ஆ) தெக்காப்பொலி, பெரேயா பிரதேசங்கள்:-
1) பெத்தாபாரா:
யோவான் நற்செய்தியில் (1:28) யோவான் ஸ்நானன் "யோர்தான் ஆற்றுக்கு
அக்கரையிலுள்ள பெத்தானியாவில்" ஞானஸ்நானம் கொடுத்ததாகக்
குறிப்பிடப்படுகிறது.
இந்த பெத்தானியாவும் எருசலேம் நகருக்குக் கிழக்கே இருந்த பெத்தானியா
ஊரும் (காண்க: யோவான் 11:1-54) வெவ்வேறு இடங்கள் ஆகும்.
யோவான் ஞானஸ்நானம் அளித்த இடம் பெத்தாபாரா என்றும் அழைக்கப்படுகிறது. இது
பெரேயா பகுதியில் இருந்தது.
2) தெக்காப்பொலி:
தெக்காப்பொலி என்றால் கிரேக்கத்தில் "பத்து நகரங்கள்" என்று பொருள்.
பண்டைக் கால ரோமப் பேரரசின் கிழக்கு எல்லையில் அமைந்த இந்நகரங்கள் இன்றைய
யோர்தான், சிரியா நாடுகளில் இருந்தவை.
தெக்காப்பொலி பகுதியில் கிரேக்க கலாச்சாரம் பரவியிருந்தது. அப்பகுதி
மக்களை யூதர் பிற இனத்தாராகக் கருதினார்கள். இங்கு இயேசு காது கேளாத,
திக்கிப் பேசிய ஒருவருக்கு குணமளித்தார் (மாற்கு 7:3137).
3) கதரேனர் (கெரசேனர்) பகுதி:
கதரேனர் அல்லது கெரசேனர் பகுதியில் இயேசு பேய்பிடித்த ஒரு மனிதருக்கு
நலமளித்த செய்தி நற்செய்தியில் உள்ளது (மாற்கு 5:1-20; மத் 8:28-34; லூக்
8:26-39).
இ) சமாரியா:-
1) கடலோர செசரியா:
இது ஒரு துறைமுக நகராக இருந்தது. இங்கு 1961இல் ஒரு முக்கியமான
கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. அதாவது "பொந்தியு பிலாத்து" என்ற ரோம ஆளுநரின்
பெயர் பொறிக்கப் பட்டிருந்த ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
பிலாத்து என்பவர் தான் இயேசுவுக்கு மரண தண்டனை அளித்து, அவரைச்
சிலுவையில் அறையச் செய்தவர். இவருடைய பெயர் விவிலியத்துக்குப் புறம்பே
அகழ்வாய்வு வழியாகக் கிடைப்பது இதுவே முதல் தடவை.
2) சிக்கார்:
யோவான் நற்செய்தி 4:4-26 பகுதியில் சிக்கார் என்ற ஊரில் இயேசு ஒரு
சமாரியப் பெண்ணைக் கிணற்றங்கரை அருகே சந்தித்து உரையாடிய நிகழ்ச்சி
உள்ளது. அப்பெண்ணுக்கு இயேசு அறிவுரை கூறினார். இயேசு அப்பெண்ணிடம்,
"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம்
எடுக்காது" என்று கூறினார்.
முந்தைய பதிப்புகளுக்கு
http://bibletreasure.wapka.mobi