திரித்துவம் பாகம் 2

மூன்று வெவ்வேறு நபர்கள்:-

* மூன்று பேரும் வெவ்வேறு நபர்கள் என்பதை லூக் 1:35 ல் பரிசுத்த
ஆவியானவர் நிழலிட்டார், பிறந்தவர் இயேசு, "அவர் தேவனுடைய குமாரன்"
என்பதால் அறிந்துக் கொள்கிறோம்.

* மத் 3:16-17 ல் இயேசு நிற்கிறார், ஆவியானவர் புறாவைபோல இறங்கி வந்தார்,
பிதா வானத்திலிருந்து பேசினார் இது இவர்கள் தனித்தனி நபர்கள் என்பதை
தெளிவுபடுத்துகிறது.

* யோவா 14:16 ல் இயேசு பிதாவை வேண்டிக்கொள்வதால் பிதா வோரொரு
தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவரை தந்தருளுகிறார் என்பதால் மூவரும்
வெவ்வேறு நபர்கள். வேண்டிக்கொள்கிறவர், வேண்டிக்கொள்ளப்படுகிறவர்,
தந்தருளுகிறவர்.

* ஏசா 11:1,2; 42:1; 48:16; 61:1,2; யோவா 1:33; அப் 2:33,34; 10:38; வெளி
1:4-6; 3:1 ஆகிய பகுதிகளை ஆராய்ந்தால் மூவரும் தனித்தனி நபர்கள் என்பதை
அறிந்துக் கொள்ளலாம்.

ஆவியானவர் தனி நபர்:-

* ஆவியானவர் வேரொரு தேற்றரவாளன் (யோவா 14:16,26; 15:26; 16:7,15).

* பிதாவிலும் குமாரனிலும் வேறுப்பட்டவராக காணப்பட்டுள்ளார் (மத் 3:16-17;
வெளி 4:5).

* இயேசு மகிமைபடும் வரை அவர் பிதாவிடமிருந்து அனுப்பபடவில்லை (யோவா
7:37-39; அப் 2:33-34).

* பிதாவும் குமாரனும் ஆவியானவரை அனுப்பினார்கள் (யோவா 14:16,26) என்பதால்
அனுப்பியவர்களிடமிருந்து அனுப்பபட்டவர் வேறுபட்டவர்.

* யோவா 14:16 ல் வேண்டிக்கொள்பவர் இயேசு, வேண்டுதலை கேட்கிறவர் பிதா,
அனுப்பபட்டவர் ஆவியானவர்.

* குமாரனக்கு விரோதமான தவறான சொற்க்கள் மன்னிக்கபடும், ஆவியானவருக்கு
விரோதமான சொற்க்கள் மன்னிக்கபடுவதில்லை (மத் 12:31,32; மாற் 3:29-30;
லூக் 12:10) என்பது இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பதற்க்கு சான்று.

* இயேசு உலகிற்கு கொடுக்கப்பட்டு (யோவா 3:16) இவ்வுலகில் மனிதனாக இருந்த
போது ஆவியானவர் கொடுக்கபடவில்லை (யோவா 7:39).

* ஆவியானவர் தம்மை மகிமைபடுத்த வராமல் இயேசுவை குறித்து பேசி அவரை
மகிமைபடுத்த வந்தார். (யோவா 16:7-15)

* கிறிஸ்து கருவுருவானதிலும் (லூக் 1:35)0இயேசுவின் ஞானஸ்நானத்தின்
போதும் (மத் 3:16) இயேசுவை வனாந்திரத்திற்க்கு கொண்டு சென்றதிலும் (மத்
4:1) ஆவியானவர் வேறுபட்டவர் என தெளிவாக தெரிகிறது.

இது போன்ற அநேக வேதபகுதிகள் ஆவியானவரின் தனி தன்மையை தெளிவுபடுத்துகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.