ஜெபத்தின் அமைப்பு:-
ஜெபத்தின் அமைப்பு இப்படி தான் இருக்க வேண்டும் என்ற கட்டுபாடு கிடையாது.
ஒரு குழந்தை தனது தகப்பனிடம் எப்படி பேச வேண்டும் என்று யார் கட்டளை
கொடுக்க முடியும்? ஆனால் வேதத்தில் எழுதப்பட்டுள்ள பல ஜெபங்களில் இருந்து
சில குறிப்புகளை கவணிப்போம்.
1) ஜெபத்தின் முக்கிய பகுதியாக தேவனை புகழுதல் அமைவது சிறந்தது. தேவனின்
நாமங்கள், வார்த்தைகள், வாக்குதத்தங்கள், சிறந்த பண்புகளை நினைத்து அவரை
1) ஜெபத்தின் முக்கிய பகுதியாக தேவனை புகழுதல் அமைவது சிறந்தது. தேவனின்
நாமங்கள், வார்த்தைகள், வாக்குதத்தங்கள், சிறந்த பண்புகளை நினைத்து அவரை
புகழலாம்.
2). நம்மை ஆராய்ந்து பார்த்து, தவறுகளுக்காக வருந்தி, அவற்றை விட்டுவிட
தீர்மானித்து, அறிக்கையிடுவது ஜெபத்தின் மற்றுமொரு பகுதியாகும். நமது
பாவங்களை மட்டுமின்றி நமது சமுதாயத்தின், நமது நாட்டின் பாவங்களையும்
அறிக்கையிடலாம்.
3). தேவன் நமக்கு செய்திருக்கும் சரீர, பொருளாதார, ஆவிக்குரிய நண்மைகளை
நினைத்து நன்றி செலுத்த தவறக்கூடாது.
4). நமது தேவைகளுக்காகவும், மற்றவர்களின், நாட்டின் நலனுக்காகவும்
ஜெபிக்க வேண்டும்.
5). மீண்டும் தேவனை புகழ்ந்து துதித்து ஜெபத்தை முடிக்கலாம்.
யாருக்காக எவற்றிற்காக ஜெபிக்க வேண்டும்:-
நமக்காக நாம் ஜெபிப்பது மிகவும் தேவையானது. ஆனால் தனக்காகவும் தனது
குடும்பம், உறவினர், கபைக்காக மட்டுமே ஜெபிப்பவர்கள் சுயநலவாதிகள்.
பிறருக்காகவும் ஜெபிப்பதே சிறந்தது. வேதத்தில் கொடுக்கபட்டுள்ள சில ஜெப
குறிப்புகளை பார்போம்.
* உலகமெங்கும் ஆத்தும ஆதாயம் செய்வதற்கு பணியாட்களை தேவன் எழுப்ப ஜெபிக்க
வேண்டும் (மத் 9:36-38).
* உலகமெங்கும் உள்ள மக்களூக்காகவும் அதிகாரத்திலுள்ள நாட்டின் தலைவர்கள்,
அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர்கள், அதிகாரிகள், காவலர்கள், நீதிபதிகள்
போன்ற யாவருக்காகவும் ஜெபிக்க வேண்டும் (1தீமோ 2:1-4)
* மக்களுக்கு எதிராக செயல்படுவோருக்காக, நம்மை
துண்பப்படுத்நுபவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் (மத் 5:44)
* நமது நாட்டு ஜனத்திற்காக இஸ்ரவேலருகாக ஜெபிக்க வேண்டும் (ரோம 10:1)
* எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபிக்க வேண்டும் (சங் 122:6)
* ஆவியானவரின் பின்மாரி உலகமெங்கும் ஊற்றப்பட (சகரி 10:1)
* இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள், அடையாளங்கள், குணமாக்குதல்கள் பெரிய
அளவில் நடைபெற்று ஊழியர்கள் தைரியமாக சுவிசேஷம் அறிவித்திட (அப் *
இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள், அடையாளங்கள், குணமாக்குதல்கள் பெரிய
அளவில் நடைபெற்று ஊழியர்கள் தைரியமாக சுவிசேஷம் அறிவித்திட (அப் 4:24-30)
* எல்லா கர்த்தரின் ஊழியர்கள் அவர்களுக்கு கர்த்தர் தந்துள்ள
ஊழியங்களுக்காக ஜெபிக்க வேண்டும் (எபே 6:19-20; கொலோ 4:3-4)
* உலகமெங்கும் சுவிசேஷம் அறிவிக்க திறந்த வாசலை கர்த்தர் வைக்க ஜெபிக்க
வேண்டும் (கொலோ 4:3,4)
* நாம் உபத்திரவ காலத்திற்கு தப்பி இயேசுவுக்கு முன் நிற்க தகுதி
உள்ளவர்களாக எண்ணப்படும் படி (லூக் 21:36)
* உலகமெங்கும் உள்ள பரிசுத்தவான்களுக்காக (எபே 6:18) கர்த்தருக்காக
பாடுகளை அனுபவிப்பவ்களுக்காகவும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும்.
மேலும்,
* உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ,
* எல்லா மனிதரும் இரட்சிக்கபட
* எல்லா மனிதரும் சத்தியத்தை அறிகிற அறிவை அடைய
* செய்திதாள், டிவி, ரேடியோ, இனயதளங்கள் மூலம் வெளியாகும் நம் நாடு
மட்டுமின்றி உலக நாடுகளின் பிரச்சனைகளுக்காக
* அரசியல் செய்திகளுக்கு மட்டுமின்றி விலைவாசி போன்ற வணிக செய்திகளுக்காக
* யுத்தங்கள், குழப்பங்கள், பஞ்சம், பூமி அதிர்ச்சி, வெள்ளம், வறட்சி,
நோய்கள், வறுமை, கொடுங்கோல் ஆட்சி, அடிமை தனம், லஞ்சம் போன்றவற்றால்
பாதிக்கபட்டவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
இவைகளை குழுவாக, தனியாக, உபவாசமாக, விசுவாசத்துடன் ஜெபிக்க வேண்டும்
என்பதை தேவன் எதிர்பார்கிறார்.