"தேவனுக்கு நல்லது செய்ய அல்லது தேவனை காப்பாற்ற யாரும் இங்கு தேவையில்லை.
அவருடைய வார்த்தைகளுக்கு அப்படியே கீழ்படியும் ஆட்களே இங்கு தேவனுக்கு தேவை."
முற்றிலும் உண்மை இதையே எல்லா ஊழியர்களும் பின்பற்றினால் ஆண்டவரின்
கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் , இல்லையேல் ஊசாவிற்க்கு நடந்ததே
நமக்கும்
__________________
2 சாமுவல் 6 அதிகாரம் 6 ,7ல்
உள்ள வசனத்தின்படி உடன்படிக்கை பெட்டியை தொட்டதினால் கர்த்தர் ஊசாவின்
மேல் கோபம் கொண்டு அடித்ததினால் அவன் செத்தான். என்று வேதத்தில்
பார்க்கிறோம்.
இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில்
தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கீழே விழ போகின்றது என்ற எண்ணத்தில் தான்
ஊசா பதறிபோய் அந்த பெட்டியை பிடித்தான்
தேவனுடய காரியங்களில் தாந்தோன்றிதனமாக செயல்படும் அநேகருக்கு
எச்சரிப்பை கொடுக்கும் செய்தியும் இந்த ஊசாவின் காரியத்தில்
அடங்கியுள்ளது.
ஒரு சிறு சம்பவம் நீங்கள் கேள்விபட்டிருக்கலாம்:
ஒரு முதலாளி தான் சொல்லும் வேலைகளை செய்வதற்கு ஒரு வேலையாளை வேலைக்கு
அமர்த்தினார்.
அவரிடம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட
கடையில்போய் ஒரு குறிப்பிட்டபொருளைவாங்கி
வரும்படி
கட்டளையிட்டார்.
ஆனால் அந்தவேலையாளோ முதலாளி சொல்லாத வேறொரு கடைக்கு போய் அதேபொருளை
குறைந்த விலைக்கு வாங்கிவந்து மீதம் காசையும் கையில் கொடுத்து முதலாளி
தன்னை பாராட்டுவார் என்று எதிர்பார்த்திருந்தார்.
ஆனால் முதலாளியோ அவனை வேலையைவிட்டு தூக்கிவிட்டார்.
அதற்க்கு அவர் சொன்ன காரணம்
"நான் என்ன சொன்னேனோ அதை செய்வதற்குதான்
உன்னை வேலைக்கு அமர்த்தினேநேயன்றி, உன்னுடைய இஸ்டப்படி
செயல்படுவதற்கு அல்ல.
இந்த்தனை வருடம் இந்த தொழிலில் இருக்கும் எனக்கு, எந்த தரமான பொருள் எந்த
இடத்தில்தரமான விலைக்குகிடக்கும் என்பது எனக்கு தெரியாதா என்ன? அதனால்
சொல்வதை செய்யாத நீ வேலைக்கு லாயக்கற்றவன்"என்றார்.
இதுபோலவே இன்றைய கிறிஸ்த்தவத்தில் தேவன் என்ன சொல்கிறார் என்பதை சரியாக
கவனிக்காமல், தேவனுக்காக குறைந்த விலையில் ஆத்துமாக்களை வாங்கிகொடுக்க
அநேகர் முன்வந்துள்ளனர்!
அதனால் சரியான மனம்திரும்புதல் இல்லாத, அதிசயத்தையும் அற்ப்புதத்தயுமே
எதிர் நோக்கி இருக்கும் கூட்டங்கள் இன்று கிறிஸ்த்தவத்தில்
அதிகமாகியுள்ளது.
தேவனின் காரியங்களை எப்படியாகிலும் நமது இச்சையின் அடிப்படையில்
செய்வதற்கு அது ஒரு காய்கறி வியாபாரம் அல்ல.
ஒவ்வொரு காரியமும் சரியான் கிரம முறைப்படி செய்யப்படுவதையே தேவன்
விரும்புகிறார். அதற்க்கு சரியான காரணங்கள் தேவனிடத்தில் உண்டு.
தேவ கட்டளைகளை மீறி தேவனுக்கு ஆதாயம் செய்வோருக்கு "நீங்கள்
எவ்விடத்தாரோ அறியேன்" என்ற பதிலே கொடுக்கப்படும்.
இதுபோன்றதொரு சம்பவம்தான் அன்று ஊசாவின்கரியத்தில்லும் நடந்தது.
இரண்டு காரியங்களினிமித்தம் ஊசா அன்று கர்த்தரால் அடிக்கப்பட்டான்.
1.கர்த்தருடய பெட்டியை மாட்டு வண்டியில் ஏற்றியதர்க்காக:
கர்த்தருடய உடன்படிக்கை பெட்டியானது
ஆசாரியர்களால் சுமந்து கொண்டுவர வேண்டும் என்பதே இஸ்ரவேலருக்கு தேவன்
கொடுத்த கட்டளையாக இருந்தது.
ஆனால் இஸ்ரவேலர் அனைவரும் சேர்ந்து கர்த்தருடைய பெட்டியை புது ரதம் என்னும்
மாட்டுவண்டியில் வைத்து கொண்டு சென்றனர்.
II சாமுவேல் 6:3
தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக்
கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்துகொண்டுவந்தார்கள்;
அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை
நடத்தினார்கள்.
எனவே கர்த்தரின்பெட்டியை கொண்டுபோகும் இக்காரியம் தொடக்கத்தில் இருந்தே
தேவனின் பார்வைக்கு சரியானதாக இருக்கவில்லை.
காரணம் இந்த காரியத்தை அவர்கள் பெலிஸ்தியர் என்னும் புறஜாதியாரின்
செய்கையில் இருந்து கற்றுக் கொண்டு செய்தனர். அது தேவனின் பார்வையில்
தவறாகி போனது.