2 கொரிந்தியர் 2:11
சாத்தானாலே நாம்
மோசம்போகாதபடிக்கு,
அப்படிச் செய்தேன்;
அவனுடைய தந்திரங்கள்
நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.
பரிசுத்த வேதாகமம்
இங்கே இந்த வசனத்தில்
குறிப்பிட்டிருப்பது
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த
இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் அத்தனைபேரும்
சாத்தானாலே மோசம்போகாதபடி சாத்தானுடைய
தந்திரத்தை தெரிந்தவர்களாக இருக்கவேண்டும்
என்பதே.
சாத்தானின் தந்திரமான
கிரியைகளை நாம்
ஒவ்வொருவரும்
அறிந்திருப்போமானால்,
இறைவனுடைய வார்த்தைசொல்கிறபடி நம்மால்
சாத்தானின் கிரியைகளுக்கு எதிர்த்து நிற்க
முடியும்.
யாக்கோபு 4:7
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்;
பிசாசுக்கு எதிர்த்து
நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
சாத்தானின் தந்திரத்தை
அறியாவிடில், பரிசுத்த
வேதாகமம் மேலும்
சொல்லுகிறது,
I தீமோத்தேயு 4:1
ஆகிலும், ஆவியானவர்
வெளிப்படையாய்ச்
சொல்லுகிறபடி,
பிற்காலங்களிலே
மனச்சாட்சியில்
சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே
சிலர் வஞ்சிக்கிற
ஆவிகளுக்கும்
பிசாசுகளின்
உபதேசங்களுக்கும்
செவிகொடுத்து,
விசுவாசத்தைவிட்டு
விலகிப்போவார்கள்.
சாத்தான் தான் சரியானவன்
போலவும் தன்னைக்
காண்பிப்பான்.
தன்னுடைய காரியங்கள்
சரியெனவும் நியாயப்படுத்தவான்.
II கொரிந்தியர் 11:14 அது
ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத்
தரித்துக்கொள்வானே.
ஆகவே தேவனுடைய
பிள்ளைகள் ஒவ்வொரு
வரும் சாத்தானினதும்,
பிசாசினுடைய
காரியங்களுக்கும்
தங்களுடைய வாழ்க்கையில் இடம்கொடுக்கக்
கூடாது.
எபேசியர் 4:27
பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.
சாத்தான் பல வகைகளில்
இந்த உலத்தை தந்திரமாக
ஆளுகின்றான்.
தன்னுடைய காரியங்களை இந்த உலகத்தில்
விதைத்து அவனின்
தந்திரத்தை அறியாத பல
அப்பாவி மெய்க் கிறிஸ்தவர்களை மோசம் போக்குகின்றான்.
ஆகவே, இப்போதும்
அவனுடைய தந்திரங்களில் பிரதானமாக
இருக்கின்ற ஒரு
காரியத்தைப் பார்க்கப்போகின்றோம்.
சாத்தான் எப்படி?
யாரைக் கொண்டு இந்த
உலகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளான்?
03. சாத்தான் யாரைக் கொண்டு இந்த உலகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளான்
2 கொரிந்தியர் 11:13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள
வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத்
தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
கபடமுள்ள வேலையாட்கள்
இந்த உலகத்தில் பல குழுக்கள் சாத்தானின் நேரடி வேலையாட்களாக
இருக்கின்றனர். எத்தனை குழுக்கள் என்று கேட்கப்போனால் எண்ணமுடியாத அளவு
என்று விடை கிடைக்கும். ஆனாலும், நாம் குறிப்பிட்ட சில பிரதான குழுவைப்
பற்றி பார்க்கப்போகின்றோம்.
இந்தக் குழுக்கள் எப்படி செயல்படுகின்றன?
இந்தக் குழுக்களுக்கு தேவையான ஆலோசனைகள் - IDEAS எங்கிருந்து
பெறப்படுகின்றது என்பதைப்பற்றி பார்க்கப் போகின்றோம்.
சாத்தானுக்கு தான் எப்படியானவனாக இருக்கவேண்டும் என்கின்றதான ஆசை ஆதியில்
இருந்தே இருக்கின்றது. சாத்தானின் அந்த ஆசை என்னவென்று வேதத்தில்
சொல்லப்பட்டுள்ளது.
ஏசாயா 14:13-14 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு
மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக்
கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14.நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு
ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே
சாத்தான் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள திரளான ஜனங்களை ஆதியில்
இருந்தே வஞ்சித்து வருகின்றான். அதற்காக தனக்கு தொண்டு செய்கின்ற அநேகமான
குழுக்களை ஆதியிலிருந்தே உருவாக்கினான்.
அந்தக் குழுக்கள் எல்லாம் தேவனுடைய வசனத்திற்கு கீழ்ப்படியாமற்
போனதினிமித்தம் மற்ற ஜனங்களை காப்பாற்றும்படிக்கு இறைவன் அவர்களை
அழித்துப்போட்டார் என்று பல ஆதாரங்களை பரிசுத்த வேதத்தில் நாம்
பார்க்கின்றோம்.
04.கபட வேலையாட்கள் எப்படி செயற்பட்டார்கள்
* இராஜ்யங்கள் சாத்தானின் வேலையாட்களாக இருந்தது
* இரகசியக் குழுக்கள் சாத்தானின் வேலையாட்களாக இருக்கிறது
05.இராஜ்யங் கள்
வெளிப்படுத்தல் 17:10-11 அவர்கள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர்
விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது
அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்.
11. இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து
தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்.
இந்த இடத்திலே ஏழு வல்லரசுகளைக் குறித்து யோவான் தெரிவித்திருக்கின்றார்.
பரிசுத்த வேதாகமம் உரைத்தபடி
எகிப்திய,
அசீரிய,
பாபிலோனிய, மேதியப்பெர்சிய, கிரேக்க வல்லரசுகள் ஆண்டு முடிந்தாகிவிட்டன.
அப்போஸ்தலர் யோவானது காலத்தில் ஆறாவது வல்லரசாகிய ரோம சாம்ராஜ்யம் ஆண்டு
கொண்டிருந்தது.
இந்த ஆறு சாம்ராஜ்யங்களும் தேவனுக்கு எதிராகவே கிரியைகளை
நடப்பித்தவர்கள். இந்த இராஜ்யங்கள் இறைவன் விரும்பாத காரியங்களையே
செய்தவர்கள். இஸ்ரவேலர்களை மிகவும் கொடுமைப் படுத்தியவர்கள்.
ஏழாவதாய் ஒரு வல்லரசு எழும்பும் என்று இந்த வசனங்களிலிருந்து நாம்
அறிகிறோம் இந்த வல்லரசு எங்கிருந்து எழும்பும் என்பதை மறைப்பொருளாக
யோவானுக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.
Next
06.இரகசியக் குழுக்கள்
தொடரும்........