மகாஅலெக்சாண்டர் எல்லாத்தேசங்களையும்ஜெயித்துக் கொண்டு வரும்போது,
அவனுடைய சேனைகள் ஒருசமயம் எருசலேம் நகரத்தைக் கைப்பற்றுவதற்காய் வந்து
பாளயம் இறங்கியிருக்கின்றன.
அப்பொழுது எருசலேமிலிருந்த யூதர்களெல்லாரும் எருசலேம் தேவாலயத்திலே கூடி
ஆண்டவரை நோக்கி அபயமிட்டு ஜெபிக்க ஆரம்பிக்கிறார்கள்.
அப்பொழுது பிரதான ஆசாரியனாக இருந்தவனுடைய பெயர் சாடுவா, இந்தச்
சாடுவாஅன்றைய ஆராதனையை முடித்துவிட்டு, இரவு போய் படுத்துறங்குகிறான்.
அவனுக்குத் தரிசனத்திலே ஆண்டவர், அடுத்தநாள் அலெக்சாண்டரின்
படையெடுப்பிலிருந்து எருசலேமைக் காப்பாற்ற ஒரு ஆலோசனையைக் கொடுக்கிறார்,
அடுத்தநாள் கண்விழித்தவுடனே எருசலேமின் பிரதான ஆசாரியனான சாடுவா தனது
நகரத்தின் மக்களெல்லாரையும் கூப்பிடுகின்றான்.
லேவிகோத்திரத்தார் எல்லோரையும் கூப்பிடுகிறான்,
'எல்லோரும் என் பின்னதாய் வாருங்கள் நம்மீது படையெடுத்து வந்த
அலெக்சாண்டரை நாம் நேராய்ச் சந்திக்கப்போகலாம்' என்றுசொல்லி, எருசலேமின்
வாசல்களைத் திறந்து விட்டு தன்னுடைய லேவியப்பரிவாரங்களோடு சாடுவா
நடந்துவருவதை அலெக்சாண்டர் தன்னுடைய அரியணையிலே அமர்ந்துபார்க்கிறான்.
உடனே தனது அரியணையிலிருந்து இறங்கி, நேராகச் சாடுவாவைச் சந்திக்க
ஓடுகிறான். சாடுவாவை நெருங்கினவுடனே அவனுடைய தலையிலே கர்த்தருக்குப்
பரிசுத்தம் என்றபட்டம் கட்டப்பட்டிருக்கிறதைக்கண்டான்.
பிரதான ஆசாரியனுடைய தலையில் அவ்வாறு கட்டப்பட்டிருக்கும் என்று
வேதாகமத்தில் பார்க்கிறோம்,
கர்த்தருக்குப் பரிசுத்தம் என்ற பட்டை சாடுவாரின் தலையில்
கட்டப்பட்டிருக்கிறதை அலெக்சாண்டர் பார்த்தவுடனே, தாழவிழுந்து வணங்கிக்
கொள்கிறான்; உடனே சாடுவாவை தழுவிக்கொள்கிறான்.
அப்பொழுது அலெக்சாண்டர் படைத்தளபதிகள் நினைக்கின்றார்கள், 'இந்தச்
சாடுவாவை நாம் சிறைபிடிக்க வேண்டுமென்றும் இந்த எருசலேம் நகரத்தை
அழிக்கவேண்டும் என்றும் வந்திருக்கிறோம் அப்படியிருக்க அந்தச் சாடுவாவைப்
போய் அலெக்சாண்டர் தழுவிக் கொள்ளுகிறானே,
இவனுக்குப் புத்திதடுமாறிவிட்டதா!'
என்று
அப்பொழுது அலெக்சாண்டர் சொல்லுகிறான், 'என்னுடைய தளபதிகளே எனக்கு
புத்திபேதலிக்கவில்லை,நான் சுயநினைவோடு தான் இருக்கிறேன் நான்
மக்கடொனியாவில் இருந்து உலகமனைத்தையும் ஒருகுடையின் கீழ் ஆளவேண்டும்
என்று புறப்பட்டபோது ஒரு நாள் இரவிலே இதே சாடுவாவை நான் என்னுடைய
சொப்பனத்தில் கண்டேன்.
இதே சாடுவா இதே இரத்தாம்பர உடை அணிந்தவனாய் எனது சொப்பனத்திலே தோன்றினான்.
அவன் சொன்னான், எருசலேம் நகரத்தை நீ அழிக்காமல் சென்றால் அடுத்த
சாம்ராஜ்யத்தை உலகத்தில் நீ நிறுவுவாய்' என்பதாக.
நான் சொப்பனத்திலே கண்ட அதே சாடுவாவை என்கண் முன்னதாக 'நான்
பார்த்ததினால் அவனைத் தழுவிக்கொண்டேன்' மகா அலெக்சாண்டர் தொடர்ந்தும்
'நான் சாடுவாவை பணிந்து கொள்ளவில்லை, சாடுவாவிற்குப் பிரதான ஆசாரியர்
பட்டத்தைக் கொடுத்த இஸ்ரவேலின் தேவனைப் பணிந்து கொண்டேன்,
சாடுவாவையோ தழுவிக்கொண்டேன்'
இப்படிச் சொல்லவும் சாடுவா மகா அலெக்சாண்டரை எருசலேம் நகரத்துக்குள்
அழைத்துச் சென்றானாம். எருசலேம் நகரத்துக்குள் அழைத்துச் சென்று எருசலேம்
தேவாலயத்தை அலெக்சாண்டருக்குக் காண்பித்த பிறகு, எருசலேம் தேவாயத்திலுள்ள
தானியேல் தோல்சுருளை எடுத்து, 'மகா அலெக்சாண்டரே! உம்மைக் குறித்து 250
வருடங்களுக்கு முன்னதாய் எங்கள் தீர்க்கதரிசி முன்னறிவித் திருக்கின்றான்
தானியேலினால் முன்னறிவிக்கப்பட்ட ஒரு கொம்புள்ள வெள்ளாட்டுக்கடா நீதான்
அடுத்தசாம்ராஜ்யத்தைநீதான் உலகத்திலே நிறுவுவாய்.
'சாடுவா இப்படிச் சொல்ல அலெக்சாண்டரும் மகிழ்ந்து, உடனே எருசலேம்
தேவாலயத்திலே பலியிட்டு, எருசலேமை அழிக்காமல், யூதருக்கு வரிவிதிக்காமல்
சென்றான் என்ற சரித்திரக் குறிப்பை ப்ளேவியர் ஜொதிபர்ஸ் என்ற யூதசரித்திர
ஆராய்ச்சியாளர் எழுதிவைத்திருக்கிறார்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் பரிசுத்த வேதாகமத்தின் சம்பவங்கள்
சரித்திரபூர்வமாய் நிறைவேறுகின்றன என்பதை நிரூபிப்பதற்காகவே,
அப்படியே நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலையில் வெண்கலத்திற்கு
ஏற்ப கிரேக்கசாம்ராஜ்யம் உலகத்தை ஆண்டதாய்ப் பார்க்கிறோம்.
தொடரும்.....
———————————
Glory to JESUS - 8012978922
———————————
