"ஒரு மனிதன் தேவனிடத்தில் கருத்து பறிமாற்றம் செய்வது ஜெபம் ஆகும்."
யாரிடம் ஜெபிக்க வேண்டும்:-
பிதாவாகிய தேவனை நோக்கி ஜெபிக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு
கிறிஸ்து கற்று தந்துள்ளார். இயேசுவே என்று அழைப்பதும் இயேசுவை நோக்கி
ஜெபிப்பதும் தவறுகள் அல்ல. பாவங்களை மன்னிப்பதற்க்கு இயேசுவுக்கு
அதிகாரம் இருக்கிறபடியால் (மத் 9:6) மன்னிப்பிற்காக வேண்டுவதும்,
நம்மிடத்தில் பிரவேசிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளபடியால் (வெளி
3:20) அவரை நமது இருதயத்திற்க்குள் வருவதற்க்காக அழைப்பதும் சரியானவையே.
ஆனால் பொதுவாக, பிதாவிடம் இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பதே வேதத்தின்படி
சிறந்தது ஆகும் (மத் பிதாவாகிய தேவனை நோக்கி ஜெபிக்க வேண்டும் என்று
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கற்று தந்துள்ளார். இயேசுவே என்று அழைப்பதும்
இயேசுவை நோக்கி ஜெபிப்பதும் தவறுகள் அல்ல. பாவங்களை மன்னிப்பதற்க்கு
இயேசுவுக்கு அதிகாரம் இருக்கிறபடியால் (மத் 9:6) மன்னிப்பிற்காக
வேண்டுவதும், நம்மிடத்தில் பிரவேசிப்பதாக அவர் வாக்குறுதி
அளித்துள்ளபடியால் (வெளி 3:20) அவரை நமது இருதயத்திற்க்குள் வருவதற்க்காக
அழைப்பதும் சரியானவையே. ஆனால் பொதுவாக, பிதாவிடம் இயேசுவின் நாமத்தில்
ஜெபிப்பதே வேதத்தின்படி சிறந்தது ஆகும் (மத் 6:9).
யாருடைய நாமத்தில் ஜெபிக்க வேண்டும்:-
நாம் பிதாவிடம் ஜெபிப்பதற்க்கு கர்த்தராகிய இயேசுவின் மூலமாகவே தகுதி
பெற்றுள்ளோம். எனவே அவருடைய நாமத்தில் ஜெபிக்காத ஜெபம் சரியானது அல்ல.
எனவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை பயன்படுத்தி ஜெபிக்க கவனமாக
இருக்க வேண்டும். (யோவா 14:14; 16:23,26 ஐ காண்க)
யாருடைய உதவியுடன் வேண்டிக்கொள்ள வேண்டும்:-
பிதாவின் சமுகத்திற்கு ஆவியானவரின் உதவியால் தான் நாம் செல்ல முடியும்
என்பதை வேதம் தெளிவாக கூறுகிறது (எபே 2:18). எனவே நாம் ஜெபிக்கும்
போதெல்லாம் ஆவியானவரின் வழிநடத்துதலை உணர்ந்து ஜெபிப்பதே சிறந்தது.
கருத்துடன் விண்ணப்பம் செய்ய வேண்டும்:-
ஜெபிக்கும் போது நாம் கூறும் கருத்துகளை உணர்ந்து ஜெபிக்க வேண்டும். ஒரே
மாதிரியான ஜெபத்தை அடிக்கடி செய்வது தவறு அல்ல. ஆனால் அவ்வாறு செய்தால்
ஒவ்வொரு முறையும் உணர்ந்து ஜெபிக்க வேண்டும். கர்த்தருடைய ஜெபம், என்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோதிரி.... போன்றவற்றை உணர்வின்றி மனபாடமாக வாயால்
கூறுவது பயனற்றது. அவற்றை நன்கு உணர்ந்து பயன்படுத்துவது நல்லது தான்.
உள்ளத்தில் உணராமல் உதடுகளினால் மட்டும் துதிப்பது பயனற்றதாகும்.
தாழ்மையுடன் ஜெபிக்க வேண்டும் (ஏசா 64:5-8)
ஆவியில் ஜெபித்தல்:-
ஆவியில் ஜெபிக்க வேண்டும் என்பதை வேதம் பல இடங்களில் கூறுகிறது (யோவா
4:23-24; 1கொரி 14:14-15; எபேசி 6:18; யூதா 20). ஆவியில் ஜெபிப்பது
என்பதற்கான விளக்கம் (1 கொரி 14,14) ஆகிய இரண்டு வசனங்களில் மட்டுமே
கூறப்பட்டுள்ளது. ஆவியானவரின் ஏவுதலால் அந்நிய பாஷை போசுவதை ஆவியில்
ஜெபிப்த்தல் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன. ஆவியில் ஜெபிப்பதை பற்றி
வேறு விளக்கங்கள் வேதத்தில் இல்லை. ஆவியானவரின் ஞானஸ்நானம் பெற்றுக்
கொள்ளும் யாவரும் ஆவியில் ஜெபிக்க முடியும் (மாற் 16:17-18; யோவா
4:23-24; 1கொரி 12:10-12; 14:14,15). கர்த்தருடைய சமூகத்தில்
காத்திருந்து, அவரது பிரசன்னத்தை உணர்ந்து, ஆவியில் நிரம்பி ஜெபித்தல்
சிறந்ததாகும்.
