மேய்ப்பர், போதகர், மற்றும் மூப்பர்களுக்கான அடிப்படை தகுதிகள்:-
இயேசுவின் சீடர்கள்:
*.கிறிஸ்துவினால் போதிக்கப்பட்டிருந்தார்கள்
*.கிறிஸ்துவினால் பயிற்றுவிக்கப்பட்டார்கள்
ஊழியம் செய்ய முன்பு வேதாகமத்தை நன்றாக கற்றிருத்தல் அவசியம். தனியாக
கற்கின்ற அந்த ஞானம் இல்லாவிட்டால் ATLEAST ஒரு வேதாக கலாசாலையிலேயாவது
சென்று கற்றல் அவசியம். (கமாலியேலுடைய பாதத்திலிருந்து கற்ற சவுலினால் -
இயேசு யார் என்று அறிய முடியவில்லையே! அதனால் கிறிஸ்தவத்தை சரியாக
புரிந்து கொள்வதற்கு பரத்திலிருந்து வருகின்ற ஞானம் மிகவும் அவசியம்.)
தனிமையில் அதிகமாக ஜெபிக்க வேண்டும்.
*.அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான
ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.மாற்கு 1: 35
*.அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.லூக்கா 5: 16
*.இயேசு கிறிஸ்து ஜெபித்தார்(இந்த அதிகாரம் முழுவதும் வாசிப்பது நல்லது)யோவான் : 17
(மற்றவர்கள் காணும்படியாக அல்ல தனிமையில் ஜெபிக்க வேண்டும். சில
பிசாசுகள் உபவாசத்தினால் தான் விரட்டமுடியும் ! இல்லாவிட்டால் பிசாசு
உங்களை விரட்டும்).
சகலதும் இலவசம். இது ஆதாயம் தருவிக்கும் தொழில் அல்ல !
வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச்
சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத்
துரத்துங்கள்;இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்மத்தேயு 10 : 8
(கிறிஸ்துவின் சுவிசேஷம் மாத்திரமல்ல கிறிஸ்து தரும் அற்புதங்களும்
இலவசமே ! இன்றைக்கு அனேக ஊழியர்கள் இதனை புரிந்து கொள்ளாமல் இது ஒரு
சம்பாத்தியம் பண்ணும் தொழிலாக நினைத்துகொண்டு செயற்படுகின்றனர்).
அழைத்த அழைப்பை சரியாக உணர வேண்டும். எல்லா காரியங்களிலும் மூக்கை நுழைக்ககூடாது!
1. அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள்
விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று,
எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
2.அப்பொழுது பன்னிருவரும் சீஷர்கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவ
வசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
3. ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி
பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த
வேலைக்காக ஏற்படுத்துவோம்.
4.நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும்
இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.அப்போஸ்தலர்6 : 1 - 4
பந்தி விசாரணை செய்வதற்கே மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் தேவையெனில்
- மேய்ப்பர், போதகர் ஊழியங்களுக்கு ????? நீங்களே உங்களை நிர்ணயித்து
கொள்ளுங்கள்.
