சாத்தான் பல உருவங்களாக ஆதியிலிருந்து வழிபடப்படுகின்றான்.. அந்த
விக்கிரகங்களில் சில இன்னும் இநத இரகசியக் குழுக்களின் கடவுள் உருவமாக
வணங்கப்படுகின்றது.
இவற்றிற்கான சின்னங்கள் இன்றும் இவர்களால் பாவிக்கப்படுகின்றது.
எகிப்திய சாம்ராஜ்யத்தில், அசீரிய சாம்ராஜ்யத்தில், பாபிலோனிய
சாம்ராஜ்யத்தில், மேதியபெர்சிய சாம்ராஜ்யத்தில், கிரேக்க
சாம்ராஜ்யத்தில்,
ரோம சாம்ராஜ்யத்தில் ஒரே அர்த்தம் கொண்ட சாத்தானுக்குரிய உருவச் சிலைகள்
வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வணங்கப்பட்டது.
24 ஒற்றைக் கண்
உலகை ஆண்ட சாம்ராஜ்யங்களில் எகிப்திய சாம்ராஜ்யத்தில் இந்த ஒற்றைக் கண்
தெய்வத்துவமாக கொண்டாடப்பட்டது.
எகிப்தியர்கள் 'ரா' என்ற சூரிய கடவுளை வழிபட்டு வந்தனர்,Eye of Horus
என்பது பழமையான எகிப்து நாகரிகத்தில் இருந்த சின்னங்களில் ஒன்றாகும்.
இந்தக் கண் ஆனது' 'The Eye of Ra''என்றும் அழைக்கப்படுகின்றது.
எகிப்திய ஓவியங்களில் "ஹேரஸ்" ற்கு பருந்துத் தலை. இந்தத் தலையின் மீது
செந்நிறக் கதிரவ வட்டம்.
ஹோரஸ் பருந்தின் தலை கொண்ட மனிதனாகவும் வெறும் பருந்தாகவும் வடிவமைக்கபட்ட கடவுள்.
தான் தந்தையை கொன்ற சேத்தை வெற்றி கொண்டு எகிப்தின் முழுமுதல் அதிபர்
ஆனான் என்றும், அந்த யுத்தத்தில் ஹோரஸின் ஒரு கண் பறிக்கப்பட்டது, அதனை
மீண்டும் பெற்று வெற்றி கொண்டான் ஹோர்ஸ், எனவே ஹோரசின் கண் தனியாக
வழிபடப்படுவதும் உண்டு.
25 கோபுரம்
சாத்தானுக்கு மகிமையாக முதல் கோபுரம் நிம்ரோத் ஆல் கட்டப்பட்டது.
ஆதியாகமம் 10:8-10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான். இவன் பூமியிலே பராக்கிரம
சாலியானான். சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத் கல்னே என்னும்
இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள்.
ஆதியாகமம் 11:1-9 வசனங்களில் பாபேல் கோபுரத்தைப்பற்றிய சம்பவத்தை நாம்
வேதாகமத்தில் வாசிக்கலாம்.
பாபேல் எனும் வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றது
1.தாறுமாறு - குழப்பம்: Babel
2.கடவுளின் வாசல்: Babilan.
ஒரு நாட்டினுடைய அரசியல், ஆட்சி, மற்றும் பொருளாதாரம் அந்த நாட்டின்
கட்டிடங்களில் தெரியும். ஒரு நாட்டினுடைய நகரங்களை வைத்து அந்த நாட்டை
எடை போடுவர்.
இதை தற்காலங்களில் கூட காணலாம். ஒவ்வொரு நாடும் பெரிய, பெரிய
கட்டிடங்களையும், கோபுரங்களையும் கட்ட விரும்புவதை. எவ்வளவு பெரிய
கட்டிடங்களை கட்டுகின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களுடைய அதிகாரமும்,
பலமும் தெரியும்.
அவர்களுடைய நோக்கம் வானத்தை தொடுவாதாக இருந்தது.
பாபேல் பெருமையான நகராகவே இருந்தது, பிற்காலங்களில் பாபிலோனியாவிலே
கட்டப்பட்ட சிகுரத், பாபேல் கோபுரத்தின் அடிப்படையாக இருந்திருக்க
வேண்டுமென்று பலர் கருதுகின்றனர். சிகுரத் ஒரு கோபுரம் அதன் உச்சியிலே
அந்த பட்டணத்தின் கடவுளுக்கென ஒரு கோயில் இருக்கும்.
நிம்ரோத்தினுடைய காலத்திற்கு முன்பே அதாவது ஜலப்பிரளயத்திற்கு முன்பே
ஜனங்களுக்கு தேவனுடைய நாமத்தைப்பற்றிய அறிவு இருந்திருக்கிறது.
ஆதாரம்:
ஆதியாகமம் 4:26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ்
என்று பேரிட்டான். அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள
ஆரம்பித்தார்கள்.
பாபேலில் ஜனங்கள் தேவனை தள்ளி விட்டனர். அவர்கள் சாத்தானை மகிமைப் படுத்தினார்கள்.
இதனை அடிப்படையாகக் கொண்டே பிற்காலங்களில் ஒவ்வொரு மக்கள் கூட்டங்களும்
தங்கள் கடவுள்களுக்கு சாத்தானை மகிமைப்படுத்தி உயர்ந்த கோபுரங்கள்
அமைத்தார்கள்.
எகிப்திலும் கூட பிரமிடுகள் தேவ மகிமைக்காக அல்லாமல் கட்டப்பட்டது.
ஃபாரோக்கள் என்று அழைக்கப்பட்ட எகிப்திய அரசர்கள் ஹோரஸின் மறுவடிவமாகக்
கருதப்பட்டனர்.
ஹோரஸ் வானுலகை ஆள்வதுபோலவே, இந்த அரசர்கள் எகிப்தை ஆண்டனர். கல்லறையுள்
உள்ள அரசர்களை அதாவது கடவுள்களை மறைக்கவும், அதன் செல்வங்களைத்
திருடர்களிடமிருந்து காப்பாற்றவும் பிரமிடுகள் கட்டப்பட்டன.
பிரமிடின் முழுமையைச் சிதைத்து அதன் உள்ளிருக்கும் பொருட்களைத் திருட
முயல்பவர்கள் பெறவிருக்கும் சாபங்களும் அவர்களுக்குக் காத்திருக்கும்
தண்டனைகளும் கல்லறைச் சுவர்களில் மிக விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன.
கல்லறை கட்டி முடிந்தவுடன் அது இருக்கும் இடத்தை ரகசியமாக வைக்கப் பல
உத்திகளைப் பிரமிடு கட்டியவர்கள் கையாண்டிருக்கிறார்கள் என்பது ஆராயச்சி
தகவல்.
இரகசிய சமூகம் 23 சாத்தான் பல உருவங்களாக ஆதியிலிருந்து வழிபடப்படுகின்றான்
0
April 05, 2016
Tags