திரித்துவம் பாகம் 1

வேதத்திலுள்ள
உபதேசங்களில், பலரால் பல கோணங்களில் பேசப்படும் திரித்துவ கொள்கையை
வேதத்தின் அடிப்படையில் காண்போம்.

தேவத்துவம்:-

வேதத்தில் தேவனை குறிக்கும் மிகவும் முக்கியமான எபிரெய சொற்க்கள்
"ஏலோஹீம்", "யேகோவா" என்பவையாகும். ஆங்கிலத்தில் "ஆடு" என்பதற்க்கு
பயன்படுத்த படும் "Sheep" என்ற ஒருமை சொல்லின் பன்மையும் "Sheep" என்பது
போன்று ஏலோஹீம், யேகோவா என்பன ஒருமையாகவும் பன்மையாகவும்
பயன்படுத்தப்பட்டுள்ளன.

எ.கா. ஆதி 1:1

"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்"

மேலே உள்ள இந்தவசம் "தேவன்" (ஏலோஹீம்) என்று பண்மையில் ஆரம்பித்து
"சிருஷ்டித்தார்" என்று ஒருமையில் முடிகிறது. எபிரெய வேதத்தில் இந்த
வசனம் உள்ளபடி தமிழில் எழுதுகிறேன் கவனியுங்கள்.

"ஆதியிலே ஏலோஹீம் (தேவர்கள்) வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்"

ஆதி 3:22 இல் தேவனாகிய கர்த்தர் (ஏலோஹீம், யெகோவா) "இதோ, மனுஷன் நண்மை
தீமை அறியதக்கவனாய் நம்மில் ஒருவரை போல ஆனான்" என்று கூறியதிலிருந்து
இச்சொற்கள் பண்மை என்பதை நாம் அறிவோம். மேலும் "நம்மில் ஒருவரை போல்"
என்று கூறியுள்ளதால் தேவத்துவத்தில் ஒன்றிற்க்கு மேற்ப்பட்டவர்கள்
இருப்பது சந்தேகமின்றி நிறுவப்படுகிறது.

வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே
தேவனோடிருந்தார் (யோவா 1:1-2) என்ற வசனங்களும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட
தேவனை குறிக்கிறது.

எபி 1:9 லிலும் தேவன் என்று இருநபர்கள் கூறப்பட்டுள்ளனர். மேலும்
கர்த்தர் (யேகோவா) என்று இரு நபர்களை குறிப்பிட்டிருப்பதை (ஆதி 19:24)
லிலும் (சக 3:2) லும் காண்கிறோம். பன்மையாக இருக்கும் தேவனை "தேவத்துவம்"
என்றும் வேதம் குறிப்பிடுகிறது (ரோம 1:20; கொலோ 2:9).

பிதா, குமாரன், ஆவியானவர் மூவரும் தேவன், மூவரும் கர்த்தர்:-

தேவத்துவத்தில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்ற மூன்று தனித்தனி
நபர்கள் இருப்பதை (லூக் 1:35; 3:32; யோவா 1:33-34; 14:6,26; 2கொரி 13:14;
எபே 4:3-6) என்ற பகுதிகளில் இருந்து அறிந்துக் கொள்கிறோம்.

(ரோம 1:3; பிலி 2:11) போன்ற பல வேத வசனங்கள் பிதாவை தேவன் என்று அழைக்கின்றன.

(ஏசா 9:6-7; யோவா 1:1-2; 20:28; அப் 20:28; ரோம 9:5; தீத் 2:13; எபி
1:8-9; 1யோவா 5:20) என்ற வேத பகுதிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை
தேவன் என்று கூறுகின்றன.

(அப் 5:3-4) வசனங்கள் பரிசுத்த ஆவியானவரை தேவன் என்று
அழைக்கப்பட்டுள்ளார். எனவே பிதா, குமாரன், ஆவியானவர் ஆகிய மூவரும்
தனித்தனியே "தேவன்" என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

பிதாவை கர்த்தர் என்று சங் 110:1 போன்ற பல இடங்கள் குறிப்பிடுகின்றன.

பழைய ஏற்பாடு இயேசுவை யேகோவா (கர்த்தர்) என்று அழைக்கிறது (ஏசா 40:3; எரே
23:5-6; 33:15-16). கிறிஸ்துவை கர்த்தர் என்று புதிய ஏற்பாட்டில் பல
இடங்களில் கூறப்பட்டிருப்பது நாம் அறிந்ததே.

பரிசுத்த ஆவியானவரும் கர்த்தர் என்று அழைக்கப்படுவதை 2கொரி 3:17
கூறுகிறது. எனவே இம்மூவரும் கர்த்தர் என்பது தெளிவு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.