ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வாறு தெரிவிக்கிறார்,
இரண்டு பேர் வயலிலே அறுப்பு அறுத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருவன்
எடுத்துக்கொள்ளப் படுவான், ஒருவன் கைவிடப்படுவான்;
வயலில் அறுப்பு எப்போது அறுக்கப்படும்?
பகல் நேரத்திலே செய்யப்படுகிற வேலை ஒரு தேசத்துக்குப் பகல் நேரமாய்
இருக்கும் போது இயேசு கிறிஸ்துவினுடைய இரகசிய வருகை சம்பவிக்கும்.
மேலும், இயேசுகிறிஸ்து தெரிவிக்கிறார்
இரண்டு ஸ்திரீகள் யந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள் ஒருத்தி
எடுத்துக் கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
யந்திரம் அரைப்பது எந்த நேரத்தில் செய்யப்படுகிற செயல்?
மத்தியான நேரத்தில் செய்யப் படுகிற செயல்; ஒரு தேசத்தக்கு மத்தியான
நேரமாயிருக்கும்போது இயேசுக் கிறிஸ்துவினுடைய இரகசிய வருகை சம்பவிக்கும்
கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கிறவர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்;
மற்றவர்கள் கைவிடப்படுவார்கள்.
மூன்றாவதாய் இயேசுகிறிஸ்து சொல்கிறார் ஒரு படுக்கையிலே ஒரே
இராத்திரியிலே, படுத்திருக்கிற இரண்டு பேரில் ஒருவன் எடுத்துக்
கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
உறங்குதல் எந்த நேரத்தில் செய்யப்படுகிறது?
இரவு நேரத்திலே செய்யப்படுகிறது.
யார் ஒரே படுக்கையில் படுத்திருப்பார்கள்?
கணவனும், மனைவியும் ஒரே படுக்கையிலே படுத்திருப்பார்கள்,
பெற்றோரும் பிள்ளைகளும் ஒரே படுக்கையில் படுத்திருப்பார்கள்.
கணவனும் மனைவியும் ஒரே படுக்கையில் படுத்திருக்க கணவன்
இரட்சிக்கப் பட்டவனாயிருந்ததால் கணவன் எடுத்துக் கொள்ளப்படுவான், மனைவி
கைவிடப்படுவாள்.
மனைவி இரட்சிக்கப் பட்டவளாயிருந்ததால், மனைவி எடுத்துக் கொள்ளப்படுவாள்
கணவன் கைவிடப்படுவான்.
பெற்றோர் இரட்சிக்கப் பட்டவர்களாயிருந்தால், பெற்றோர்கள் எடுத்துக்
கொள்ளப்படுவார்கள் பிள்ளைகள் கைவிடப்படுவார்கள்.
பிள்ளைகள் இரட்சிக்கப் பட்டவர்களாயிருந்தால், பிள்ளைகள் எடுத்துக்
கொள்ளப்படுவார்கள் பெற்றோர்கள் கைவிடப்படுவார்கள்.
ஒரே படுக்கையிலே ஒரே குடும்பத்திலே பிரிவினை ஏற்படும்.
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரகசிய வருகை சம்பவிக்கும்போது
குடும்பங்களிலே பிரிவினை ஏற்படுவதினால் உலகமெங்கும் பெரிய கலகம்
ஏற்படும்.
உலகமெங்கிலும் பரிசுத்தவான்கள் காணப்படாமற் போவார்கள். உலகமெங்கிலும் பல
தேவனுடைய பிள்ளைகள் காணப்படாமற் போவார்கள்.
சபை கூடி வருதல் அந்த நாட்களிலே இருக்கமுடியாது. தேவனுடைய
ஊழியக்காரர்கள், கூட்டங்களை ஒழுங்கு செய்கிறவர்கள், கிறிஸ்துவுக்குள்
ஜீவிக்கிறவர்கள் எல்லோரும் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
அந்த நாளிலே உலகம் தவிக்கும். அந்த நேரத்திலே உலகத்திற்கு ஒரு பெரிய
விடுதலை அழிப்பவனாய் ஒரு பெரிய மனிதத் தலைவன் போலத் தோற்றமளித்து ஒரு
பொய் மேசியாவாக அந்திக் கிறிஸ்து வெளிப்படுவான்.
உலகம் அவனைத் தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொள்ளும். (நான் என் பிதாவின்
நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை, வேறொருவன்
தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக் கொள்வீர்கள் - யோவான் 5:43)
இதிலிருந்து உபத்திரவக்காலம் உலகத்திற்கு ஆரம்பிக்கும்.
பாகம் 12 விரைவில்....
