருக் எனும் வார்த்தையே ஈராக் ஆக திரிபு பெற்றது.
உருக் மக்கள் பெண் தெய்வத்தை வழிபட்டனர்.

ஊர்(கி.மு 2600 - 2000)

ஊர்மிகவும் முக்கியம் வாய்ந்த சுமேரிய நகரம். இந்தப்பட்டணம் ஈராக்கின்
தென் பகுதியில் அமைந்திருந்தது. ஆபிரகாமும் இந்தப்பட்டணத்தை சேரந்தவன்.
அக்காடிய இராச்சியத்திற்கு பின்பு ஊர்- நம்மு (கி. மு 2100) எனும்
மன்னனால் சந்திரக்கடவுளுக்கு பெரிய சிகுரத் ஊர் பட்டணத்திலே
கட்டப்பட்டது.

லகாஷ்(கி.மு 2100 - 2000)

தென் மெசொப்பத்தாமியாவின் பகுதியில்லகாஷ்நகரம் அமைந்திருந்தது. லாகாஷீம்
சுமேரிய கண்டத்தின் ஒரு பகுதி. பின்பு அக்காடிய மக்களால் சுமேரியா
முழுவதும் கைப்பற்றப்பட்டு, அக்காடியாவின் ஆட்சிக்குட்பட்டது. சிறிது
காலங்களின் பின்னர் சுமேரியர்கள் அக்காடியih வென்றனர். லகாஷ் ஆண்ட
மன்னனுடைய பெயர்: குதேயா. இவன் சமாதானத்தை விரும்பி, நல்ல முறையில் ஆட்சி
செய்தான். நல்லவன் மட்டுமல்ல, பலமான ராச்சியத்தை ஸ்தாபித்தவனும் கூட.
இவன் சுமேரியாவிலே பல கோவில்களை கட்டினான்.லகாஷ் மக்கள் அநேக கடவுள்கள்
இருப்பதாக நம்பினார்கள். குதேயா தனக்கென்று ஒரு கடவுளை வைத்திருந்தான்.
கடவுளின் பெயர்: நின்கித்சிதா. இவனுடைய மரணத்தின் பின் இவனுடைய மகன்
லகாஷை ஆட்சி செய்தான்.

அக்காடியா(2371 - 2230)

ஆதி மெசொப்பத்தாமியாவின் தென்பகுதியில் சுமேரியாவும், வடபகுதியில்
பிற்கால பாபிலோனும் அமைந்திருந்தது. இந்த இரண்டு பட்டணங்களும் அல்லது
தேசங்களும் கி.மு 4000 நூற்றாண்டளவில் ஆரம்பமாகியது. அக்காத்(அக்காடியா)
தேசத்திலே அக்காத் எனும் பாஷை பேசப்பட்டது. இது ஒரு செமித்திய மொழி.
கி.மு 2340 ஆம் ஆண்டளவில்சார்கோன் மன்னனால் அக்காடிய இராச்சியம்
விரிவடைந்தது. அதன் பின்பு அக்காடியா தேசம் மிகவும் பிரபல்யம் ஆகியது.
அக்காடிய இராச்சியத்தின் வீழ்ச்சி நேரம் சுமேரிய முழுவதும் ஒரே
யுத்தக்களமாக இருந்தது. லகாஷை தவிர. லகாஷை குதேயா மன்னன் அரசாட்சி
செய்தான்.

செமித்தியர்

செமித்தியர் என்றால் அநேக ஜாதிகள் என்று பொருள்படும். இவர்கள் சேமுடைய
சந்ததியினர். இவர்கள் அராபிய, மெசொப்பத்தாமிய இடங்களில் வாழ்ந்தனர்.
இவர்களிலிருந்து பல ஜாதிகள் பிரிந்தது.இவர்கள் வம்சத்தில் தான்
கிறிஸ்துவும் பிறந்தார்.

ஏலாம்

தற்கால ஈரான். ஐபிராத்து நதியின் கிழக்குப்பகுதியில் அமைந்திருந்தது.
சுமேரிய மக்களின் நாகரிக காலத்திலே இவர்களது நாகரிகமும் ஆரம்பித்தது.
இவர்கள் நான்கு பெரிய பட்டணங்களில் வாழ்ந்தார்கள், அவான், அன்ஷான்,
சிமாஷ் அத்துடன் தலைநகர் சூசா. கலாச்சார ரீதியில் ஏலாம்
பின்தங்கியிருந்தது. அநேக காரியங்கள் அவர்கள்
மற்றக்கலாச்சாரங்களிலிருந்து பின்பற்றினார்கள்.எழுத்து வடிவம் சுமேரிய
மக்களிடத்திலிருந்தும் கட்டடக்கலையை பாபிலோனியர்களிடமிருந்தும்
பின்பற்றினர்.இவர்களுக்கென்று தனிப்பட்ட இலக்கியங்களோ, கடவுள்களோ
இருந்ததாக தெரியவில்லை. ஏலாமியருடைய பாஷை வேறு மொழிகளுடன்
தொடர்பாயிருக்கவில்லை. இவர்களுடைய மொழியிலிருந்து வேறு மொழிகளும்
உருவாகவில்லை. கி.மு 2200 அளவில் எலாம் ஊர் இராச்சியத்தின் கீழ் வந்தது.
கி.மு 2000 அளவில் எலாம் வலுப்பெற்று, ஊர் இராச்சியத்தை கைப்பற்றியது.
ஏறக்குறைய கி.மு 1600 அளவில் கஸித்ஸ் இராச்சியம் எலாமை மேற்கொண்டது. கி.
மு 1160 எலாம் மீண்டும் வலுப்பெற்றது. கஸித்ஸ்-ஐயும் பாபிலோனியாவையும்
மேற்கொள்ளும் அளவிற்கு வலுப்பெற்றது. ஆனால் முதலாவது நேபுகாத் நேச்சரால்
கி.மு 1120 ஆண்டளவில் எலாம் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் எலாம் கி.மு
750 அளவில் வளர்ந்தது. ஆனால் அசீரியர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதன்
பின்பு மேதிய இராஜாக்களினால் மேற்கொள்ளப்பட்டது.

ஹைத்திஸ்

இவர்களுடைய ஆரம்பம் எப்படியென்று தெரியவில்லை என்றாலும், இவர்களுடைய மொழி
இந்தோ-ஐரோப்பிய மொழிகளை சார்ந்தது.இவர்களை ஹத்துசாஸ் என்றும் அழைப்பர்.
கி.மு 1595 அளவில் இவர்களினால் பாபிலோனிய இராச்சியம் கைப்பற்றப்பட்டது.

கஸித்ஸ்

இவர்களும் இந்தோ- ஐரோப்பிய மொழிகளைப்பேசிய மக்கள். இவர்களும் ஹைத்திஸ்
மக்களைப்போலவே மெசொப்பத்தாமியாவுக்குள் உட்புகுந்தனர், கி.மு 1590 ஆம்
ஆண்டளவில் இவர்கள் பாபிலோனியாவை கைப்பற்றினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.