எருசலேம் பட்டணத்தின் தென்பாகத்தில் "இன்னோம்" என்று அழைக்கப்படும் ஓர்
பள்ளதாக்கு உண்டு (யோசு 15:8) அந்நிய ஜாதியாரும் சீர்கெட்ட இஸ்ரயேலரும்,
இப்பள்ளத்தாக்கில் தமது பிள்ளைகளை, மோளேகு, பாகால் தேவனுக்கு அக்கினி
தகனம் செய்தார்கள்.
2 இராஜா 23:10;
2நாளா 28:3; 33.6;
எரே. 7:31-32; 19:2-6; 32:35
இதற்கு சங்கார பள்ளத்தாக்கு என்னும் பெயர் உண்டு.
லேவியராகமம் 18:21
நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி
இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான்
கர்த்தர்.
லேவியராகமம் 20:2
பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல்
புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன்
சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலை
செய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.
II இராஜாக்கள் 23:10-11
ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும்
தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற
தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,
11. கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப்
புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறை வீடு மட்டும்
யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி,
சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.
எரேமியா 32:35
அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும்
தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற
பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணுவதற்கு
அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான்
அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை.
ஆமோஸ் 5:26
நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளேகுடைய கூடாரத்தையும், உங்கள்
தேவர்களின் நட்சத்திர ராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும்
சுமந்துகொண்டுவந்தீர்களே.
இரகசிய சமூகம்
27. Baphomet
லேவியராகமம் 16:20-21 அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக்
கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்தபின்பு,
உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
21. அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல்
இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப்
பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு,
அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான
ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
தானியேல் 8:5 நான் அதைக் கவனித்துக் கொண்டிருக்கையில், இதோ,
மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல்
தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே
விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.
இங்கே ஒரு ஆடு குறிப்பிடப்படுகின்றது. இந்த ஆடானது பின்வந்த காலங்களில்
ஒரு சாத்தானுக்குரிய உருவமாக்கப்பட்டு இன்றும் இந்த இரகசியக்
குழுக்களினால் கிறிஸ்துவிற்கு எதிரான சின்னமாக இந்த ஆடு
பயன்படுத்தப்படுகின்றது.