(அ.) இயேசுக்கிறிஸ்த்து
ஆதியில் இருந்தவர்:
1.பழைய ஏற்பாட்டில் உறுதி செய்யப்பட்டவர்.;-
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய
குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்
(சங்.2;7)
2.கிறிஸ்த்து, தன்னை உறுதி செய்தார்.;-
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிற தற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று
மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான்.8;58)
3.அப்போஸ்தலர்களால் உறுதிசெய்யப்பட்டவர்;-
அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூ பமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின
பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்க ப்பட்டது;
பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ள
வைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும்,
சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங் களானாலும், துரைத்தனங்களானாலும்,
அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக் கென்றும்
சிருஷ்டிக்கப்பட்டது.
அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலை நிற் கிறது.
அவரே சபையாகிய
சரீ ரத்துக்குத் தலையானவர்;
எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து
எழுந்த முதற்பேறுமானவர். சகல பரிபூரணமும் அவருக்குள்ளே
வாசமாயிருக்கவும்,
(கொலோ.1;15-19)
(ஆ.) இயேசுவின் பிறப்பு:
1.முன்னறிவிக்கப்பட்டது.
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு
அடையாள த்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப்
பெறுவாள், அவருக்கு
இம்மானுவேல் என்று பேரிடுவாள்.(ஏசாயா.7;14)
2.நிறைவேற்றப்பட்டது;-
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள்
யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள்
பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த
மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.
அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையி,
கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காண ப்பட்டு: தாவீதின்
குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்
படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
அவள் ஒரு குமாரனை ப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக;
ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்
என்றான்.
தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி
இதெல்லாம் நடந்தது.
அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு
இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல்
என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். Mat 1:24
யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக்
கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; அவள் தன் முதற் பேறான
குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று
பேரிட்டான். (மத்.1;18-25)
3.காலம் நிறைவேறியபோது;-.
நாம் புத்திர
சுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை
மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறை வேறினபோது, ஸ்திரீயினிடத்திற்
பிறந்தவரும் நியாயப்பிர மாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத்
தேவன் அனுப்பினார். (கலாத்.4;4-5)
(இ.) இயேசுவின் தெய்வீகப்பண்பு:
1.முன்னறிவிப்பு;-
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர்1,
ஆலோசனைக் கர்த்தா2, வல்லமையுள்ள தேவன்3, நித்திய பிதா4,
சமாதானப்பிரபு5
என்னப்படும். (ஏசாயா.9;6)
2.கிறிஸ்த்துவாலும் ஏற்றுக் கொள்ளப்படல்;-.
தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என்
ஆண்ட வரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே
விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்
என்றார்.(யோவான்.20;28-29)
3.சாட்சிகளால்
அங்கீகரிக்கப்படல்.;-
*.ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த
வார்த்தை தேவனாயிருந்தது. (யோவான்.1;1)
*.அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும்
நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்;
அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே
இருந்தது.(யோவான்.1;14)
*.தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற
ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான்.1;18)
4. அப்போஸ்தலர்களால் உறுதிசெய்யப்படல்.;-
*.பிதாக்கள்
அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே,
இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்.
ஆமென்.
(ரோமர்.9;5)
*.குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம்
என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள
செங்கோலாயிருக்கிறது.(எபிரே.1;18)
