படைப்பின் வரலாறு பாகம் 1

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள படைப்பின் நிகழ்ச்சிகளை கால
வரிசைப்படுத்துவதற்காக ஆராய்ந்து கற்று கொள்வதே இந்த கட்டுரையின் நோக்கம்
ஆகும்.

1. சூரியன் நான்காவது நாள் உண்டாக்கப்பட்டது என்றால் (ஆதி 1:14-19)
முதலாவது நாள் சாயங்காலமும் விடியற்காலமும் வந்தது எவ்வாறு (ஆதி 1:5)?

2. முதலாவது நாள் வந்தது எப்படி?

3. சூரியனும் நட்ச்சத்திரங்களும் இல்லாத போது வெளிச்சம் உண்டாகக்கடவது
என்று தேவன் கூறியதும் உண்டான வெளிச்சம் என்ன?

மேலே எழுப்பியுள்ள கேள்விகள் நியாயமானவைகளே. இவற்றிக்கு வேதத்தின்
அடிப்படையிலேயே பதில்கள் தேடுவோம் வாருங்கள்........

முதலாம் நாள் :-

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி 1:1). என்ற
வசனத்திலுள்ள ஆதியும் ஆதியாகம் 1:5 இல் கூறப்பட்டுள்ள முதலாம் நாளும்
ஒன்றாக இருக்க முடியாது. ஏனெனில் வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன்
சொன்ன பின்னர் தான் முதலாம் நாள் ஆயிற்று (ஆதி 1:2-5). ஆனால் பூமியின்
ஆழத்தில் இருள் இருந்ததும் ஜலத்தின் மீது தேவ ஆவியானவர் அசைவாடினதும்
இந்த முதலாம் நாளுக்கு முந்தையது (ஆதி 1:2). எவ்வளவு காலம் (ஆண்டுகள்)
அசைவாடினார் (பூமியை தயார்படுத்தினார்) என்று கூறப்படவில்லை. எனவே
"முதலாம் நாள் என்பது இந்த யுகத்தின் முதலாம் நாள் ஆகும்." " அது ஆதியின்
முதலாம் நாள் அல்ல."

பூமியை அஸ்திபாரப்படுத்தியது எப்போது? :-

(யோபு 38:4-7) இல் பூமியை தேவன் அஸ்திபாரப்படுத்தி அதின் கோடிகல்லை வைத்த
நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது.

இதை சற்று ஆராய்ந்தால் அச்சமயத்தில் நட்ச்சத்திரங்களும் தேவ தூதர்களும்
இருந்தனர் என்று காண்கிறோம். ஏனெனில் தேவன் பூமியை
அஸ்திபாரப்படுத்துகையில் நட்ச்சத்திரங்கள் ஏகமாய்பாடி தேவபுத்திரர்
கெம்பிரித்தார்கள் (யோபு 38:7). அதாவது பூமியை படைக்கும் முன்னரே தேவன்
நட்ச்சத்திரங்களையும் தூதர்களையும் படைத்திருந்தார். நட்ச்சத்திரங்கள்
படைத்திருந்தால் ஒளி இருந்திருக்கும் அல்லவா? மேலும், சூரியனும்
நட்ச்சத்திரங்களில் ஒன்று என்பதாலும் விடியற்காலம் என்று
கூறப்பட்டிருப்பதாலும் சூரியனும் இருந்திருக்குமே? இதற்காண விளக்கத்த
பார்ப்போம்.

ஆதி என்றால் என்ன? :-

ஆதி 1:1 ல் கூறப்படும் ஆதி என்ற காலம் ஒரு குறிப்பிட்ட ஆண்டு, மாதம்,
தேதி, மணி என்பதில்லை. ஆதி என்பது ஒரு நீண்ட கால இடைவெளி என்பதை "முதலாம்
நாள்" என்ற தலைப்பில் மேலே பார்த்தோம். ஒரு மனிதனின் வாழ்நாள் என்பது பல
ஆண்டுகளை குறிப்பது போலவே ஆதி என்பதும் பல ஆண்டுகள் கொண்ட கால இடைவெளியை
குறிக்கிறது. மேலும், பூமியை படைப்பதற்கு முன்பே நட்ச்சத்திரங்கள்,
தூதர்களை தேவன் படைத்துவிட்டார் என்பதால் (யோபு 38:4-7) யாவற்றையும் ஒரு
நொடியில் படைக்காமல் படிப்படியாக படைத்தார் என்பது தெளிவு.

