இந்த அந்திக் கிறிஸ்துவின் நாட்கள் எத்தனை வருடமாய் இருக்கும் என்பதற்கான
ஒரேயொரு குறிப்பை மாத்திரம் பார்ப்போம்,
தானியேல் தீர்க்கதரிசன புஸ்தகம் 9ம் அதிகாரம் 27ம் வசனத்தில் 'அவர் ஒரு
வாரமளவும் அனேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி....' என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலே பெரிய இரகசியங்களைத் தானியேலுக்கு ஆண்டவர் வெளிப்
படுத்தியிருக்கிறார். ஆனால் இந்த இடத்திலே நான் எடுக்கவிரும்புகிற
ஒரேயொரு குறிப்பு 'அவர்' என்பது ஆண்டவரைக் குறிக்கவில்லை அந்திக்
கிறிஸ்துவைக் குறிப்பதாகும் (என்பதே) இது, தமிழிலே மரியாதைப் பன்மையிலே
சொல்லப்பட்டிருக்கிறது அவன் ஒருவாரமளவும் அனேகருக்கு உடன்படிக்கையை
ஏற்படுத்துவானாம்,
யார் அவன்?
அந்திக்கிறிஸ்து வரும்போது அனேகருக்கு அவன் உடன்படிக்கையை ஏற்படுத்துவானாம்.
நன்றாய்க் கவனித்துக் கொள்ளுங்கள், உலகத்தின் கடைசி சர்வாதிகாரியான
அந்திக்கிறிஸ்து வரும்போது அவன் ஒரு கொடு முகத்தோடும் கொடூர தோற்றத்
தோடும் வரப்போவதில்லை.
அந்திக்கிறிஸ்து இந்த உலகத்திற்கு வரும்போது பொய்ச் சமாதானத்தை வாக்குப்
பண்ணுகிறவனாய் வரப்போகிறான்.
சமாதானத்தை வாக்குப் பண்ணுகிறவனாய் வருகிறவனை உலகம் ஏற்றுக்கொள்ளும்.
அந்திக்கிறிஸ்து உலகத்தை ஏமாற்றுகிறவனாய் வருவான். எனவே அவன் கொடூர
முகத்தோடு வரப்போகிறதில்லை; அவன் ஒரு தேவனைப்போல வருவான். அவன் வரும்போது
ஒரு வாரத்தக்கு உடன்படிக்கை செய்வான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு வாரம் என்ற பதத்திற்கு மூலபாஷையிலே பயன்படுத்தப் பட்டிருக்கிற
வார்த்தை 'ஷாபுவா' என்பதாகும்.
எபிரேய மொழியிலே 'ஷாபுவா' என்ற பதத்திற்கு வாரம் என்றும் அர்த்தம் ஏழு
என்றும் அர்த்தம்.
எனவேதான் தமிழிலே மொழிபெயர்க்கும்போது அதை வாரம் என்று மொழிபெயர்த்
திருக்கிறார்கள். அதாவது அந்திக்கிறிஸ்து வரும்போது ஏழுவருட
உடன்படிக்கையைச் செய்வானாம்.
அந்திக்கிறிஸ்து இந்த உலகத்தை ஆளவரும் பொழுது அவன் செய்யப்போகிற ஏழுவருட
உடன்படிக்கையை இது தெரிவிக்கிறது.
எனவே அந்திக் கிறிஸ்துவினுடைய ஆட்சிக்காலம் 7 வருடமாய் இருக்கும் என்று
தானியேல் தீர்க்க தரிசனத்திலிருந்து அறிகிறோம்.
இந்த அந்திக்கிறிஸ்து உலகத்தை ஆளுவதற்கு முன்னதாய் சபையை ஆண்டவரகிய
இயேசுகிறிஸ்து தம்முடைய இரகசிய வருகையிலே எடுத்துக் கொள்வார் என்று நான்
உங்ளுக்குத் தெரிவிக்கிறேன்.
இந்த அந்திக்கிறிஸ்துவின் நாட்களிலே நடைபெறப்போகிற காரியங்கள் என்ன?
இந்த அந்திக்கிறிஸ்துவின் காலத்திலே அவன் கொண்டுவரப்போகிற சட்டங்கள் என்ன?
இதைக் குறித்து வெளிப்படுத்தின விஷேசத்திலே யோவான் தெரிவிக்கின்றார்.
அந்தக் காரியங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டனவா?
அதற்கு எல்லாம் முன்னோடியாக அமைந்துவிட்டனவா என்பதற்கு ஆதாரச் சான்றுகளை
நான் உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறேன்.
