பாபேல் கோபுரம்:
கிரேக்க மொழியில் பாபேலை பாபிலோன் என்று அழைப்பர்.
ஆதியாகமம் 10: 8 - 10கூஷ்நிம்ரோதைப்பெற்றான். இவன் ப மியிலே
பராக்கிரமசாலியானான்.சிநெயார்தேசத்திலுள்ளபாபேல், ஏரேக், அக்காத் கல்னே
என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்.பாபேல் எனும்
வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது (1.தாறுமாறு-
குழப்பம்: Babel2.கடவுளின் வாசல்: Babilani) . பாபேல் கோபுரம் பாபிலோனிலே
கட்டப்பட்டதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லாத போதிலும், அநேகரால்
நம்பப்படுகின்றது . பாபிலோனிலே இருந்திக்க வேண்டுமென்று..
ஆதியாகமம் 11: 1- 9வசனங்களில் பாபேல் கோபுரத்தைப்பற்றிய சம்பவத்தை நாம்
வேதாகமத்தில் வாசிக்கலாம்.
கோபுரத்தை தேவன் நிறுத்தியதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றது.
*.
இன்னொரு தடவை ஜலப்பிரளயம் (நோவா காலத்தில் ஏற்பட்டது போல) வந்தால்..
அதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கென்று, ஏனென்றால் ஜலப்பிரளயம்
ஏற்பட்டு சில நூற்றாண்டுகளுக்கு பின்பே பாபேல் கோபுரம் கட்டப்பட்டது.
*.
ஜனங்கள் தங்களுக்கு பெயர் உண்டாக வேண்டுமென்று.. கட்டினார்கள்..
பாபேல் ஆய்வுக்கட்டுரை
எல்லா விதத்திலும் ஒரே சிந்தையுடையவர்களாக இருந்தார்கள்: 11:4 பின்னும்
அவர்கள்: நாம் ப மியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு
நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி,
நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
11:3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம்
வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
இந்த வசனங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்களுடைய எண்ணம் முழுவதும்
ஒரே நோக்கமாக இருந்தது என்று அறியலாம். அதில் நாம் மற்றும் வாருங்கள்
எனும் வசனங்களை கவனியுங்கள். அதனுடைய அழுத்தம் அதிகம்.
*.
நகரத்தையும்
ஒரு நாட்டினுடைய அரசியல், ஆட்சி, மற்றும் பொருளாதாரம் அந்த நாட்டின்
கட்டடங்களில் தெரியும். ஒரு நாட்டினுடைய நகரங்களை வைத்து அந்த நாட்டை எடை
போடுவர்.
வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி
தற்காலங்களில் கூட காணலாம் ஒவ்வொரு நாடும் பெரிய, பெரிய கட்டடங்களையும்,
கோபுரங்களையும் கட்ட விரும்புவதை. எவ்வளவு பெரிய கட்டங்களை
கட்டுகின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களுடைய அதிகாரமும், பலமும் தெரியும்.
அவர்களுடைய நோக்கம் வானத்தை தொடுவாதாக இருந்தது.
ஆதியாகமம் 28:12
அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான். இதோ, ஒரு ஏணி ப மியிலே
வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்
ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
பாபேல் பெருமையான நகராகவே இருந்தது, ஆனால்பாபேல் கோபுரம்கட்டும் நோக்கம்
சமயம் அல்லது கடவுள் சம்பந்தப்பட்ட காரியமாகவே இருந்தது.வானத்தை
அளாவும்சிகரமுள்ள கோபுரம். இது தான் உலகத்தின்முதலாவது
சமயம்சம்பந்தப்பட்ட கோபுரம். சில வேளை இப்படியிருக்கலாம்...