ஆதிகால யுகங்கள் :-

ஆதி என்கிற காலத்திலிருந்து ஆதி 1:5 இலுள்ள முதலாம் நாளுக்கு இடையில்
உள்ள காலத்தை மூன்று யுகங்களாக பிரிக்கலாம்.

1. ஆதிகால யுகம் ஒன்று :-

வின்மீன்களும் (சூரியனும்) தேவ தூதர்களும் படைக்கப்படுதல். இது எவ்வளவு
ஆண்டுகள் என்பது தெரியாது. பூமிக்கு அஸ்திபாரம் போடும் வரை இந்த யுகம்
இருந்தது (யோபு 38:4-7)

2. ஆதிகால யுகம் இரண்டு :-

பூமிக்கு கோடி கல்லை வைக்கும்போது இந்த யுகம் தொடங்கியது. யாவற்றையும்
"நல்லது என்று காணும்" தரத்தில் படைப்பது தேவனின் பண்பாகும். எனவே அவர்
படைக்கும் பொழுது பூமி ஒழுங்கின்மையும் வெறுமையாகவும் இல்லை (ஏசா 45:18).
பூமி படைக்கப்பட்ட போது ஆர்ப்பரித்த தேவ தூதரில் ஒரு பகுதியினர் பின்னர்
பூமியில் குடியிருக்கும்படி தேவன் செய்தார். அவ்வாறு பூமியில் இருந்த
தூதரில் ஒரு கேரூபான லூசிபர் தன்னுடன் ஒரு கூட்டம் தூதர்களை
சேர்த்துக்கொண்டு தேவனுக்கு எதிராக புரட்ச்சி செய்தான் (ஏசா 14:12-14;
எசே 28:12-19).

புரட்ச்சி தோற்க்கடிக்ப்பட்டு புரட்ச்சியாளர்கள் கீழே தள்ளப்பட்டனர்.
மேலும் அச்சமயத்தில் பெருவெள்ளம் உண்டாயிற்று என்றும் (2பேது 3:5-6) அதை
தொடர்ந்து தேவனின் தன்டனைகளின் (வாதை) ஒன்றான இருள் பூமியின் மீது
அனுப்பபட்டது என்பதையும் அறிகிறோம்.

இந்த நிகழ்ச்சியை "இருளை அதற்க்கு (பூமிக்கு) புடவையாக உடுத்தின போதும்"
என்று யோபு 38:9 கூறுகிறது. அதாவது சூரியன், நிலா, நட்ச்சத்திரங்களின்
ஒளி பூமியின் மீது விழாதபடி தேவன் தடைசெய்தார். இவ்வாறு எகிப்தியர் மீது
காரிருளை அனுப்பியதும் (யாத் 10:21-23) இயேசு சிலுவையில் இருந்த போது
பூமியெங்கும் காரிருள் உண்டானதும் (மத் 27:45) இன்னும் இவ்வாறு நடக்க
போகிறதும் (ஆமோ 8:9; வெளி 8:12; 9:2; 16:10) இத்தகய நிகழ்ச்சிகள் எடுத்து
காட்டாக உள்ளது. இருள் சூழ்ந்த உலகம் ஒழுங்கின்மையும் வெறுமையுமானது (ஆதி
1:2). பூமியின் படைப்பிலிருந்து லூசிபரின் வீழ்ச்சியின் காலம் வரை,
பூமியை இருள் மூடும் வரை "ஆதிகால யுகம் இரண்டு" என கருதலாம்..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.