ஊழியர்களுக்கான அடிப்படை தகுதிகள்- 1

மேய்ப்பர், போதகர், மற்றும் மூப்பர்களுக்கான அடிப்படை தகுதிகள்:-

ஜனங்கள் மீது அன்பு செலுத்துபவனாக காணப்பட வேண்டும்
இப்படி இருக்க வேண்டும்
இப்படி இருக்ககூடாது
நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக்
கொடுக்கிறான்.யோவான் 10 : 11

கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக
அவன் கவலைப்படான்.யோவான் 10 : 1

ஜனங்கள் உங்களை போதகரே என்று அழைப்பதை நீங்கள் விரும்பவும்,
எதிர்பார்க்கவும் கூடாது.

(Rev, Bishop, Dr, Appostel..... ect.) யாராவது கேட்டால் நீங்கள் போதக
ஊழியம் செய்கின்றீர்கள் என்று சொல்லலாம், ஆனால் மற்றவர்கள் உங்களை
போதகரே என்று அழைப்பதை நீங்கள் விருபம்புவீர்களாக இருந்தால்தான் அது தவறு

சந்தைவெளிகளில் வந்தனங்களையும்,மனுஷரால் ரபீ, ரபீ என்று
அழைக்கப்படுவதையும்விரும்புகிறார்கள்:நீங்களோ ரபீ
என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப்
போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே
ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற
ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.

நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே
உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.மத்தேயு 23 : 7-10

உங்களையல்ல இயேசுவை உயர்த்துங்கள்!
இன்றைக்கு பலர் இயேசுவைவிட தங்களையே மகிமைப்படுத்துகின்றனர்.
ஊழிங்களுக்கு தங்களுடைய பெயரை அல்லது தங்களது பிள்ளைகளின் பெயரை
வைக்கின்றனர். (தேவன் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கின்றார்).

அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில்
ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர்
ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.

யோவான் பிரதியுத்தரமாக:

மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய
சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும்
சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.யோவான் 3: 26 - 30

மற்றவர்கள் உங்களை காண வேண்டும், பாராட்ட வேண்டும், உங்களைப்பற்றி
பெருமையாக பேச வேண்டும் என்று காரியங்கள் செய்யக்கூடாது!

மிக மிக முக்கியம். உன்னுடைய வாழ்நாள் முழுவதும் இப்படியொரு ஊhழியத்தையே
செய்துவந்தால், அந்த ஊழியத்துக்கு பயன் இல்லை!

1. மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச்
செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற
உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

2. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர்
ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே;
அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.

3. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன்
வலது கை செய்கிறது உன் இடது கை அறியாதிருக்கக்கடவது;

4. அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு
வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.

5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்;
மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும்
நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து
தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன்
கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு;
அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப்
பலனளிப்பார்.

7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்
வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம்
கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.மத்தேயு6 : 1 - 7

தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள்
காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப்
பெரிதாக்கி,

விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும்,

சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று
அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்:மத்தேயு 23:5- 7, மாற்கு12 : 38 -
40

நீ எதை போதிக்கின்றாயோ, அதை நீயே செய்ய வேண்டும்.

இன்றைய சபைகளில் இதுதான் மிகப்பெரிய பிரச்சனை. போதிப்பவனுக்கும்
வேதாகமத்துக்கும் சம்பந்தமே இருக்காது !

வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற
யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ
செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும்
செய்யாதிருக்கிறார்கள்.மத்தேயு23:2 - 3

தாழ்மை இல்லையேல் ஊழியம் இல்லை!

ஊழியம் என்பது .. இதுதான் அதன் முதற்படி.

ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால்,
நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.

நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு
மாதிரியைக் காண்பித்தேன்.யோவான்13 : 14, 15

உன்னை நீயே சோதி: உண்மையுள்ளவனா ? முகதாட்சண்யம் பார்க்காதவனா?

பொய்யர் அனைவரும் நரகத்திலே தள்ளப்படுவர்.

அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும்
உமக்குக் கவையில்லை (அக்கறையில்லை) என்றும் அறிந்திருக்கிறோம், நீர்
முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப்
போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம்
கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.மாற்கு12 : 14

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.