பாபிலோன் வரலாறு பாகம் 1

அறிமுகம்:-

பாபிலோனியாதேசம் மொசப்பத்தாமியா பகுதியில் அமைந்திருந்தது. குறிப்பாக
சொல்ல வேண்டுமென்றால் தற்போதையஈராக்அமைந்திருக்குமிடத்தில்
மொசப்பத்தாமியா தேசம் அமைந்திருந்தது. இந்த தேசத்தினூடாக இரு பிரபல்யமான
ஆறுகள் ஓடுகின்றன (ஐபிராத்து, தைக்கிரீஸ்).
மெசொப்பத்தாமியா என்றால் கிரேக்க மொழியில் நதிகளுக்கிடையில் என்று பொருள்படும்.
பாபிலோன் எனும் வார்த்தை பாபேல் எனும் வார்த்தையில் இருந்து மருவி
உருவாகியது. பாபேல் தேசத்தை நிம்ரோத் எனும் மனிதன் கட்டினான்;. இவனே
வேதாகம அடிப்படையில் உலகத்தில் முதலாவது அரசாட்சியை அமைத்தவன்.

ஆதியாகமம்:
10:8கூஷ் நிம்ரோதைப் பெற்றான். இவன் ப+மியிலே பராக்கிரமசாலியானான்.

10:10சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத் கல்னே என்னும்
இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்.

பாபிலோனிய சாம்ராச்சியத்தை நாங்கள் சரியாக படிக்க வேண்டுமாயின்,
எங்களுக்குசுமேரிய, மற்றும்அக்காடிய(அக்காத்) இராச்சியத்தைப்பற்றி
தெரிந்திருத்தல் அவசியம். கி. மு 3000 ஆண்டளவில் மெசொப்பத்தாமியாவிலே
சுமேரிய மக்கள் குடியிருந்தனர். அவர்கள்ஊர், லகாஷ், எரிதுஎனும்
பட்டணங்களை கட்டினார்கள். அவர்களுக்கிடையிலே தொடர்ந்து யுத்தங்கள்
நடந்தது, காரணம் தண்ணீர். நீர் வளம் நிறைந்த பிரதேசங்களுக்காக
அவர்களுக்குள்ளே அடிக்கடி யுத்தங்கள் வந்தது. பின்பு அக்காடிய மக்கள்
அராபியாவிலே இருந்து வந்தனர், அவர்களுக்கும் சுமேரியர்களுக்கும்
யுத்தங்கள் நடந்தன, முடிவில்அக்காடியமக்கள் வெற்றியீட்டினர். அவர்கள்
அக்காத் எனும் பட்டணத்திலே இருந்தனர். பிற்காலங்களில் அது பாபிலோனக
அழைக்கப்பட்டது. ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப்பின்பு சுமேரிய மக்கள்
அக்காடிய இனத்தை தோற்கடித்து தங்களது மெசொப்பத்தாமியாவை தங்களது
வசமாக்கினர். பிற்காலங்களில்செமித்திய ஜனங்கள்மூலமாக சுமேரியர்கள்
தோற்கடிக்கப்பட்டார்கள். அக்காடிய மக்களும் செமித்திய இனத்தை
சேர்ந்தவர்கள்.அக்காடிய இராச்சியத்தை சார்கோன் கட்டினான்.

பாபிலோனிய சாம் ராச்சியத்தின் காலத்தை 3 பகுதிகளாக பிரிக்கலாம்

ஆதி பாபிலோனிய காலப்பகுதி
இடைக்கால பாபிலோனிய காலப்பகுதி
புதிய பாபிலோனிய காலப்பகுதி

ஆதி பாபிலோனிய காலப்பகுதியில் ஹமுராபி மன்னனும், புதிய பாபிலோனிய
காலப்பகுதியில் ... பாபிலோனிய சரித்திரத்தின் உச்சமாக நேபுகாத்நேச்சர்
மன்னனும் திகழ்கின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.