பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது
I தீமோத்தேயு 6: 6 -10
6. போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
7. உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும்
கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்.
8. உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக்
கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித
இச்சைகளிலும் விழுகிறார்கள்.
10. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து,
விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக்
குத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஐசுவரியவான்களே, கேளுங்கள்
யாக்கோபு 5 அதிகாரம் 1-6
1. ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும்
நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
2. உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின.
3. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு
உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள்
மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
4. இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால்
அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய,
கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
5. பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்;
கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப்
போஷித்தீர்கள்.
6. நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்;
அவன் உங்களோடே எதிர்த்து நிற்கவில்லை.
