ஏழிலிருந்து எட்டாவதானவன் பாகம் - 12

என் அன்பு சகோதரனே, சகோதரியே! 7 வல்லரசுகள் எழும்ப வேண்டுமென்று
வேதத்தின் தீர்க்கதரிசனத்தின்படி, 7 வல்லரசுகள் உலகத்தில் எழும்பி
விட்டன.

அசீரியர் ஆண்டாகிவிட்டது;

எகிப்தியர் ஆண்டாகிவிட்டது;

பாபிலோனியர் ஆண்டாகிவிட்டது;

மேதிய பெர்சியர் ஆண்டாகிவிட்டது;

கிரேக்கர் ஆண்டாகிவிட்டது

ரோமர் ஆண்டாகிவிட்டது;

ஏழாவது வல்லரசு எழும்பிவிட்டது.

ஏழிலிருந்து எட்டாவதானவனாகிய அந்திக்கிறிஸ்து எழும்பப்போகிறான்.

இந்த ஏழாவது வல்லரசின் தலைமைக் கட்டிடம் பெல்ஜியத்திலுள்ள பிறஷலஸ் இலே
வைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னேன்.

இந்தத் தலைமையகக் கட்டிடம் ஒரு பெரிய கட்டிடமாய் அமைக்கப்
பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தை வானத்திலிருந்து – விமானத்திலிருந்த
புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இந்த ஏழிலிருந்துதான் எட்டாமவனாகிய
அந்திக்கிறிஸ்து எழும்ப வேண்டுமென்பது தீர்க்கதரிசன ஆராய்ச்சியாளர்களின்
கணக்கு.

இந்தக் கட்டிடத்தைப் புகைப்படம் எடுத்துப் பார்த்தபோது அந்தக் கட்டிடம்
கவிழ்த்த வைக்கப்பட்ட சிலுவையின் வடிவத்திலே இருக்கிறது.

கிறிஸ்துவுக்கு எதிராய் எழும்புகிறவன் அந்திக்கிறிஸ்து.

அந்திக்கிறிஸ்து இதிலிருந்து எழும்புவான் என்று தீர்க்கதரிசன
ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்ப்பதற்கு இன்னொரு சான்றைச் சொல்கிறேன்.

பெல்ஜியத்திலுள்ள ஏழாவது வல்லரசின் தலைமையகக் கட்டடத்திலே 3 அடுக்குமாடி
உயரமுள்ள ஒரு பெரிய கம்பியூட்டர் வைக்கப்பட்டிருக்கிறது.

அந்தக் கம்பியூட்டர் உலகமெங்குமுள்ள 5 பில்லியன் மக்களின் தகவல்களையும்
கணக்கிடும் ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கிறது.

இந்தக் கம்பியூட்டருடைய பெயர் Beast என்று அழைக்கப்படுகிறது.

அந்திக்கிறிஸ்துவை மிருகம் என்று வேதம் சொல்லுவதை அறிவீர்கள். இந்தக்
கம்யூட்டருக்கு மிருகம் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

பல தீர்க்கதரிசன ஆராய்ச்சியாளர்கள் ஏழிலிருந்து எட்டாவதானவன்
எழும்புவதந்கு இவைகளெல்லாம் ஆதாரமாயிருக்கின்றன என்று தீர்மானித்
திருக்கிறார்கள்.

காலம் சமீபமாயிற்று, காலம் நிறைவேறிற்று, இனிக்காலம் செல்லாது

அந்திக் கிறிஸ்துவினுடைய ஆட்சிக் காலத்திலே நடைபெறப்போகிற காரியங்களுக்கு
இந்த உலகம் பொருளாதார ரீதியிலும், விஞ்ஞான ரீதியிலும் எப்படி ஆயத்தமாகி
யிருக்கிறது என்பதற்கான செய்திகளை இனி நான் உங்கள் மத்தியிலே பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.