பாபிலோனியர்கள் வானத்தின் நட்சத்திரங்களையும் அதன் மூலம் சாஸ்திரங்களை
அறியமுற்பட்டிருக்கலாம். ஏனென்றால் பிற்கால பாபிலோனிய, சுமேரிய மக்களின்
அநேக தெய்வங்கள் கிரகங்களினதும், நட்சத்திரங்களினதும் பெயரை
உடையனவாயிருந்தது. இவற்றை நாம் பார்க்கின்ற போது, பாபேல் கோபுரம் கட்டும்
காரியங்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட சமயம், அல்லது மார்க்கம் எனும்
ரீதியில் சென்றது. இன்னுமோர் உதாரணம்: பாபேல் என்பதற்கு
இருஅர்த்தங்கள்உண்டு, ஒன்றுதாறுமாறு மற்றது கடவுளின்
வாசல்.பிற்காலங்களில் பாபிலோனியாவிலே கட்டப்பட்ட சிகுரத், பாபேல்
கோபுரத்தின் அடிப்படையாக இருந்திருக்க வேண்டுமென்று பலர் கருதுகின்றனர்.
சிகுரத் ஒரு கோபுரம் அதன் உச்சியிலே அந்த பட்டணத்தின் கடவுளுக்கென ஒரு
கோயில் இருக்கும்.
பல மனிதர்கள் இப்படித்தான் முயல்கின்றனர். தேவனை நோக்கி செல்வதற்கு பல
காரியங்களை செய்கின்றனர். அநேக வேலைகள்... செங்கல் அறுக்க வேண்டும்
நன்றாக சுடவேண்டும். கோபுரம் கட்ட வேண்டும். தேவனை காண்பதற்கு மனிதன்
எடுக்கும் வீண் முயற்சி. இதன் மூலம் ஒன்றை மட்டும் பெறுகின்றான். நல்ல
பெயரை, தனக்கென, தங்களுக்கென்று.
பாபேல் பிரச்சனையின் வேர்
ஆதியாகமம் 10:8கூஷ் நிம்ரோதைப் பெற்றான். இவன் ப மியிலே
பராக்கிரமசாலியானான்.10:9இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த
வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல்
உண்டாயிற்று.10:10சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத் கல்னே
என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்.
இந்த வசனத்தில்பலவான்எனும் வார்த்தையை கவனியுங்கள்.அவன் கர்த்தருக்கு
முன்பாக பலத்தவனாக இருந்தான்.
பேர் பெற்றல்என்பது ஒருவனுடைய பலத்தை காட்டுகிறது. இந்த வசனத்தை கவனியுங்கள்
ஆதியாகமம் 6:4அந்நாட்களில் இராட்சதர் ப மியிலே இருந்தார்கள். பின்பு
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப்
பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் ப ர்வத்தில்பேர்பெற்ற மனுஷராகிய
பலவான்களானார்கள்.
ஆரம்பத்திலிருந்து பாபேல் கோபுரம் யாருடைய பெயரை பெருமைப்படுத்துகின்றது?
மனிதனுடைய பெயரையா, அல்லது தேவனுடைய பெயரையா?
நிம்ரோத்தினுடைய பெயர் தேவனுக்கு முன்பாக பலத்தது
ஜனங்கள் தங்களுக்கென்று பெயரை உருவாக்க விரும்பினார்கள்
இந்த வசனங்களை கவனியுங்கள்
அப்போஸ்தலர் 5:41அவருடையநாமத்துக்காகத்தாங்கள் அவமானமடைவதற்குப்
பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப்
புறப்பட்டுப்போய்,
3 யோவான் 1:7ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல்
அவருடையநாமத்தினிமித்தம்புறப்பட்டுப்போனார்கள்.
நாமம் அல்லது பெயர் எனும் சொல் தேவனையே குறிக்கும். தேவனை மட்டுமே குறிக்கும்
நிம்ரோத்தினுடைய காலத்திற்கு முன்பே அதாவது ஜலப்பிரளயத்திற்கு முன்பே
ஜனங்களுக்கு தேவனுடைய நாமத்தைப்பற்றிய அறிவு இருந்திருக்கிறது.
ஆதாரம்:
ஆதியாகமம் 4:26சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று
பேரிட்டான். அப்பொழுது மனுஷர்கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள
ஆரம்பித்தார்கள்.

இவ்வளவுதானா
ReplyDelete