வேதம் நாம் இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்பதை மட்டும் அல்ல நாம் செய்ய
வேண்டிய கிரியைகளை பற்றியும் கூறுகிறது.
நிலைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை:-
கீழே கொடுக்கப்படும் வசனங்களை நன்றாக கவனியுங்கள்:
1. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் (மத் 3:10).
2. உப்பானது சாறமற்று போனால் பயனற்றதாகும் (மத் 5:13).
3. மற்றவர்களுக்கு மன்னிக்கிறவர்களுக்கே மன்னிப்பு உண்டு (மத் 6:14-15).
மன்னிப்பு பெற்றவன் மற்றவர்களை மன்னிக்க தவறினால் "மன்னிப்பை இழந்து
போவான்" (மத் 18:23-35).
4. தகப்பனையாவது தாயையாவது இயேசுவிலும் அதிகமாக நேசிக்கிறவன், தன்
சிலுவையை எடுத்துக் கொண்டு கர்த்தரை பின்பற்றாதவன் தகுதியுடையவன் அல்ல
(மத் 10:37-38).
5. வசனத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு பின்பு இடறலடையும் மக்கள் உண்டு
(மத் 13:20-21).
6. முடிவு பரியந்தமும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கபடுவான் (மத் 10:22; 24:13).
7. கண்ணிகைகளாக இருந்த போதிலும் எண்ணெயை எடுத்து வராதவர்கள் ஏற்றுக்கொள்ள
படவில்லை (மத் 25:1-13).
8. தாலந்து பெற்ற ஊழியர், தான் பெற்ற தாலந்தை பயன்படுத்தாவிடில்
நரகத்தில் தள்ளப்படுவார் (மத் 25:30).
9. கிறிஸ்துவில் நிலைத்திராதவன் வெளியே எரியுன்ட கொடியைபோல உலர்ந்து
போவான். அப்படி பட்டவற்றை அக்கினியில் (அப்படிப்பட்டவர்களை நரகத்தில்)
போடுவார்கள் (15:6).
10. ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத
இருதயம் இல்லாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாவத்தின்
வஞ்சைனையினால் கடினப்பட்டு போகாமல் இருக்க வேண்டும் (எபி 3:12-13).
11. பின்வாங்கி போனவனாக காணப்படாதபடிக்கு பயந்திருக்க வேண்டும் (எபி
4:1). பின்வாங்கி போகிறவன் மீது கர்த்தருடைய ஆத்துமா பிரியமாய் இராது
(எபி 10:38).
12. கீழ்ப்படியாமையினாலே விழுந்து போகாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க
வேண்டும் (எபி 4:11).
13. ஜெயங்கொண்டு முடிவு பரியந்தம் கர்த்தருடைய செயல்களை கைக் கொள்வதின்
முக்கியதுவத்தை வெளி 2,3 ஆம் அதிகாரங்களில் காணலாம்.
14. ஜீவ புத்தகத்தில் இருந்து பெயரை நீக்குதல் உண்டு (வெளி 22:19).
15. மற்றவர்களுக்கு தேவ செய்தி அளிக்கும் பவுலை போன்ற சிறந்த ஊழியரும்
ஆகாதவனாய் போக முடியும் (1கொரி 9:27).
மறுதலித்து நிந்திக்கிறவர்களின் நிலை:-
இரட்சிக்கபட்டும் பின்மாற்றம் அடைபவர்கள் உண்டு என்பதற்கு எபி 6:4-6
உறுதியான சான்று ஆகும்.
இப்படிபட்டவர்கள் இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானபடுத்துகிற
படியால் இவர்களை புதுபிப்பது கூடாத காரியம்.
நரகத்தில் தள்ளப்படுவதே இவர்களின் முடிவு (எபி 6:8).
இப்படிப்படவர்களை குறித்து எபி 10:29 தெளிவாக கூறுகிறது.
