ஆரியர்கள் என்றால்யார்?பாகம் - 2

இக்காலத்துக்கு
முன்னால் வேத வேள்விப்
பழக்கம் இந்தியாவில்
இருந்ததற்கு சான்றுகளே
இல்லை. மேலும் இவனே
இந்திய வரலாற்றில்
அசுவமேதயாகம் செய்த
முதல் ஆளாகவும்
அறியப்படுகிறான்.

இவனின் காலத்தில்
மீண்டும் மேற்குப் பகுதி
கிரேக்கர்களின் வசம்
செல்கின்றது. பக்ட்ரியன்
(Bactria) இடத்தை ஆண்டு
வந்த டெமெத்ரிஉஸ்
(Demetrius) என்ற கிரேக்க
அரசன் காந்தாரத்தை
பிடிக்கின்றான்.

அதில்
இருந்து நீண்ட
காலத்துக்கு தட்சசீலம்
கிரேக்கர்களின்
கையிலேயே
இருக்கின்றது.
புஷ்யமித்ரனின் பின்னர்
அவனுடைய மகன்
அக்னிமித்திரன்
அரியணைக்கு
வருகின்றான். அவ்வாறே
சுங்கர்களின் ஆட்சி
தொடர்கின்றது.
வேத
வேள்வியும்
தொடர்கிறது.

வினை
விதைத்தவன் வினை
அறுப்பான் என்பதைப்
போல சுங்கர்களும்
ஆட்சியையும்
சூழ்ச்சியால் ஒரு
முடிவுக்கு
வருகின்றது.
இம்முறை ஆட்சியை
பிடிப்பவர்கள் கன்வர்கள்
(Kanvar). இவர்களும் ஒரு
பாரசீக இனக் குழுவை
சேர்ந்தவர்கள். இது நடப்பது
கி.மு முதல்
நூற்றாண்டில்.

இம்முறை ஆட்சியைப்
பிடிப்பவன் வாசுதேவன்
எனப்படும் ஒரு கன்வன்.
ஆனால் இவர்களின்
ஆட்சியையும் நீண்ட நாள்
நீடிக்கவில்லை கி.மு 75
இல் ஆரம்பித்த இவர்கள்
ஆட்சி கி.மு 26 இல்
முடிவடைகின்றது.

ஆட்சியை முடித்து
வைப்பவர்கள் தெற்கில்
இருந்து வந்த
சாதவாகனர்கள் (Satavahanas).
மௌரியப் பேரரசினை
அடுத்து அன்னியரின்
ஆட்சியினால் நிலவி
வந்த குழப்பத்தை இவர்கள்
ஒரு முடிவுக்கு
கொண்டு வருகின்றனர்.

அந்நியர்களின் ஆட்சி
தற்காலிகமாக ஒரு
முடிவுக்கு
இந்தியாவில்
வருகின்றது.
கி.பி மூன்றாம்
நூற்றாண்டு வரை
இவர்கள் ஆண்டு வந்தக்
காலத்தில் இந்தியா
அமைதி நிலவும் ஒரு
தேசமாக இருக்கின்றது.

ஆனால் கிரேக்கர்கள்
கைப்பற்றி இருந்த
மேற்குப் பகுதியிலோ
இன்னும்
ஆக்கிரமிப்புகள்
தொடர்ந்து கொண்டு
தான் இருந்தன. மேற்கில்
இருந்தும் சரி, மத்திய
ஆசியாவிலும்
இருந்தும் சரி அப்பகுதி
எப்பொழுதும்
தாக்குதலுக்கு
உட்பட்டுக் கொண்டே
இருந்தது.

கி.மு முதலாம்
நூற்றாண்டில் இருந்து
கி.பி முதலாம்
நூற்றாண்டு வரை
மேற்குப் பகுதி பல
மாற்றங்களைச் சந்தித்து
வந்து இருக்கின்றது.
கிரேக்கர்களின் வசம்
இருந்த காந்தாரப்
பகுதியை கி.மு
முதலாம் நூற்றாண்டில்
சகர்கள் (Sakar or Scythian)
தாக்கிக் கைப்
பற்றுகின்றனர். சகர்கள்
என்பவர்கள் ஒரு ஈரானிய
நாடோடி இனத்தவர்.

