21. சாத்தான் ஏன் இவர்களின் கடவுள்
சாத்தான் தான் மனிதனது அறிவுக் கண்ணை திறந்தானாம்.
ஆதியாகமம் 3:7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது;
அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து,
தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டு பண்ணினார்கள்.
And the eyes of them both were opened, and they knew that they were
naked; and they sewed fig leaves together, and made themselves aprons.
ஆகவே மனிதனுடைய அறிவுக் கண்ணை சாத்தான் திறந்ததால் சாத்தானின் பிரதான
சின்னம் "ஒற்றைக்
கண்" ஆகும்.
இந்தக் கண்ணிற்கு இவர்களது, இது "all-seeing eye".
ஏசாயா 14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து
விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
சாத்தானுக்கு மூல பாஷையில் லுசிபர் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பெயரை
நம் தமிழ் வேதாகமத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை.
'லூசிபர்' என்ற பெயருக்கு ஒளியைத் தாங்குபவன் என்று பொருள்.
அதனால் தான் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே" என்று சாத்தானை வேதம் சொல்கிறது.
22 சாத்தானுக்காக செயற்படும் இரகசியக் குழுக்கள் தங்களை குறிப்பிட
"666" என்ற எண்ணையே அதிகமாகப் பயன் படுத்துகின்றார்கள்.
666 என்ற எண்ணிற்கு சூரிய இலக்கம் என்றும் கூறுவர். சூரியனை
வணங்குபவர்கள் அமைத்த இந்த சதுரக்கணக்கின் விளக்கத்தை கீழேபாருங்கள்.
அதாவது ஒருசதுரத்தை 6 Rows, 6 Columns ஆக பிரித்தால் 36 சிறிய சதுரங்கள்
வரும். அதில் 1 முதல் 36 வரையுள்ள எண்களை மேற்காணும் படத்தில் உள்ளதுபோல
(படங்களை கட்டுரைக்கு கீழே தருகிறேன் பாருங்கள்) அமைக்க வேண்டும்.
ஒவ்வொரு Row மற்றும் Column வரிசையில் இடம் பெற்றிருக்கும் எண்களின்
கூட்டல் மதிப்பு 111.
அதை சதுரத்தின் மொத்த Row-Column கட்டமைப்பு எண்ணான 6 ஆல் பெருக்கினால்
வருவது 666.
மேலும் 1 முதல் 36 வரையுள்ள எண்களை வரிசையாகக் கூட்டினால் வருவதும் 666.
(1 2 3… 36=666)
இந்த 666 என்ற எண்ணை உலகம் பல விதங்களில் பயன்படுத்துகின்றது.
01. பாப், ராக் மற்று ஜாஸ் இசைக் கச்சேரிகள் மூலம் இந்த எண்ணைப் பிரபலப்
படுத்தப்படுவதைக் காணலாம்.
02. பார்கோடு என்பதற்கு பட்டைக் குறியீடு என்று பெயர். 1948 ஆம் ஆண்டு
அமெரிக்காவின் பெர்னார்டு சில்வர் (Bernard Silver) மற்றும் நோர்மன்
ஜோசப் உட்லேண்ட் (Norman Joseph Woodland) ஆகியோரது முயற்சியால்
கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது நமதூர் சில்லரைக் கடைகளில் கிடைக்கும் அற்பமான தின்பண்டங்கள்
முதல் பல பொருள் அங்காடிகளின் விலையுயர்ந்த பொருட்கள் வரை இந்த பார்கோடு
குறியீட்டின் மூலமே முறை படுத்தப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம்.
இதில் என்ன பரம இரகசியம் என்று நினைக்கிறீர்களா?
பார்கோடுகளில் மேலிருந்து கீழாக அச்சிடப்பட்டிருக்கும் கோடுகளின்
இறுதியில் அதற்கு ஈடான மதிப்பு எழுதப்பட்டிருக்கும்.
பார்கோடு மொழியில் இரட்டைக்கோடு என்பது 6 என்ற எண்ணைக் குறிக்கும்.
உலகில் அச்சிடப்பட்டிருக்கும் சர்வதேச பார்கோடுகள் அனைத்திலும் மூன்று
முறை இந்த இரட்டைக்கோடுகள் வருவதைக் காணலாம். அதாவது6 – 6 - 6.
மேலும் இவ்வாறு மூன்றுமுறை அச்சிடப்பட்டிருக்கும் 6 என்ற எண்ணுக்குரிய
கோடுகளில் அதன் மதிப்பெண்ணான 6 இடம்பெற்றிருக்காது.
இன்னும் அந்த மூன்று இரட்டைக்கோடுகளும் மற்ற கோடுகளின் அளவைவிட சற்று
நீளமாக இருப்பதைக் காணலாம்
உலகின் அனைத்துப் பொருட்களிலும் அச்சிடப்பட்டிருக்கும் இந்த
பார்கோடுகளின் வாயிலாக 666 என்ற எண் மறைமுகமாக பிரபலப்படுத்தப் படுகிறது
03. சீக்கிரத்தில் மனிதனின் நடமாட்டத்தை கண்காணிக்க அவன் வலது கையில் ஒரு
சிலிகன்சிப்பை (Verichipஅல்லது xmark) பொருத்த போகின்றார்கள். (இன்று பல
நாடுகளில் இந்த பணி தொடங்கி விட்டது) இந்தசிப் இரு அரிசி அளவே இருக்கும்.
அந்த சிப்பிலுள்ள 16 டிஜிட் எண் வழி அவன் கணிணியால் கண்காணிக்கப் படுவான்
(இன்றும் அனைத்து சோசியல் நெட்வொர் ல் நடப்பதை இரகசியமாக கண்கானித்து
வருவதாக சொல்லப்படுகிறது) அடையாளம் காணப்படுவான்.
இதை radio-frequency identification (RFID) என்கின்றார்கள்.
இச்சிப்களை தயாரிக்கும் Verichip எனும் நிறுவனம் சமீபத்தில் இந்த
நுட்பத்தின் பெயரை xmark என மாற்றியது.
காலம் சமீபமாயிருக்கிறது.
வெளி 13:16,17,18 அதுசிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர்,
சுயாதீனர்,
அடிமைகள்,
இவர்கள் யாவரும் தங்கள்தங்கள் வலது கைகளிலாவது நெற்றிகளிலாவது
ஒருமுத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது
அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்
கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாத படிக்கும்
செய்தது.
இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன்
கணக்குப் பார்க்கக்கடவன்;
அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது;
அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.
Revelation:13:16-18
And he causeth all, both small and great, rich and poor, free and
bond, to receivea mark in their right hand,or in their foreheads: And
that no man might buy or sell, save he that had the mark, or the name
of the beast, or the number of his name. Here is wisdom. Let him that
hath understanding reckon the number of the beast: for it is the
number of a man; and his number is Six hundred and sixty six.
இரகசிய சமூகம் 21. சாத்தான் ஏன் இவர்களின் கடவுள் சாத்தான் தான் மனிதனது அறிவுக் கண்ணை திறந்தானாம்.
0
April 05, 2016
Tags