பாபிலோன் வரலாறு பாகம் 4

கால அட்டவணை

மெசொப்பத்தாமியா - சரித்திர காலம்

சுமேரியா (கி.மு 3100 - கி.மு 2000)
கில்காமேஷ்
சுமேரிய மொழி
கலை
இந்தியாவுடன் தொடர்பு
அக்காடியா (கி.மு 2350- கி.மு 2200)
சார்கோன்
பாபிலோனியா(கி.ம ு 2000- கி.மு 1600)
ஹம்முராபி மன்னனின் சட்டம்
நகரங்கள்
சமயம்.

1792- 1750 ஹம்முராபி
1595ஹைத்தியர்கள் பாபிலோனை கைப்பற்றுதல்
1590கஸித்ஸ் பாபிலோனை கைப்பற்றினார்கள்
1158எலாமியர்களினால் கைப்பற்றப்பட்டது
730அசீரியர்களின் ஆட்சிக்குட்பட்டது. அசீரிய மகாணம் ஆகியது
689சனகரிப் பாபிலோனை முற்றுமாக அழித்தான்
675அசீரிய மன்னனால் பாபிலோன் கட்டப்பட்டது
625கல்தேயர்கள் கைப்பற்றினார்கள்
605-562நேபுகாத் நேச்சார் 2
எருசலேம், சாலோமோன் கட்டிய தேவாலயமும் அழிக்கப்பட்டது
539பாரசீக மன்னன் கோரேசு 2 பாபிலோனை கைப்பற்றினான்.
482உள்நாட்டு கிளர்ச்சி, பல கோவில்கள் அழிக்கப்பட்டன
330மகா அலெக்ஸாந்தரினால் கைப்பற்றப்பட்டது
312செலுச்சியர்களினால் கைப்பற்றப்பட்டு, தலைநகராக்கினார்கள்.
290செலுச்சியர்கள் பாபிலோனை விட்டு விட்டார்கள்.

பாபிலோனிய இராஜாக்கள்
இராஜாக்கள் காலம் - அண்ணளவாக (கி.மு)

சுமு-அபும் 1894-1881
சுமு-இஸ்-இலும் 1880-1845
சபியும் 1844-1831
அபில்-சின் 1830-1813
சின்-முபல்லித் 1812-1793
ஹம்முராபி 1792-1750
ஸம்சு-இலுனா 1749-1712
அபி-எஷீ 1711-1684
அம்மி-டித்தானா 1683-1647
அம்மி-சதுக்கா 1646-1626
சம்சு-டித்தானா 1625-1595
அகும்I

ஒன்பது ஆட்சியாளர்கள் (இடை வெளி)
கஷ்திலியாஷ்
உலாம்பரியாஷ்
அகும்II
காரா இன்டாஷ்I
கதாஷ்மான் கார்பே
குரிகல்சுI
கதஷ்மான் என்லில் ஐ
புர்னபுரியாஷ் ஐஐ 1375-1347
காரா இன்டாஷ்II?
நாத்சி புகாஷ்
குரிகல்சுII1345-1324
நாத்சி மருத்தாஷ் 1323-1298
கதஷ்மான் துர்க்கு 1297-1280
கதஷ்மான் என்லில்II1279-1265
கஷ்திலியாஷ்IV1242-1235

பத்து ஆட்சியாளர்கள் (இடை வெளி) 1234 - 1125
நேபுகாத்நேச்சார்I1124 - 1103

மூன்று ஆட்சியாளர்கள் (இடை வெளி) 1102 - 1081
மர்டக் ஷபிக் ஷேர் மதி 1080 - 1068
அடாத் அப்பால் இதினம் 1067 - 1046

பதினைந்து ஆட்சியாளர்கள் (இடை வெளி) - 1045 ?
நபு அப்பால் இதின்

ஐந்து ஆட்சியாளர்கள் (இடை வெளி) - 747 ?
நபு நாசிர் 746 - 734
நபு நதின் சேர்
உக்கின் சேர் 732 - 727
திக்லாத் பிலேசர்III729 - 727
ஷல்மனாசேர்V
மெரொடொஹ் பலாதன் 721 - 711
சார்கோன்II710 - 705 இராஜா இல்லை - உப ஆட்சியாளர் புரட்சி
பெல் இப்னி 702 - 700
அஷீர் நதின் ஷீம் 699 - 694
நேர்கல் உஷேசிப்
முஷேசிப் மர்துக் 693 - 689
எசார் ஹடோன் 689 - 681 உப ஆட்சியாளர்
எசார் ஹடோன் 680 - 669 இராஜா
ஷமாஷ் ஷீம் உகின் 668 - 648
உள் நாட்டு சண்டை
கண்டலனு 647 - 626
சின் ஷார் இஷ்குன்
நெபுபொல்சார் 626 - 605
நேபுகாத் நேச்சார் ஐஐ 605 - 562
அமெல் மர்டக் 561 - 560 - எவில் மெர்தொஹ்
நெரிகிலிசார் 559 - 556
லபாஷ் மர்தொக் 556
நபு நயிட் 555 - 539

பாபிலோனிய வீழ்ச்சி 540 - பாரசீக மன்னன் கோரேஸ் பாபிலேனை கைப்பற்றுதல்.
தொங்கு தோட்டம்:
புரதான உலக அதிசயங்களில் ஒன்றான தொங்கு தோட்டம் பாபிலோனிலே நேபுகாத்
நேச்சரால் கட்டப்பட்டது. இதனைக்குறித்து கிரேக்க சரித்திர ஆசிரியர்
ஹீரோடஸ் (கி.மு 450) சொல்கிறார்: மகாபாபிலோனிய மன்னன் நேபுகாத் நேச்சார்,
தனது மனைவியாகிய அமித்திஸ் விருப்பத்தின்படி,(அவள் மேதிய
தேசத்திலிருந்துவந்தபடியினால், அங்கே இருக்கின்ற இயற்கை மாதிரி
பாபிலோனில் இல்லாததினாலும்)அவளுக்காக தொங்கு தோட்டத்தை கட்டினான் என்று.
1899-1917 Robert Koldeweyஎனும் ஜேர்மன் அகழ்வாராய்ச்சியளரால்
கண்டுபிடிக்கப்பட்ட தொங்குதோட்டத்தின் எஞ்சிய பகுதிகள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.