எதற்காக ஆவியில் ஜெபிக்க வேண்டும்?:-
சரியாக ஜெபிப்பதற்கு நமக்கு தெரியாது. நாளைக்கு நமக்கு என்ன
நடக்கபோகிறது, நமக்கு என்ன தேவைப்படும் என்பதையும் பிறருக்கான சரியான
ஜெப குறிப்புகளும் நமக்கு தெரியாது. நாம் ஆவியில் ஜெபிக்கும் பொழுது
ஆவியானவர் நமது வாயிலாக சரியாக ஜெபிப்பார் (ரோம 8:26)
ஆவியோடும் கருத்தோடும் ஜெபித்தல்:-
ஆவியோடு மட்டுமின்றி கருத்தோடும், கருத்தோடு மட்டுமின்றி ஆவியோடும்
ஜெபிப்பது நமது கடமை ஆகும். (யோவா 4:23,24; 1கொரி 14:14,15) இவற்றை ஒரு
நாணயத்தின் இரு பக்கங்களாக கருதலாம்..
வேதத்தில் உள்ள ஜெபங்களையும் பிறர் எழுதின ஜெபங்களையும் பயன்படுத்துதல்:-
இவற்றை பயன்படுத்துவது தவறு அல்ல. பொருத்தமான ஜெபங்களை நாம் நன்கு
உணர்ந்து பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால், பலசமயங்களில் சடங்காச்சாரமாக
அவை பயன்படுத்தபடுவதும் உணராமலும் கவணியாமலும் "ஆமென்" சொல்லபடுவதும்
அவற்றை அர்த்தமற்றதாக மாற்றுகின்றன. இவ்வாறு செய்யாமல் கவனமாக
பயன்படுத்துவது சிறந்தது. மேலும் இவற்றை பயன்படுத்துவதோடு நின்றுவிடாமல்
நமது கருத்துகளை தேவனிடம் கூறுவதற்கு கவனமாக இருக்க வேண்டும்.
பாடல்களை பயன்படுத்துதல்:-
உள்ளத்தை உருக்கும் இராகமும் செவிக்கினிய இசையும் கொண்ட பாடல்களை
பயன்படுத்தினாலும் தரமான கருத்துள்ள பாடல்களை, உணர்ந்து பாடுவதற்கு
கவனமாக இருக்க வேண்டும். ஆவியோடும் கருத்தோடும் பாடுவதையும் தேவன்
நம்மிடம் எதிர்பார்க்கிறார் (1கொரி 14:15).
மௌனமாக ஜெபித்தல், உரத்த குரலில் ஜெபித்தல்:-
மௌனமாக, மெல்லிய குரலில், உரத்த குரலில், சாதாரன குரலில் ஜெபிப்பது
யாவும் சரியானவையே. தேவைக்கு ஏற்ப அவ்வாறு செய்யலாம். ஆவியில் நிரம்பி
அந்நிய பாஷையில் மௌனமாக அல்லது வாயை திறந்து ஜெபிப்பதும் சிறந்ததுதான்.
ஆவியின் ஞானஸ்நானம் பெற்றவர்கள் அவ்வாறு செய்ய முடியும்.
பலர் சேர்ந்து ஜெபித்தல்:-
பலர் சேர்ந்து ஜெபிக்கும் பொழுது ஒருவர் ஜெபிப்பதனால் மற்றவர்கள் அதற்கு
ஏற்றவாறு ஆமென், அல்லேலூயா, ஸ்தோத்திரம், ஆம் ஆண்டவரே, அப்படியே செய்யும்
கர்த்தாவே என்பவை போன்ற ஆமோதிக்கும் சொற்க்களை கூறலாம். ஆனால்
ஜெபிப்பவரின் குரல் மற்றவர்களுக்கு கேட்க்காதவன்னம் மிகவும் உரத்த
குரலில் கூறக்கூடாது. ஜெபிப்பவர் தெளிவாகவும் யாவரும் கேட்க்கும்படி
உரத்த குரலிலும் ஜெபிக்க வேண்டும். மற்றவர்கள் அதை கவனமாக கேட்டு
ஒருமனதுடன் ஜெபிக்க வேண்டும்.