பல நாகரீகங்கள் எப்படி உருவாகிற்று? பாகம் 2

தமிழகத்தில் இருந்து
கிழக்கே சென்ற மக்கள்
சிலர் தென்
அமெரிக்காவிற்கு
சென்று அங்கே
குடிகொள்கின்றார்கள்.

சிலர் வட
அமெரிக்காவிற்கு
சென்று அங்கே
குடிக்கொள்கின்றார்கள்.

சிலர் ஜப்பானில்,
சிலர் சீனாவில்,
சிலர் ஆஸ்திரேலியாவில்.
இவ்வாறு உலகம்
முழுவதும் தமிழர்கள்
பரவுகின்றனர்.

இந்தக் காலத்தில் தான்
புவியின் வெட்ப
நிலைக்கு ஏற்றாற்ப்
போல், குளிர்
பிரதேசங்களான மேற்கு
பகுதிக்கும் வடக்கு
பகுதிக்கும் சென்ற
தமிழர்களின் நிறம்
வெண்மையாக மாறத்
தொடங்குகின்றது.

தலைமுறை
தலைமுறையாக
மேற்கிலேயே தங்கிய
மக்கள் தாங்கள்
எங்கிருந்து வந்தவர்கள்
என்னும் உண்மையினை
காலப்போக்கில் மறக்கத்
தொடங்குகின்றனர்.

பிரிந்து சென்ற
குழுக்களிடம் புது
புது மொழிகளாய்
தமிழ்மொழி
உருமாறுகின்றது.

இலத்தின்,
கிரேக்கம்
போன்ற புதிய
மொழிகள்
உருபெருகின்றன.

மக்கள் இவ்வாறு
இடப்பெயர்ச்சி செய்துக்
கொண்டு இருந்த
காலத்திலும்,
தமிழகத்தில் இருந்த மக்கள்
அந்த அனைத்து
நாகரீகங்களுடனும்
வாணிக அளவிலான
தொடர்பினை வைத்து
இருந்தனர்.

எனவே உலகில்
உள்ள அனைத்து மக்களும்
தமிழகத்திற்கு வந்து
செல்வதும், தமிழர்கள்
அவர்களின்
நாடுகளுக்குச்
செல்வதும் காலத்தில்
நடைப் பெற்றுக்
கொண்டே இருந்தன.

இன்றைய கேரளாவில்
அதாவது அன்றைய சேர
நாட்டில் கிரேக்கர்கள்,
அரபியர்கள் போன்றவர்
வந்து வாழ்ந்து இருந்தனர்
என்பது வரலாற்றில்
இருந்து நமக்கு
கிடைக்கும் செய்தி.

மேலும் பண்டைய
ரோமர்களின் நாணயங்கள்
தமிழகத்தில் அதிகமாக
கிடைப்பதும் அத்தகைய
வாணிகம்
தமிழகத்தினில்
நடைப்பெற்றது என்பதற்கு
சான்றாக உள்ளது.

இவ்வாறே காலங்களும்
ஓடிக் கொண்டு
இருக்கின்றன. உலகில் பல
நாகரீகங்கள் தோன்றி
விட்டன.
சில அழிந்தும்
விட்டன.

ஒவ்வொரு
நாகரீகங்களுக்கும்
இடையே போர்களும்
தோன்றிவிட்டன. மனிதன்
உலகின் பல்வேறு
மூலைக்கும் சென்று
பரவி விட்டான். இந்தக்
காலத்தில் தான் மேற்கில்
இருந்து சில
நாடோடிகள் சிந்து
சமவெளியின் மீது படை
எடுத்து வருகின்றனர்.

அவர்களைத் தான் நாம்
ஆரியர்கள் என்கின்றோம்.

அவர்கள் கிரேக்கம் மற்றும்
மத்திய ஆசியாவில்
இருந்து குதிரையின்
மீது ஏறி வந்தவர்கள்.

யாகம்
மற்றும் வேள்வி
முறையில் நம்பிக்கை
உடையவர்கள்.

அதாவது நெருப்பினை
மூட்டி அதில் யாகம்
செய்வது.

அந்த
நெருப்பினில்
உணவுப்பண்டங்களையும்
மற்ற பொருட்களையும்
போட்டால்
அப்படிப் போடப்பட்ட
பொருட்கள் கடவுளிடம்
போய் சேரும்
என்ற நம்பிக்கையினைக்
கொண்டவர்கள்.

அதாவது
நெருப்பினை மூட்டி
அதில் ஒரு
மிருகத்தைப் போட்டீர்கள்
என்றால் அந்த மிருகம்
இறைவனிடம் சென்று
விடும்.

இது கிரேக்க
வழிப்பாட்டு பழக்கம்.

இதே முறை
இப்பொழுதும் பல
யாகங்களில் 'சுவாகா…
சுவாகா…' (சுவாகா -
என்றால் சாப்பிடுங்கள்
என்றுப் பொருள்) என்றுக்
கூறிக் கொண்டு
நெருப்பினில் பல
பொருட்களைக்
கொட்டும் முறையாக
இருப்பதை காணலாம்.

