הַר הַזֵּיתִים,Har HaZeitim
جبل الزيتون, الطور,Jabal az-Zaytūn
உயரம் 826 மீ (2,710 அடி)
ஒலிவ மலை (Mount of Olives அல்லது Mount Olivet, எபிரேயம்: הַר
הַזֵּיתִים,Har HaZeitim; அரபு மொழி: جبل الزيتون, الطور,Jabal
az-Zaytūn,Aț-Țūr) என்பது எருசலேம் பழைய நகருடன் கிழக்கிலிருந்து இணையும்
மலைத் தொடராகும்.
இதன் சரிவுப் பகுதிகளை ஒலிவ மரங்கள் மூடியிருந்ததால் இதற்கு ஒலிவ மலை
என்ற பெயர் கிடைத்தது.
இதன் தென் பகுதி பண்டைய யூதேய அரசின் இடுகாடாக இருந்தது.
இம்மலை யூதப் பாரம்பரியத்தின் மத்தியமாக இருக்கிறது.
இது 3,000 வருடங்களாக யூதர்களின் இடுகாடாக இருந்து வந்து, கிட்டத்தட்ட
150,000 சமாதிகளைக் கொண்டுள்ளது.
இயேசுவின் வாழ்வின் சில முக்கிய சம்பவங்கள் நற்செய்திகளில்
தொடர்புள்ளவாறு இங்கு இடம்பெற்றுள்ளன.
அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் இங்கிருந்து தான் இயேசு பரமேறி சென்றார்
எனக் குறிப்பிடுகின்றது.
இயேசுவுடனும் மரியாளுடனும் இப்பகுதி தொடர்பு பெறுவதால் பண்டைய
காலந்தொட்டு இன்று முதல் கிறித்தவர்களின் வழிபாட்டுத் தளமாகவும் கிழக்கு,
கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து கிறித்தவர்களின் முக்கிய யாத்திரைத்
தளமாகவும் இது விளங்குகின்றது.