இரகசிய சமூகம் 06 .இரகசியக் குழுக்கள்

06 .இரகசியக் குழுக்கள்

இந்தக் கடைசி நாட்களிலும் கூட சாத்தான் தனக்கு தொண்டு செய்யவென பல
குழுக்களை உருவாக்கியுள்ளான்.
இந்தக் குழுக்கள்"இரகசியக் குழுக்கள்"ஆகும்.

யார்? எதற்காக? என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் மறைவில் இயங்கும்.

இந்த இரகசியக் குழுக்கள் அனைத்துமே பொதுவாக பரிசுத்த வேதாகமம்
வெளிப்படுத்தும் பரிசுத்த இறைவனுக்கு எதிராக செயற்படும் சாத்தனின் வேலை
ஆட்களாகவே இருப்பார்கள்.

அரசியல், பொருளாதாரம்,
சமயம்,
கல்வி,
ஆயுத பலம், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற உலகின் முக்கிய துறைகள் மேல்
இக்குழுக்களின் கட்டுப்பாடு இருக்கும்.

உலகத்தில் சாத்தானின் வேலையாட்களாக பல இரகசியக் குழுக்கள் இருக்கின்றன.

இரகசியக் குழுக்கள் உறுப்பினர்கள் பெரும் பணக்காரர்கள். இவர்கள் யார்
யார் என்பது பரமரகசியமாக பல நூற்றாண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்து
வந்தது.

ஆனால் சமீபகாலங்களில் அது வெளியே வரத்தொடங்கியது. உலகத்தில் சாத்தானுக்கு
தொண்டு செய்யும் நூற்றுக்கணக்கான குழுக்கள் இருந்த போதிலும் 6 குழுக்கள்
மிகவும் முக்கிய தொண்டாற்றுபவையாகும்.

அவையாவன :-

01. PRIORY OF SION
02. BILDERBURG
03. THE CLUB OF ROME
04. FREEMASSONARY
05. SKULL AND BONES
06. COMMITEE OF 300

இந்த குழுக்களில் அதிமுக்கிய பிரதான அங்கங்கத்தினர் 13 குடும்பங்களை
சேர்ந்தவர்களே. இந்த 13 குடும்பங்களைத் தவிர இன்னும் பல குடும்பங்கள்
இருந்தாலும் இந்த 13 குடும்பங்களுக்கு அடுத்தவர்களாகவே மற்றக்
குடும்பங்கள் இருக்கின்றது.

இந்த 13 பிரதான குடும்பங்களே இந்த இரகசியக் குழுக்களினுடைய இரத்த நாளங்கள் ஆகும்.

இரகசியக் குழுக்களில் உள்ள 6000 க்கும் மேற்பட்டவர்களை 10 நிலைகளாக
(Degrees) பிரித்து வைத்திருக்கின்றார்கள்.

முதல் ஏழு நிலைகள் "சாதாரண நிலைகள்"என்றும், அதற்குமேல் மீதமுள்ள 3
நிலைகள் "ரகசிய நிலைகள்"என்றும் தரம்பிரிக்கப்பட்டுள்ளது.

பத்தாவது நிலையை அடைந்து எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொண்டவர்களில் 12
பேரைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆளும் குழுவை நியமித்து வைத்திருக்கிறார்கள்.
அதிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் "கிராண்ட் மாஸ்டர்"என்று
அழைக்கப்படுகின்றார். இப்பதவிகள் அவர் உயிர் வாழும்வரை தொடரும்.

இறைவன் தன் சித்தத்தின்படி தன் பிள்ளைகளை நடப்பிப்பதுபோல, சாத்தானும் இதே
வழியைப் பின்பற்றி தன்னைப் பின்பற்றுகிறவர்களிடத்தில் அதாவது
"கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில்" கிரியை செய்கின்றான்.

எபேசியர் 2:2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்ற
படியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற
ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்ற படியாகவும் நடந்துகொண்டீர்கள்.

இரட்சகர் இயேசுகிறிஸ்து அற்புதம் செய்தது போலவே, சாத்தானும் தன்
பக்தர்களைக் கொண்டு அற்புதங்கள் செய்கின்றான்.

2 தெசலோனிக்கேயர் 2:9-10 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய
செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும்,

10. கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித
வஞ்சகத்தோடும் இருக்கும்.

இரட்சிக்கப் படத்தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள்
அங்கிகரியாமற் போனபடியால் அப்படி நடக்கும்.

வெளிப்படுத்தல் 16:14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்;
அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில்
நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்கு
புறப்பட்டுப்போகிறது.

சாத்தான் உலகிற்கு இந்த இரகசியக் குழு மூலமாக போலியான பல வழிகளைக்
கற்பிக்கின்றான். அவை மனுஷனுக்கு செம்மையாய்த் தோன்றுகின்றது. ஆனால் அவை
மரண வழிகள்.

நீதிமொழிகள் 14:12 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு, அதின்
முடிவோ மரண வழிகள்.


07 இந்த 13 குடும்பத்தினுடைய ஆதிக்கம் எத்தகையது?

இந்த 13 குடும்பங்களும் ஒரே நாட்டவர்கள் அல்ல. பல நாட்டைச் சேர்ந்த
இவர்கள் அமெரிக்காவில் பெரிய அளவில் தங்கள் ஆதிக்கத்தை வைத்துள்ளார்கள்.

அதற்கு உதாரணமாக அமெரிக்கா தேசத்தின் நாணயத்தை சற்று அவதானித்துப்
பார்த்தாலே போதும்.

இந்தப் 13 குடும்பங்களும் யார் என அறிய ஆவலாயிருக்கின்றீர்களா??

தொடர்ந்தும் என்னுடன் பயணம் செய்யுங்கள்.

அமெரிக்க நாணயத்தின் படங்களை கீழே பாருங்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.