அப்பேர்ப்பட்ட ஆரியர்கள்
சிந்து சமவெளியினை
அடைகின்றார்கள்.

நீண்ட
நெடிய போருக்குப்
பின் சிந்து சமவெளி
மக்கள் பின்
வாங்குகின்றார்கள்.
சிந்து சமவெளி நாகரீகம்
மெதுவாக
அழிகின்றது.

ஆரியர்கள்
வட நாட்டினுள்
நுழைகின்றனர். ஆனால்
சிந்து சமவெளியில்
அவர்களுக்கு கிடைத்த
வெற்றி இந்தியாவின்
மற்ற இடங்களில்
அவர்களுக்கு
கிட்டவில்லை.

அங்கு
ஏற்கனவே சென்று தங்கி
நகரங்களைக் கட்டி
வாழ்ந்து வந்த தமிழர்கள்
ஆரியர்களைக்
காட்டிலும் பலம்
பொருந்தியவர்களாக
இருந்ததினால்
ஆரியர்களின் போர்
முயற்சிகள் அங்கே
வெற்றிப் பெறவில்லை.

மேலும் ஆரியர்களாக
வந்தவர்களின் எண்ணிக்கை
தமிழர்களை கணக்கிடும்
பொழுது மிகவும்
குறைவு.

ஆரியர்கள்
எண்ணிக்கையில்
குறைவு என்றால்
பின்னர் எவ்வாறு அவர்கள்
அவ்வளவு
செல்வாக்கினைப்
பெற்றார்கள்?

அவர்கள் இனம்
தமிழர்களிடையே
எவ்வாறு தழைத்தது?
என்று கேள்வி எழலாம்.

ஆரம்பத்தில் ஆரியர்கள்
தமிழர்களை
மணமுடித்துக்
கொண்டனர்.

மணமுடித்துக்
கொண்டு அவர்களுடன்
கலந்தனர்.

ஆனால் தாங்கள்
உயர்ந்தவர்கள் என்ற
எண்ணத்தினை மட்டும்
விடாது இருந்தனர்.

எனவே ஆரியர்கள் மாற்று
வழியினை
யோசித்தார்கள்.

"வெள்ளையர்களான
நம்மால் கறுப்பர்களான
இந்த மக்களை பலத்தினால்
வெல்ல முடியவில்லை.
அதனால் தந்திரத்தினால்
வெல்வோம்" என்று
முடிவு செய்துக்
கொண்டு அந்த
மக்களுடன் கலந்தனர்.

தமிழர்களுடன் கலந்த
ஆரியர்கள் தமிழர்களின்
வழிப்பாட்டு
முறைகளுடன் தங்களது
முறைகளை கலக்க
ஆரம்பித்தனர்.

வெறுமனே பலி இட்டால்
போதுமா?

நெருப்பினை மூட்டி
அதில் சில மந்திரங்களை
சொல்லிவாறே இந்தப்
பலியினைக் காணிக்கை
செய்தால் தானே இப்பலி
இறைவனை திருப்தி
படுத்தும்? என்று
கூறிக் கொண்டே அந்த
மக்களின் மனதினை
மாற்றுகின்றனர்.

மந்திரம் மற்றும் யாகம்
ஆகியனவற்றை அறியாத
சமுதாயத்தினுள் மெல்ல
யாகம் அடி எடுத்து
வைக்கின்றது.

தமிழர்களின் இந்த வீழ்ச்சி
ஆரியர்களுக்கு
வசதியாக போய்
விடுகின்றது.

இதை
அடிப்படையாக வைத்துக்
கொண்டு தமிழர்களின்
கடவுள்கள் பழக்கவழக்கங்கள்
முதலியவற்றுள்
அவர்களின் கருத்துக்களை
திணிக்கின்றனர்.

கிரேக்க
கதைகளை ஒட்டிய
இதிகாசக் கதைகள் தமிழ்
கடவுள்களுக்கு
எழுதப்படுகின்றன.

ஆரியர்கள் வட நாட்டினில்
தங்களை நிலைப் பெற
செய்துக்
கொள்ளுகின்றனர்.

ஆரியர்கள்
யாகத்தினையும்
பலியையும் வைத்து
பிழைப்பினை ஓட்டிக்
கொண்டு இருக்கும்
பொழுது பலி
கூடாது என்று
இவர்களை
எதிர்ப்பவர்களும்
தோன்றினார்கள்.

தொடர்ந்தும் என்னுடன்
இணைந்திருங்கள்.
இது சத்தியத்தை
அறிந்துகொள்ள ஓர்
அருமையான தேடல்.

நீங்கள் அறிந்திராததும்,
மறுக்க
முடியாததுமான
தகவல்கள் ஆதாரங்களுடன்
வர இருக்கின்றன.

நன்றி.

————————————
Next
புத்தம் பரவியதால்
ஆரியர்களின்
நிலமை எவ்வாறானது?
————————————
24x7 ஜெப உதவிகளுக்கு
8012978922
————————————
எங்கள் ஜெப குழுவில் இனைந்து ஜெபிக்க விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்
Whatsapp@8012978922
————————————

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.