வேதாகம புத்தகங்கள் ஒரு கண்ணோட்டம்
எண்ணாகமம்
பெயர்:-
இந்த பத்தகம் "வனாந்தரத்தில்" என்று பொருள் கொண்ட "மித்பார்" என்ற எபிரெய
மொழி சொல்லால் அழைக்கப்பட்டது.
நோக்கம்:-
இஸ்ரவேலர் எகித்திலிருந்து வெளியேறிய பின்னர் சீனாய் மலையிலும்
வனாந்தரத்திலும் 40 ஆண்டுகள் இருந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்காக
எழுதப்பட்டது. காணான் தேசத்தை கைப்பற்ற ஆயத்தம் செய்ததையும்
அவிசுவாசத்தால் வாய்ப்பை இழந்து 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்ததையும்
கூறுகிறதஇஸ்ரவேலர் எகித்திலிருந்து வெளியேறிய பின்னர் சீனாய் மலையிலும்
வனாந்தரத்திலும் 40 ஆண்டுகள் இருந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்காக
எழுதப்பட்டது. காணான் தேசத்தை கைப்பற்ற ஆயத்தம் செய்ததையும்
அவிசுவாசத்தால் வாய்ப்பை இழந்து 40 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்ததையும்
கூறுகிறது.
ஆசிரியார்:-மோசே
காலம்:-ஆதியாகமம் எழுதப்பட்ட காலமே.
திறவுகோள் வசனதிறவுகோள் வசனங்கள்:-
நீங்கள் தேசத்தை சுற்றி பார்த்த நாற்பது நாள் இலக்கத்தின்படியே ஒவ்வொரு
நாள் ஒவ்வொரு வருஷமாக. நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களை
சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள் (14:34* நீங்கள்
தேசத்தை சுற்றி பார்த்த நாற்பது நாள் இலக்கத்தின்படியே ஒவ்வொரு நாள்
ஒவ்வொரு வருஷமாக. நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களை சுமந்து,
என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள் (14:34).
கர்த்தருடைய கை குருகியிருக்கிறதோ? (11:23).
புத்தகத்தின் சிறப்பு:-
உலக வரலாற்றின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதன் முதலில் இந்த
புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வனாந்திர பயனங்களின் குறிப்புகள்
இந்த புத்தகத்தில் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் நிழலும் நிறைவும்:-
நசரேய விருதமிருப்போர் (6:2) பரிசுத்தரும் பழுதற்ற தன்மையும் கொண்ட
கிறிஸ்துவின் முன் அடையாளமானவர்.
ஆரோன் கோள் துளிர்த்தது (17:8) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நிழலானது.
சிவப்பான கிடாரியின் சாம்பல் கலந்த நீர் தெளிக்கப்படுதல் (19:2-19) செத்த
கிரியைகளற மனசாட்சியை சுத்தம் செய்யும் கிறிஸ்துவின் இரத்தத்திற்கு முன்
அடையாளம்.(எபி9:* சிவப்பான கிடாரியின் சாம்பல் கலந்த நீர்
தெளிக்கப்படுதல் (19:2-19) செத்த கிரியைகளற மனசாட்சியை சுத்தம் செய்யும்
கிறிஸ்துவின் இரத்தத்திற்கு முன் அடையாளம்.(எபி9:13-14)
உயர்த்தப்பட்ட வென்கல சர்பம் (21:5-9) சிலுவையில் உயர்த்தப்பட்ட
கிறிஸ்துவிற்க்கு முன் அடையாளம் (யோவா3:14-15)
அடைக்கல பட்டனங்கள் (35:6) ஆக்கினை தீர்ப்பிலிருந்து பாதுகாக்கும்
கிறிஸ்துவிற்க்கு முன் அடையாளம் (ரோமர்8:1,33,34)
புத்தகத்தின் அளவு:-
அதிகாரங்கள்: 36; வசனங்கள்: 1288
உப்பிரிவுகள்:-
1).1:1-2:34 போர் வீரர் தொகையீடு
2).3:1-4:49 ஆலய பணியாளர் தொக
3).3:1-4:49 ஆலய பணியாளர் தொகையீடு
4).5:1-10:10 சீனாயிலிருந்து பயணத்திற்கான அறிவுரைகள்
5).10:11-25:18 எகிப்திலிருந்து வந்த முதிய தலைமுறையினரின் புரட்சியும் தண்டனையும்
6).26:1-36:13 புதிய தலைமுறையினரின் ஆயத்தங்கள்
