பேழைக்குள் இருந்த உயிரினங்கள் பாகம் 1

1.உலகளாவிய
ஜலப்பிரயளத்தின் அழிவிலிருந்து உயிரினங்களை தப்புவிப்பதற்காக நோவா
ஒவ்வொரு உயிரினத்திலும் எத்தனை சோடியைப் பேழைக்குள் கொண்டு சென்றான்?

2.6ம் அதிகாரத்தில் உள்ள தேவனின் கூற்று 7ம் அதிகாரத்தில் உள்ளவற்றை
முரண்படுத்துகின்றதா?

3.நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கும் நீண்ட காலத்திற்கும் முன்பு
வாழ்ந்த நோவா எப்படி
உயிரினங்களில் சுத்தமானவை எவை அசுத்தமானவை எவை என்பதை எவ்வாறு அறிந்திருந்தான்?

4.இன்றைய உலகிலிருக்கும் சகல உயிரினங்களும் ஒவ்வொரு சோடி பேழைக்குள்
கொண்டு போகப்பட்டனவா?

5.சகல உயிரினங்களும் இருப்பதற்கு போதுமான இடம் பேழைக்குள் இருந்திருக்குமா?

6.நோவாவின் பேழைக்குள் உலகிலுள்ள சகல உயிரினங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று
சண்டை பிடிக்காமலும் மனிதரைத் தாக்காமலும் இருந்தன?

பேழைக்குள் இருந்த உயிரினங்கள்
ஆதியாகமப் புத்தகத்தில் ஒன்றையொன்று முரண்படுத்தும் விபரணங்களாக
பலரால்சுட்டிக் காட்டப்படும் பகுதிகளில் ஒன்று
உலகளாவிய
ஜலப்பிரயளத்தின் அழிவிலிருந்து உயிரினங்களை தப்புவிப்பதற்காக நோவா
ஒவ்வொரு உயிரினத்திலும் எத்தனை சோடியைப் பேழைக்குள் கொண்டு
சென்றான்என்பதைப் பற்றியதாகும்.

ஆதி. 6:19-20 இல் தேவன் நோவாவிடம் உயிரனங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு
சோடியைக் கொண்டு போகும்படி
கட்டளையிடுகின்றார்.

ஆனால் அடுத்த அதிகாரத்தில் அதாவது ஆதி. 7:2-3 ஒவ்வொன்றிலும் ஏழு சோடிகளைக்
கொண்டுபோகும்படி அறிவுறுத்துகின்றார்.

இதனால்தேவன் 6ம் அதிகாரத்தில் கூறியவற்றை 7ம் அதிகாரத்திலுள்ள கூற்று
முரண்படுத்துவதாக உள்ளது.

இம்முரண்பாட்டைச்சுட்டிக் காட்டுபவர்கள் இவ்விரு அதிகாரங்களும் இரு
வேறுபட்ட மரபினரின் குறிப்புகளிலிருந்து பெறப்பட்ட வித்தியாசமான
கதைகள்எனக் கூறுவதோடு பிற்காலத்தில் வெவ்வேறு ஆவணக்
குறிப்புகளிலிருந்தும் ஆதியாகமப் புத்தகத்தை தொகுத்தெழுதியவர்
"அம்முரண்பாட்டைக் கவனிக்கத் தவறியமையால் இருவேறுபட்ட மரபினரதும்
குறிப்புகளையும் ஒன்றாக சேர்த்து எழுதிவிட்டார்" என விளக்குகின்றனர்.

ஆதியாகமம் நால்வகையான வித்தியாசமான மரபினரின் குறிப்புகளில் இருந்து
தொகுக்கப்பட்ட நூல் என்பதே நவீன வேத விமர்சனக் கல்வியின்
தாற்பாரியமாகும்.

எனினும் இது ஆதியாகம்ம் எழுதப்பட்டுள்ள முறைபற்றிய சில வேத
ஆராய்ச்சியாளர்களின் ஒரு ஊகமே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல.

எனவே ஆதியாகமம் 6ம்7ம் அதிகாரங்கள் இருவேறுபட்ட வித்தியாசமான
மரபுக்கதைகளின் பிற்காலச் சேர்க்கை என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.

இரு அதிகாரங்களும் ஒரு சம்பவத்தின்
தொடர்ச்சியாகவே உள்ளன.6ம் அதிகாரத்தில் தேவன் உலகிலுள்ள சகல
உயிரினங்களிலும் ஜலப்பிரளய அழிவுக்குத் தப்புவதற்காக
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்துகின்றார்.
(ஆதி. 6:19-20) நோவா தேவகட்டளைப்படி சகலவற்றையும் செய்து முடித்தபின்
(ஆதி 6:22) தேவன் மறுபடியுமாக நோவாவிற்கு சில அறிவுறுத்தல்களைக்
கொடுக்கிறார்.

ஆரம்பத்தில் சகல உயிரினங்களிலும் ஒவ்வொரு உயிரினங்களிலும் ஒவ்வொரு
சோடியை கொண்டு போகச் சொன்ன தேவன் இப்போது சுத்தமான மிருகங்கள் பறவைகளில்
மட்டும் எவ்வேழு சோடிகளைப் பேழைக்குள்
கொண்டுபோகும்படி அறிவுறுத்துகின்றார்.
(ஆதி. 7.2-3)

"இக்கட்டளையானது 6ம் அதிகாரத்தில்
குறிப்பிடப்படாத மேலதிகமான ஒரு அறிவுறுத்தலாகும்.

"இம்மேலதிக
அறிவுறுத்தலுக்கான காரணம் இவ்விடத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும்
ஜலப்பிரளயத்தின் பின்னால் அதனை அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

ஜலப்பிரளயத்தின் பின் பேழையிலிருந்து வெளியே வந்த நோவா தேவனுக்கு நன்றி
செலுத்துவதற்காக பலி செலுத்தினான். அவன் சுத்தமான மிருகங்கள் பறவைகள்
சிலவற்றைப் பலியாகச் செலுத்தினான் என்பதை ஆதி 8:20 அறியத் தருகின்றது.

இதிலிருந்து பலிகளுக்காகவே தேவன் சுத்தமான மிருகங்கள் பறவைகளில் எவ்வேழு
சோடிகளைப் பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்தியுள்ளார்என்பது
தெளிவாகின்றது.

உண்மையில்,"சுத்தமான உயிரினங்களில் மேலதிகமான மிருகங்கள்
இல்லாமலிருந்தால் பலி செலுத்தப்பட்டபின் அவை இல்லாமல் போயிருக்கும்".
எனவே உயிரினத்தைக் காப்பாற்றுவதற்காகவே ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடியைப்
பேழைக்குள் கொண்டு போகும்படி அறிவுறுத்திய தேவன் நோவாவுக்குப் பலி
செலுத்தும் மிருகங்கள் பறவைகள் அவசியப்படும் என்பதை அறிந்தவராக
சுத்தமானவற்றில் மேலதிக எவ்வேழு சோடிகளைக் கொண்டுபோகும்படி
கட்டளையிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.