கர்த்தர் ஏன் ஊசாவை அடித்தார்........? பாகம் 2

2.கர்த்தருடய பெட்டியை பரிசுத்தமாக்கப்படாத ஊசா கைநீட்டி
தொட்டதற்காக!

கர்த்தரின் இந்த உடன்படிக்கை பெட்டியானது மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்க
கூடியதும் பரிசுத்தமாக்கப்பட்ட ஆச்சாரியர்கள் தவிர வேறு ஒருவரும் தொடக்
கூடாத்துமாக் இருந்தது

II நாளாகமம் 5:7
ஆசாரியர்கர்த்தருடைய
உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே,
கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.

பரிசுத்தமுள்ள கர்த்தரின் பெட்டியை காப்பவர்கள்கூட பரிசுத்தமாக இருக்க
வேண்டும் என்று வேதம் சொல்கிறது.

அவ்வாறு அந்த பெட்டியை காப்பதற்கு பரிசுத்தபடுத்த
பட்டவன் அவனுடய குமாரனாகிய ஏலேயேசாரே!

I சாமுவேல் 7:1
அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து,கர்த்தருடையபெட்டியை எடுத்து,
மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து,
கர்த்தருடைய
பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன்குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.

ஆனால் இங்கு ரதத்தை நடத்தியவர்கள் அவனின் மற்ற இரண்டு குமாரார்கள்

I நாளாகமம் 13:7
தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல்
ஏற்றிக்கொண்டுவந்தார்கள்;ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.

இங்கு நாம் இவ்வாறு எண்ணலாம் "ஊசா கர்த்தரின் பெட்டி விழுந்து விடகூடாது
என்ற நல்ல எண்ணத்திலே
தானே அந்த பெட்டியை கையை நீட்டி பிடித்தான், இதில்
கர்த்தர் அடித்து கொள்ளும் அளவுக்கு என்ன தவறான காரியம் இருக்கிறது
என்பது போல் தோன்றலாம்.

ஆனால் சகோதரர்களே, தேவனுடைய
வார்த்தைகளையும் நியமணங்களையும் கைகொள்ளும்போது அவைகளை எக்காரணத்தை
கொண்டும் சிறிதேனும் மீறுவது கூடாது என்பதற்கே இந்த காரியம் மற்றும்
மோசேயின் காரியங்கள் கூட நமக்கு எச்சரிப்பாக உள்ளது.

தேவனுக்கு நல்லது செய்ய அல்லது தேவனை காப்பாற்ற யாரும் இங்கு தேவையில்லை.
அவருடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்படியும் ஆட்களே இங்கு தேவனுக்கு
தேவை.

பொய் பொய்யான வார்த்தைகளை சொல்லி ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தும் ஆட்கள்
யாரும் தேவனுக்கு தேவையில்லை.

உள்ளதை உள்ளது என்று சொல்லி தேவனுக்குள் வழிநடத்தும் ஒரே ஒரு ஆத்துமாவே
விலை எரப்பெற்றதும் தேவனுக்குள் நிலைத்து நிற்கும் ஒன்றுமாக இருக்கும்.

இச் சம்பவத்தை பொறுத்தவரை கர்த்தர் ஊசாவை அடித்தார் எனவே ஏதோ தவறு அங்கு
நடந்திருக்கிறது என்ற கருத்தின் அடிப்படையிலேயே நோக்குகிறோம்.

இங்கு பெட்டியை ரதத்தில் ஏற்றி கர்த்தரின் பெட்டியை கொண்டுவந்தது
ராஜாவில்இருந்து எல்லோருமாக சேர்ந்து செய்த தவறாக இருந்தது.

கர்த்தர் ஊசாவை அடித்ததன் முக்கிய காரணம் என்னவென்பதை வசனம் இவ்வாறு சொல்கிறது!

II சாமுவேல் 6:.6
மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால்,ஊசா தேவனுடைய
பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.
7அவனுடைய
துணிவினிமித்தம்தேவன் அங்கே அவனை அடித்தார்;

பெட்டியை கைநீட்டி பிடித்த செயலையேதேவன் கண்டித்துள்ளார். எனவே
அவன் தேவனுக்கேற்ற பரிசுத்தமற்றவனாக இருந்திருக்கலாம் என்றே அனுமானிக்க
முடிகிறது.

பெட்டியை தொடுவதர்க்கேற்ற பரிசுத்தம் இல்லாதவனாக இருந்தும் துணிந்து கையை
நீட்டிபெட்டியை தொட்டதால் தேவன் அவனை அடித்திருக்கலாம்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முக்கிய பாடம்:

தேவனின் வார்த்தைகள்
என்பது மாறாதது மாற்றமுடியாதது! அவர் வார்த்தைகளை
அவர் ஒருவர் மட்டுமே மாற்ற முடியும்.

எந்த மனுஷனுக்கும் அதை மாற்றவோ
அல்லது அதை
அல்டர்பண்ணவோ அதிகாரம் இல்லை.

அவ்வாறு அதை மாற்றினால் அது எங்காவது ஒரு இடத்தில், நாம் நல்லது என்று
செய்ய நினைத்தாலும் அது நம்மை மரணத்துக்கு நேராக நடத்திவிடும் என்பதே!

அடுத்து,
தேவனிடம் கிட்டி சேர்வதற்கு பரிசுத்தம் மிக மிக அவசியமாகிறது.

தேவனுடய காரியங்களில் பரிசுத்தமில்லாமல் துணிகரமாக
தான்தோன்றிதனமாக நடப்பவர் களுக்கு முடிவு ஊசாவின் முடிவுபோல மோசமாகவே
இருக்கும் என்பதே!

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.