உலகத்தை எத்தனை வல்லரசுகள் ஆளவேண்டுமென்று தேவன் தீர்மானித்து வைத்தாரோ
அத்தனை வல்லரசுகளும்ஆண்டுமுடித்தும் ஆண்டு கொண்டிருக்கிற
காலத்துக்குள்ளாய் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தானியேல் 2ம் அதிகாரத்தின் அடிப்படையில் பாபிலோனிய தேசத்தின்
ராஜாவாயிருந்தவன் நேபுகாத்நேச்சா.
இவன் ஒருசொப்பனத்தைக் காணுகிறான் .இந்தச் சொப்பனத்தையும் அதன்
அர்த்தத்தையும் விளக்கிச்சொல்ல பாபிலோனிய ஞானிகளால் முடியவில்லை,
அப்பொழுது எபிரேய தீர்க்கதரிசியான தானியேல் மன்னன் முன் நிறுத்தப்படுகிறான்.
தானியேல், மன்னனைப் பார்த்து ராஜாவே உமது சொப்பனத்தில் நீர்ஒரு பெரிய
சிலையைக் கண்டீர்.
அது மிகுந்த பிரகாசமுள்ளதாய் இருந்தது,
அதன் ரூபம் பயங்கரமாயிருந்தது,
அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும்,
அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும்,
அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,
அதின் கால்கள் இரும்பும்,
அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாய் இருந்தது.
தானியேல் தொடர்ந்து,
'நீர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே,கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்
பெயர்ந்து உருண்டு வந்து அது அந்தச்சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதன்
பாதங்களிலே அதனுடைய விரல்களிலே மோதி அந்தச் சிலையை நொறுக்கிப்போட்டது.
சிலை தூள்தூளானது. சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி
பூமியையெல்லாம் நிரப்பிற்று'.
பரிசுத்த ஆவியானவராலே, நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தையும், மேலும்
அதற்கான விளக்கத்தையும் தானியேல் கூறுகிறார்:
'நேபுகாத்நேச்சாரே! நீர்கண்ட சிலையின் தலை பசும்பொன்னாய் இருந்தது. அது
உமது சாம்ராஜ்யமாகிய பாபிலோனிய சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது.
அந்தச் சிலையின் மார்பும், புயங்களும் வெள்ளியினால் இருப்பது உம்முடைய
சாம்ராஜ்யத்துக்குப் பிறகு "உலகத்திலே" எழும்பப்போகிற அடுத்ததான வலிமை
குறைந்த ஒரு சாம்ராஜ்யத்தைக் குறிக்கிறது.
இவ்வாறு பாபிலோனிய வல்லரசுக்குப் பிறகு இன்னொரு சாம்ராஜ்யம்
வலிமைகுறைந்ததாய் சரித்திரத்திலே எழும்பும்,
உலகத்திலே எழும்பும் என்று தானியேல் தெரிவிக்கிறான்.
தானியேலினால் முன்னறிவிக்கப் பட்டபடியே பாபிலோனிய வல்லரசுக்குப் பிறகு
மேதியப் பெர்சியவ ல்லரசு உலகத்தில் எழும்பினது.
மேதியப்பெர்சிய வல்லரசு உலகத்திலே எழும்பினதா?
இதைக் குறித்த சம்பவம் தானி5:28 – 31ல் சொல்லப்பட்டிருக்கிறது.
பாபிலோனிய வல்லரசின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் மகன் பெல்ஷாத்சார் ஒரு
நாள் இரவு தனது மறு மனையாட்டிகளுடன் விருந்துபண்ணி, பிரபுக்களையெல்லாம்
அழைத்து எருசலேம் தேவாலயத்திலிருந்து எடுத்து வந்த பாத்திரங்களிலே
மதுபானம் அருந்திச் சுகித்துக் கொண்டிருக்கிறான்.
இவ்வாறு இவர்கள் குடித்துவெறித்து இருக்கும்போது திடீரென்று ஒரு
கையுறுப்புத் தோன்றி ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று.
'மெனே, மெனே தெக்கேல், உப்பார்சின்' என்று.
அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான் .அப்பொழுது ராஜாவின் முகம்வேறுபடுகிறது.
அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணி அவனுக்குப் பயம் ஏற்படுகிறது.
அவனுடைய இடுப்பின் கட்டுக்கள் தளர்ந்துவிடுகிறது.
அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்கின்றன,பயந்துபோகிறான்.
இந்த வார்த்தையின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பியதால் தானியேல்
தீர்க்கதரிசி பெல்ஷாத்சார் முன்னே கொண்டுவந்து நிறுத்தப்படுகிறான்.
தானியேல் வார்த்தைகளை விளக்குகிறான்.
மெனே என்பதற்கு தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும்,
தெக்கேல் என்பதற்கு நீ தராசிலே நிறுக்கப்பட்டு
குறையக்காணப்பட்டாய்என்றும் தெரிவிக்கிறான்.
மேலும் 28ம் வசனத்திலே தானியேல் கூறுவதைக் கவனியுங்கள்,
'பெரேஸ் என்பதற்கு உம் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும்
பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்று அர்த்தமாம்'.