என்றென்றுமான பாதுகாப்பு உண்டா?:-
இயேசுவை விசுவாசித்து ஏற்றுகொள்ளும் போது தேவனுடைய பிள்ளைகளாகிறோம் (யோவா
1:12-13) என்பதும் யாரும் அவர்களை தேவனுடைய கரத்திலிருந்து
பறித்துக்கொள்ள முடியாது (யோவா 10:28-29) என்பதும் எதுவும்
கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு பிரிக்கமாட்டாது (ரோம 8:38-39)
என்பதும் உண்மை தான்.
ஆனாலும்,
மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் விருப்படி நடப்பதற்கு தேவன் உரிமை
அளித்துள்ளார். அதை திரும்ப பெற மாட்டார்.
எனவே எந்த நிலையில் கிறிஸ்துவுகுள் இருக்கும் மனிதரும் தங்கள் சுய
இச்சைகளில் சிக்குண்டு பாவத்தில் விழுவதும் (யாக் 1:14-16) பாவத்தை
விரும்பி தேவனை விட்டு பிரிந்து செல்வதும் நடக்க கூடியதே. அவ்வாறு
பாவத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் விசுவாசத்தை விட்டு விலகி போவார்கள்.
தவறான நம்பிக்கை அழிவில் சேர்க்கும்:-
1. தேவாலயத்திற்குள் நுழையும் அந்நியர் உடனே மரிப்பர் என்றும் தாவீதின்
வம்சத்தாரின் ஆட்சி தொடர்ந்து என்றென்றும் இருக்கும் என்று வேதம்
கூறுவதால் யாரும் எருசலேமை கை பற்ற முடியாது என யூதர்கள் நம்பினர்.
எனவே தான் எரேமியா போன்றவர்களுக்கு செவி கொடுக்கவில்லை. பாவத்தை விடவுமில்லை.
இறுதியில் எருசலேம் கைபற்றப்பட்டு ஆலயம் தீக்கு இறையானது.
2. தகப்பனுக்கு கீழ்ப்படிந்து பெரியோரை மதித்த சவுல் (1சாமு 9) தேவனால்
புது இதயத்தையும் (1சாமு10:9) ஆவியையும் (1சாமு 10:10) பெற்றிருந்தும்
பின்மாற்றம் அடைந்தான்.
3. லோத்து மனைவி தூதரால் காபாற்றபட்டும் திரும்பி பார்த்ததால் உப்பு
தூனானாள். இயேசு இந்த உண்மையை வலிவுறுத்தும் விதமாக அவளை நினைத்து
கொள்ளுங்கள் என எச்சரித்தார் (லூக்கா 17:32).
4. அடிமை தனத்திலிருந்து விடுவிக்கபட்டு மேகம் சமுத்திரத்தால் ஞானஸ்நானம்
பெற்றும் காணான காண முடியவில்லை என்ற எச்சரிக்கையை புதிய ஏற்பாடு
தருகிறது (1கொரி 10:1-11).
நாம் இந்த இரண்டு பாகங்களிலும் பார்த்தது இரட்சிக்கப்பட்டவர்களின் நிலையை
தான் என்பதை கவனியுங்கள்.
கொல்கோதா மலையில் நாம் இருந்தாலும் கிருபையின் காலத்தில் வாழ்ந்தாலும்
நாம் செய்ய வேண்டிய கிரியைகள் உள்ளன என்பதை வேதம் தெளிவாக கூறுகிறது.
விசுவாசத்தினால் நாம் பெற்ற இரட்சிப்பை இழந்து போக முடியும் என்பதையும்
வேதம் கூறுகிறது.
ஜீவ புத்தகத்தில் பெயர் இருந்தாலும் நாம் செய்ய வேண்டியதை கைக்கொள்ள
வேண்டியதை மறந்தால் கிரிக்கி போடும் ஆபத்தும் உள்ளது.
அனனியா சபீராள் இரட்ச்சிக்கபட்டு இருந்தும் அதை இழந்து போனார்கள் என்பதை
நினைவு கூறுவோம்.
"தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாய்
இருக்கக்கடவன்" (1கொரி 10:12).