வெளிப்படுத்தின விஷேசத்தின் 11ம் அதிகாரத்தின் 3ம் வசனத்தைக்
கவனிப்பீர்கள் என்றால், அந்திக்கிறிஸ்து இந்த உலகத்தை ஆண்டு
கொண்டிருக்கும் போது இரண்டு தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள் என்று யோவான்
முன்னறிவித் திருக்கின்றார்.
இவர்கள் எத்தனை நாட்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்?
1260 நாட்களுக்குத் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்.
1260 நாட்கள் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் அது எத்தனை வருடம் என்பதை
தெளிவாய்க் காணலாம்.
1260 நாட்கள் என்பது 3½ வருடங்களைக் குறிப்பதாகும்.
அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலமாகிய 7 வருடத்தின் பாதிக் காலத்திலே
இவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
எபிரேய முறைப்படி ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள், ஒரு மாதத்திற்கு 30 நாட்கள்.
ஆகவே ஒரு வருடத்திற்கு 360 நாட்கள்தான்.
இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் 1260 நாட்கள் தீர்க்கதரிசனம்
சொல்லுவார்கள் என்று வெளிப்படுத்தின விஷேசத்திலே யோவான்
தெரிவித்திருக்கிறார்.
இவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லும் நோக்கம் என்ன?
அதற்கு என்ன காரணம்?
உலகத்திலுள்ள உண்மையான ஊழியக்காரர்க ளெல்லாம் தேவனுடைய பிள்ளைகள்
எல்லாம், உலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டிருப்பதினாலே இந்த
இரண்டு தீர்க்கதரிசிகள் உலகமக்களுக்கு எச்சரிப்பின் சத்தத்தைக்
கொடுப்பார்கள்.
அப்படி இவர்கள் சத்தத்தைக் கொடுக்கும்போது என்னென்னவெல்லாம் நடக்கும்
என்பதை 5ம் வசனத்திலே யோவான் தெரிவிப்பதை கவனியுங்கள்.