பாபிலோனிய வல்லரசுக்குப்பிறகு மேதியப்பெர்சிய வல்லரசு எழும்பும். நீ
தராசிலேநிறுத்துக் குறையக் காணப்பட்டாய், உன்னுடைய ராஜ்யம்
மேதியப்பெர்சிய வல்லரசுக்குக் கொடுக்கப்படும் என்று இராத்திரியிலே
தானியேல் தீர்க்கதரிசனத்தை உரைக்க,
நீங்கள் 30ம், 31ம் வசனத்தைக் கவனிப்பீர்களென்றால்,
'அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார்
கொலைசெய்யப்பட்டான்.மேதியனாகிய தரியு தன் 62ம் வயதில் ராஜ்யத்தைக்
கட்டிக்கொண்டான்' என்று பார்க்கலாம்.
வெள்ளியினாலான சிலையின் மார்பு புயங்களுக்கு ஏற்ப மேதியபெர்சிய வல்லரசு
உலகத்தை ஆள ஆரம்பிக்கிறது.
சிலையினுடைய வயிறும் தொடையும் வெண்கலத்தால் ஆனது என்று பார்க்கிறோம்.
மேதியபெர்சிய வல்லரசுக்குப்பிறகு எழும்பப் போகிற அதை விட வலிமைகுறைந்த
அடுத்த சாம்ராஜ்யம் எது?
அது கிரேக்க சாம்ராஜ்யம் என தானியேல் முன்னறிவித்திருக்கிறான். அதன்படியே
மேதியபெர்சிய வல்லரசுக்குப்பின் கிரேக்க சாம்ராஜ்யம் உலகத்திலே
எழும்புகிறது.
கிரேக்க சாம்ராஜ்யத்தின் முதலாவது ராஜாவாகிய மகா அலெக்சாண்டரைக் குறித்து
அநேகர் சரித்திர வகுப்புகளிலே பார்த்திருப்போம்.
இந்த அலெக்சாண்டரைக் குறித்தும் கிரேக்க சாம்ராஜ்யத்தைக் குறித்தும்
தானியேல் தீர்க்கதரிசி தனது புஸ்தகத்தின் 8ம் அதிகாரத்திலே தரிசனம்
உரைத்திருக்கிறார்.
இந்தத்தரிசனத்தில் அவன் இரண்டு ஆடுகளைப் பார்த்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு வெள்ளாட்டுக் கடாவுக்கு ஒரே ஒருகொம்பு இருக்கிறது.
இன்னொரு ஆட்டுக்கடாவுக்கு இரண்டு கொம்பு இருக்கிறது. இரண்டும்
ஒன்றையொன்று எதிர்த்து நிற்கின்றன,
சண்டையிடுகின்றன,
அப்பொழுது ஒருகொம்புள்ள வெள்ளாட்டுக்கடா இரண்டுகொம்புள்ள
வெள்ளாட்டுக்கடாவைத்தோற்கடித்து மிதித்துப் போட்டதாய் தானியேல்
காணுகிறான்.
தரிசனத்தின் விளக்கம் புரியாததால் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கிறான்.
காபிரியேல் தேவதூதன் வந்து தரிசனத்தை விளக்குகிறான்,
'தானியேலே! இந்த ஒரு கொம்புள்ள வெள்ளாட்டுக் கடா கிரேக்க தேசத்தின் ராஜா
இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா இரண்டு வல்லரசைக் கொண்ட மேதியப் பெர்சிய வல்லரசு.
இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடாவை ஒரு கொம்புள்ள வெள்ளாட்டுக்கடா மிதித்துப்
போட்டது என்றால் மேதியப்பெர்சிய வல்லரசை கிரேக்க வல்லரசு அழித்து
தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவும்' இதை காபிரியேல் தானியேலுக்கு
வெளிப்படுத்தினான்.
அதாவது மேதியப்பெர்சிய வல்லரசை அழித்து கிரேக்கவல்லரசு உலகத்திலே
எழும்பும் என்று தானியேலுக்கு முன்னறிவிக்கப்பட்டது.
அப்படியே கிரேக்க சாம்ராஜ்யத்தின் ராஜாவாக மக்கடோனியாவிலிருந்து உலகம்
எல்லாவற்றையும் ஒரே குடையின் கீழ் ஆள வேண்டுமென்று புறப்பட்டான்,
மகாஅலெக்சாண்டர்.
இந்த மகா அலெக்சாண்டரைத் தான் ஒரு கொம்புள்ள வெள்ளாட்டுக்கடாவாகதானியேல் கண்டான்.
எனவே அலெக்சாண்டரைக் குறித்து பரிசுத்த வேதாகமத்திலே முன்னறிவிக்கப்
பட்டிருக்கிறது.
இந்தச் சரித்திர சான்றுகளைக் குறித்து இன்னும் திடமாய் அறிந்துகொள்ள
விரும்புகிறவர்களுக்குஇன்னொரு காரியத்தை நான் உங்களுடைய விசுவாசம்
உறுதிப்படுவதற்காய், பரிசுத்த வேதாகமத்தின் மேலான உறுதித் தன்மையை
நிரூபிப்பதற்காய் குறிப்பிட விரும்புகிறேன்.
சரித்திர வகுப்புக்களிலே நாம் படித்த மகா அலெக்சாண்டரைக் குறித்து
வேதாகமம் தெரிவித்திருக்கிற தென்றால், பரிசுத்த வேதாகமத்தில்
அலெக்சாண்டரைக் குறித்து முன் அறிவிக்கப் பட்டிருக்கிறது
அலெக்சாண்டருக்குத்தெரிய வந்திருக்குமா என்ற கேள்வி எழலாம்,
இதோ அதற்கான ஒருசரித்திர சம்பவம்.
தொடரும்.....
———————————
Glory to JESUS - 8012978922
———————————
