01.யார் சாத்தான்?

சாத்தான் என்ற ஒருவன்
இல்லவே இல்லை
அதெல்லாம் வெறும்
மனித கற்பனையே எனச்
சொல்கிறார்கள் நவீன
கல்விமான்கள் சிலர்.
இந்தக் கருத்து ஒன்றும்
புதிதல்ல.

சாத்தான்
நிஜமான ஆளா?
அப்படியென்றால், அவன்
எப்படித் தோன்றினான்?

உலகத்தை உலுக்கி
எடுக்கும் பிரச்சினைகளுக்குப் பின்னால்
மறைந்திருப்பது
அவன்தானா? என்பதும்
இவர்களது கேள்வி.

சாத்தான் என்பவன்
நிஜமான ஓர் ஆள்
என்பதாகவே பரிசுத்த
வேதாகமம் சொல்கிறது.
அவன் காணக்கூடாத
ஆவி மண்டலத்தில்
இருப்பதாகவும்
பரிசுத்த வேதாகமம்
குறிப்பிடுகிறது.

யோபு 1:6 ஒருநாள்
தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து
நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே
வந்து நின்றான்.

அவனுடைய பொல்லாத,
மூர்க்கமான குணங்களைப் பற்றியும் அவனுடைய கெட்ட செயல்களைப்
பற்றியும் பரிசுத்த
வேதாகமம் நமக்குச்
சொல்கிறது.

சாத்தான்
எப்படி மிக மோசமான
ஜீவியாக மாறினான்?

இறைவன் தேவதூதர்
களை படைத்தார்.
அவர்களில் ஒரு தூதன்
சாத்தானாக மாறிவிட்டான். அந்தத் தூதன்
படைக்கப்பட்டபோது
சாத்தான் என அழைக்கப்படவில்லை. சாத்தான்
என்பது அத்தூதன்
தள்ளப்பட்டபின் அவனுக்குக் கிடைத்த பட்டப்பெயரே. அந்தத் தூதன்
கடவுளுக்கு எதிராகச்
செயல்பட்டதால் சாத்தான்
என அழைக்கப்பட்டான்.

அந்த தூதன் சிருஷ்டிகர்
மீது பகையையும்
பொறாமையையும்
வளர்த்துக்கொண்டான்.
மற்றவர்கள் தன்னை வணங்க
வேண்டுமென
விரும்பினான்.

சாத்தான்
"சத்தியத்திலே
நிலைநிற்கவில்லை
(யோவான் 8:44).

அவன்
இறைவனைப் பொய்யராகக் குற்றஞ்சாட்டினான்.
ஆனால் உண்மையில்
அவன்தான் பொய்யன்.

இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியில், சாத்தான்
மிகவும் அழகுள்ளவனாய் சிருஷ்டிக்கப்பட்டான், பரலோகில்
தேவனுடைய சிங்காசனத்தண்டை சேவை
செய்யும் மிகவும்
வல்லமையுள்ள
தூதனாய் விளங்கினான்.

எசேக்கியேல் 28:13-15 நீ தேவனுடைய
தோட்டமாகிய ஏதேனில்
இருந்தவன்
பத்மராகம்
புஷ்பராகம்,
வைரம்,
படிகப்பச்சை, கோமேதகம்,
யஸ்பி,
இந்திரநீலம்,
மரகதம்,
மாணிக்கம்
முதலான சகவித
இரத்தினங்களும்
பொன்னும் உன்னை
மூடிக் கொண்டிருக்கிறது சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன்
மேளவாத்தியங்களும்
உன் நாகசுரங்களும்
உன்னிடத்தில் ஆயத்தப்பட்ட
ிருந்தது.

14. நீ காப்பாற்றுகிறதற்காக
அபிஷேகம் பண்ணப்பட்ட
கேருப்; தேவனுடைய
பரிசுத்த பர்வதத்தில்
உன்னை வைத்தேன்;
அக்கினிமயமான
கற்களின் நடுவே
உலாவினாய்.

15. நீ
சிருஷ்டிக்கப்பட்ட நாள்
துவக்கி உன்னில்
அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டதுமட்டும், உன்
வழிகளில் குறையற்றிருந்தாய்.

சாத்தான் பெருமைக்குள்ளானான், தன்னை
தேவனாக அறிவித்தான்.
இவன் தன் உபதேசத்தால்
அநேக தூதர்களை தன்
வசப்படுத்திக் கொண்டான். 1/3 தூதர்கள்
சாத்தானை பின்பற்றினர்.

வெளிப்படுத்தல் 12:4
அதின் வால் வானத்தின்
நட்சத்திரங்களில்
மூன்றிலொருபங்கை
இழுத்து, அவைகளைப்
பூமியில் விழத்தள்ளிற்று;

பிரசவ வேதனைப்படுகிற அந்த
ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே,
அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்
போடும்படிக்கு அந்த
வலுசர்ப்பம் அவளுக்கு
முன்பாக நின்றது.

அவன் ஆதாமையும்
ஏவாளையும், தேவனுக்கு கீழ்படியாமல்
போவதன் மூலம், அவர்கள்
நன்மை தீமை அறிந்து
தேவர்களைப்போல மாறமுடியும், என
வஞ்சித்தான்.

இதன்
பின்னர் சாத்தான்
இவ்வுலகை ஆழுகிறவனானான் (ஆதியாகமம்
3:1-7).

சாத்தான் கீழ்க்கண்டவாறு
அழைக்கப்படுகிறான்

a) அழிக்கிறவன்
(வெளிப்படுத்தல் 9:11).

b) சகோதரர்களை
குற்றப்படுத்துகிறவன்
(வெளிப்படுத்தல் 12:10).

c) எதிராளி (1
பேதுரு 5:8).

d) பெயல்செபூல்,
பிசாசுகளின் தலைவன்
(மத்தேயு 12:24).

e) முழு உலகையும்
மோசம்போக்குகிறவன்
(வெளிப்படுத்தல் 12:9).

f) வலுசர்ப்பம்
(வெளிப்படுத்தல் 12:9).

g) சத்துரு (மத்தேயு
13:28,29).

h) பொல்லாங்கன்
(மத்தேயு 13:19,38).

i) பொய்யின் பிதா
(யோவான் 8:44).

j) இப்பிரபஞ்சத்தின்
தேவன் (2 கொரிந்தியர்
4:4).

k) கொலைபாதகன்
(யோவான் 8:44)

l) ஆகாயத்து
அதிகாரப் பிரபு
(எபேசியர் 2:2).

m) இவ்வுலகத்தின்
அதிபதி (யோவான் 12:31;
14:30).

n) பழைய பாம்பு
(வெளிப்படுத்தல் 12:9).

o) சோதனைக்காரன்
(மத்தேயு 4:3; 1 தெசலோ
னிக்கேயர் 3:5).

p) மனதை குருடாக்
குகிறவன். (2 கொரிந்த
ியர் 4:4).

q) கர்ஜிக்கிற சிங்கம் (1
பேதுரு 5:8).

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.