மத்திய ஆசியாவில்
இருந்த அவர்களை
குஷானர்கள் (Kushanars)
என்ற சீன நாடோடி
இனத்தவர் தோற்கடித்து
துரத்த சகர்கள்
இந்தியாவின் மேற்குப்
பகுதியில்
நுழைகின்றனர்.

இவர்களிடம் அக்னியை
வழிபடும் பழக்கம்
இருக்கின்றது.

அவ்வாறு மேற்குப்
பகுதியில் நுழைந்து
இன்றைய ஆப்கானிஸ்தான்
பகுதியை
பிடிக்கின்றனர்.

ஆனால் இவர்களால் நீண்ட
காலம் அங்கே ஆட்சியில்
நீடித்து இருக்க
முடியவில்லை.
அதற்குக் காரணம்
பார்தியர்களின் (Parthian)
படை எடுப்பு.

பார்தியர்கள் என்பவர்கள்
இன்னொரு இரானிய
நாடோடி இனத்தவரே.
சகர்களை விட பலம்
பொருந்திய இவர்களின்
முன் சகர்கள்
தோற்கின்றனர். காந்தாரம்
பார்தியர்களின் கை வசம்
செல்கின்றது.

அன்றிலிருந்து கி.பி
முதலாம் நூற்றாண்டு
வரை இவர்கள் வடமேற்கு
இந்தியாவினை ஆட்சி
செய்கின்றனர்.
இவ்வினத்தில் தான்
கொண்டாபோராஸ்
(Gondophares) என்ற அரசன்
இருக்கின்றான்.

கொண்டாபோராஸ் என்ற
இவனைத் தான்
இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவரான
தோமா சென்று
சந்தித்தார்.
வடமேற்கில் பல இரானிய
படையெடுப்புக்கள்
நிகழ்ந்து இறுதியில்
பார்தியர்கள் ஆட்சியில்
இருக்கின்றனர்.

மத்தியில்
சாதவாகனர்கள்
இருக்கின்றனர். தெற்கில்
பாண்டியர்களும்
சோழர்களும்
இருக்கின்றனர். மேலும்
நாம் புஷ்யமித்திர
சுங்கனைக் கண்டதுப்
போல் பல பல இந்திய
இரானிய இனத்தவர் வடக்கே
மக்களுள் இருக்கின்றனர்.
தெற்கே வணிகத்திற்காக
வந்த ரோமர்கள் சிலர் தமிழ்
மண்ணிலேயே தங்கியும்
இருக்கின்றனர்.

பொதுவாக
இந்தியாவில் அந்நியர்கள்
அதிகமாக இருக்கின்றனர்.
இதுவரை சமஸ்கிருதம்
குறித்தோ அல்லது
பிராமணர் சத்திரியர்
வைசியர் சூத்திரர் என்ற
பிரிவுகள்
இந்தியாவில்
நிலவியதாகவோ எந்த
ஒரு சான்றும் இல்லை.

இந்தியாவின் மேற்குப்
பகுதியில் பார்தியர்கள்
ஆண்டுக் கொண்டு
வந்தனர். ஆனால் அவர்களின்
ஆட்சி நீண்டக் காலம் நீடிக்க
வில்லை. அதற்குக்
காரணம் குஷானர்களின்
படையெடுப்பு.

சகர்களை
மத்திய ஆசியாவில்
இருந்து குசானர்கள்
துரத்தி அடித்தனர். அதே
குசானர்கள் தான்
இப்பொழுது மத்திய
ஆசியாவினைப்
பிடித்து இந்தியாவின்
மேற்கே வந்து
இருக்கின்றனர். இவர்களின்
முன் தாக்குப் பிடிக்க
முடியாது.

பார்தியர்களின் அரசு வீழ
மேற்கு இந்தியா
இப்பொழுது
குசானர்களின் வசம்
செல்கின்றது.
இந்த குசானர்கள் என்பவர்கள்
கிழக்கு மத்திய
ஆசியாவில் இருந்து
கிளம்பிய ஒரு சீன
நாடோடிக் கூட்டம்
ஆகும்.

அதாவது
பிற்காலத்தில்
வரலாற்றில் புகழ் பெற்ற
மங்கோல் இனத்தவரின்
முன்னோடிகள் இவர்கள்
என்றும் சொல்லலாம்.
ஆயிரம் வருட
முன்னோடிகள்.
அப்பேர்ப்பட்ட இவர்களின்
வலிமைக்கு முன்னால்
நிற்க முடியாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.