மனிதனின் முடிவுபாகம்-3

ஊ). லூக்கா 16:23 இந்த வசனம் பாதாளத்திலும் நரகத்திலும் வேதனைகள் உண்டு
என்பதை விவரிக்கிறது (வெளி 20:10).

வெளி
20 அதிகாரம்

10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும்
கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே
தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும்
வாதிக்கப்படுவார்கள்.

* இழந்த வாய்ப்புகள்,

*மற்றவர்களுக்கு தீங்கு செய்தது,

*தவறாக நடந்தது,
மற்றவருக்கு உதவி செய்யாதது,

*தேவனை தேடாமலும் அவரை மகிமை படுத்தாமலும் இருந்தது,

* தேவனுடன் வாழும் மாபெரும் வாய்ப்பை இழந்தது,

* உலகில் தன்னை விட குறைவான நிலையில் இருந்தவர்கள் இப்பொழுது தேவனுடன்
மகிழ்ச்சியாக இருப்பது,

* தன்னுடைய உறவினர்களின் நிலை.

மேலே கூறிய பல காரணங்களால் அங்கே இருப்போருக்கு மன வேதனை இருக்கும்.

எ). லூக்கா 16:25 இங்கு செல்வந்தனாய் இருந்து பாதாளத்திற்க்கு சென்ற
மனிதனை ஆபிரகாம் "மகனே" என்று அழைத்தார்.

ஆபிரகாமின் மகனாக இருந்த போதிலும் அம்மனிதன் பாதாளத்திற்க்கு சென்றது போல
கிறிஸ்தவர்களாக பிறந்தவர்களும் பாவத்திலிருந்து மனந்திரும்பாமல்
மரணமடைந்தால் பாதாளத்திற்க்கு செல்ல நேரிடும்.

நண்மைகளை அனுபவிப்பது தவறல்ல. தன் வாசலில் இருந்த தேவையுள்ள மனிதனுக்கு
உதவி செய்யாமல் இருந்தது செல்வந்தனின் குற்றமாகும். தன்னலத்திற்க்கான
தண்டனை செல்வந்தனுக்கு கிடைத்தது.

ஏ). லூக்கா 16:29-31 இவ்வுலகில் இருக்கும் வேதாகமம்,
புத்தகங்கள்,
கைபிரதிகள்,
போதகர்கள்,
முகநூல்,
வாட்ஸ்ஆப் (Holy Friends group போல பல...)
நற்செய்தியாளர்கள்
போன்ற இன்னும் பல வழிகளில் வரும் செய்திகளுக்கு கீழ்ப்படியாமல் பாவத்தில்
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மரணமடைந்த ஒருவன் வந்து கூறினாலும்
பாவத்திலிருந்து மனந்திரும்ப மாட்டார்கள்.

நற்செய்தி அறிவிக்கும் பணியானது இவ்வுலகில் இருக்கும் விசுவாசிகளுக்கு
மட்டும் அளிக்கப்பட்டுள்ள மாபெரும் மாபெரும் பாக்கியம் ஆகும்.

நாம் இந்த மூன்று பாகங்களின் வாயிலாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல்
அல்லது ஏற்றுக்கொண்டும் துண்மார்கமாய் வாழ்ப்பவர்களின் முடிவு எப்படி
இருக்கும் என்று தெளிவாக பார்த்தோம்.

பாவத்தில் வாழ்ந்து பாவத்திலே மரிப்பவர்கள் பாதாளம் செல்கின்றனர்.

இப்படி பாதாளம் செல்லும் பாவிகளின் உள்ளான மனிதன் இயேசுவின் ஆயிரம் ஆண்டு
அரசாட்சி முடியும் போது அவரவர் சரீரங்களோடு உயிர்பிக்கப்பட்டு வெள்ளை
சிங்காசன நியாயதீர்ப்பை சந்திப்பார்கள். இதை வெளி 20:5,11-15 வசனங்கள்
விவரிக்கிறது வாசித்து பாருங்கள்.

வெளி
20 அதிகாரம்

5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.
இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

11. பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்
வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும்
வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப் படவில்லை.

12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக
நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம்
என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப்
புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே மரித்தோர் தங்கள் தங்கள்
கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள்.

13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும்
தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள்
கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்.

14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.

15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன்
அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

நியாயதீர்ப்பின் போது இவர்களின் பெயர்கள் ஜீவ புத்தகத்தில் இருக்காது
என்பதால் இரண்டாம் மரணமாகிய அக்கினி கடல் என்ற நரகத்தில்
தள்ளப்படுவார்கள். இதை வெளி 20:15; 21:8 ஆகிய வசனங்கள் கூறுகிறது.

வெளி
20 அதிகாரம்

15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன்
அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

வெளி
21 அதிகாரம்

8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும்,
கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும்,
விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய
அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

பாவத்தில் நிலைத்து, மனந்திரும்பாமல் வாழும் சகோதர சகோதிரிகளே.....

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இன்று நீங்கள் மரித்தால் உங்கள் முடிவு
எப்படி இருக்கும். அதன் கொடூரம் எப்படி இருக்கும் என்பதை வாசித்து
அறிந்து கொண்டும் இன்னும் கால தாமதம் ஏன்? இன்றே இயேசுவிடம் திரும்பு பாவ
மன்னிப்பை பெற்றுக்கொண்டு கர்த்தருடைய பிள்ளைகளாய் வாழுங்கள் கர்த்தருடைய
கிருபை உங்களோடு என்றும் இருக்கும் ஆமென்.

அடுத்து வரும் நான்காம் பாகத்தில் கர்த்தருடைய பிள்ளைகளின் முடிவை பற்றி
பார்க்கலாம்....

GOD Bless You.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.